ஷோரூம்களில் ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்... டெலிவிரி எப்போது துவங்குகிறது...?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது சமீபத்திய 160சிசி நாக்டு மோட்டார்சைக்கிளான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை இந்தியாவில் வெவ்வேறு விதமான டீலர்ஷிப் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியினை துவங்கியுள்ளது. இதுகுறித்து ஜிக்வீல்ஸ் செய்தி தளம் வெளியிட்டுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம். 

ஷோரூம்களில் ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்... டெலிவிரி எப்போது துவங்குகிறது...?

ஹீரோ நிறுவனம் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் சுசுகி ஜிக்ஸெர் போன்ற 160சிசி பிரிவில் உள்ள மற்ற பைக் மாடல்களை காட்டிலும் மலிவான மோட்டார்சைக்கிளாக கடந்த ஜூன் மாத இறுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது.

ஷோரூம்களில் ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்... டெலிவிரி எப்போது துவங்குகிறது...?

ரூ.99,950-ஐ ஆரம்ப விலையாக பெற்றுள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிஸ்க் வேரியண்ட் அதிகப்பட்சமாக ரூ.1,03,500 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 2019 ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்த 1.ஆர் கான்செப்ட்டின் அடிப்படையில் இந்த பைக்கை ஹீரோ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஷோரூம்களில் ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்... டெலிவிரி எப்போது துவங்குகிறது...?

பிரிவில் உள்ள மற்ற 160சிசி பைக்குகளின் அம்சங்களை எந்தவொரு குறைவுமின்றி அப்படியே பெற்றுள்ள இந்த புதிய ஹீரோ பைக்கில் கவனிக்கத்தக்க அம்சங்களாக எல்இடி விளக்குகள் மற்றும் டிஜிட்டல் கன்சோல் உள்ளன.

ஷோரூம்களில் ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்... டெலிவிரி எப்போது துவங்குகிறது...?

மேலும் இதன் ஸ்டைலிங் பேனல்கள் மற்ற பைக்குகளில் இருந்து எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை உயர்த்தி காட்டுகின்றன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த பைக்கில் 163.சிசி சிங்கிள்-சிலிண்டர் ஃப்யூல்-இன்ஜெக்டட் 2-வால்வு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஷோரூம்களில் ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்... டெலிவிரி எப்போது துவங்குகிறது...?

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 15.23 பிஎச்பி மற்றும் 14 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. விலை மட்டுமில்லாமல் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கை காட்டிலும் இதன் எடை 11 கிலோ குறைவாக 138 கிலோ என்ற அளவில் உள்ளது.

ஷோரூம்களில் ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்... டெலிவிரி எப்போது துவங்குகிறது...?

இதன் வேரியண்ட்கள் பைக்கின் பின்சக்கரத்தில் வழங்கப்படும் ட்ரம் மற்றும் டிஸ்க் ப்ரேக்குகள் மூலமாகவே வேறுபடுகின்றன. விலையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்குடன் ஒப்பிடுகையில் யமஹா எஃப்இசட்-எஃப்ஐ வி3 பைக் மாடல் மட்டுமே குறைவான எக்ஸ்ஷோரூம் விலையை கொண்டுள்ளது.

ஷோரூம்களில் ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்... டெலிவிரி எப்போது துவங்குகிறது...?

வெறும் ரூ.250 மட்டுமே விலை குறைவாக உள்ள யமஹாவின் இந்த பைக் மாடல் செயல்திறனில் ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் இருந்து மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஹீரோவின் இந்த புதிய பைக் டீலர்ஷிப்களை சென்றைடைந்து வருவதால் இதன் டெலிவிரி பணிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Hero Xtreme 160R Arrives At Outlets Pan-India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X