என்எஸ்200, யமஹா எஃப்இசட் பைக்குகளை கதிகலங்க வைக்க வருகிறது ஹோண்டாவின் புதிய 200சிசி பைக்...

ஹோண்டா நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள சிபி ஹார்னெட் 200ஆர் பைக்கின் சில டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

என்எஸ்200, யமஹா எஃப்இசட் பைக்குகளை கதிகலங்க வைக்க வருகிறது ஹோண்டாவின் புதிய 200சிசி பைக்...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதன் 150- 200சிசி பைக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஹோண்டா யூனிகார்ன் மிக பெரிய அளவில் மக்களிடையே பிரபலமானது.

என்எஸ்200, யமஹா எஃப்இசட் பைக்குகளை கதிகலங்க வைக்க வருகிறது ஹோண்டாவின் புதிய 200சிசி பைக்...

ஆனால் அதன்பின் அதுபோன்ற ஒரு மேஜிக் கம்பீரமான தோற்றம் மற்றும் மாடர்ன் தொழிற்நுட்பங்களை கொண்ட மற்ற எந்த ஹோண்டா பைக்கிலும் நிகழவில்லை. இதனால் தான் ஹோண்டா நிறுவனம் மெதுவாக 160சிசி- 200சிசி பைக்குகள் பிரிவிற்கு நகர்ந்து வருகிறது.

என்எஸ்200, யமஹா எஃப்இசட் பைக்குகளை கதிகலங்க வைக்க வருகிறது ஹோண்டாவின் புதிய 200சிசி பைக்...

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோண்டா சிபி ஹார்னெட் 200ஆர்-ன் டீசர் படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த படங்களில் பைக்கின் இந்திய அறிமுகம் ஆகஸ்ட் 27 என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

என்எஸ்200, யமஹா எஃப்இசட் பைக்குகளை கதிகலங்க வைக்க வருகிறது ஹோண்டாவின் புதிய 200சிசி பைக்...

ஆனால் மற்றப்படி பைக்கை பற்றிய வேறெந்த விபரத்தையும் அவை வெளிப்படுத்தவில்லை. இந்த படங்களில் பைக்கில் தங்க நிறத்திலான தலைக்கீழான முன் ஃபோர்க்குகள் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளது.

என்எஸ்200, யமஹா எஃப்இசட் பைக்குகளை கதிகலங்க வைக்க வருகிறது ஹோண்டாவின் புதிய 200சிசி பைக்...

இதனுடன் பைக்கில் ஒரு-பக்க ஹெட்லேம்ப், இரட்டை நிறத்தில் முன்புற ஃபெண்டர், பெட்ரோல் டேங்கில் இக்னிஷன் ஸ்விட்ச் மற்றும் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

என்எஸ்200, யமஹா எஃப்இசட் பைக்குகளை கதிகலங்க வைக்க வருகிறது ஹோண்டாவின் புதிய 200சிசி பைக்...

தற்சமயம் விற்பனையில் இருக்கும் சிபி ஹார்னெட் 160ஆர்-ன் பரிணாம வளர்ச்சியாக வெளிவரும் சிபி ஹார்னெட் 200ஆர்-ல் ஹெட்லேம்ப் எல்இடி தரத்தில் வழங்கப்படவுள்ளன. அதேபோல் பைக்கின் பெட்ரோல் டேங்கின் வடிவம் மற்றும் அதன் நீட்டிப்புகள் உள்ளிட்டவையும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

என்எஸ்200, யமஹா எஃப்இசட் பைக்குகளை கதிகலங்க வைக்க வருகிறது ஹோண்டாவின் புதிய 200சிசி பைக்...

இவை தவிர்த்து பைக்கை பற்றிய வேறெந்த விபரமும் தெரியப்படவில்லை. இன்றைய அறிமுகத்திற்கு பிறகு அவை வெளியிடப்படலாம். ஆனால் எப்படியிருந்தாலும் புதிய சிபி 200ஆர் பைக்கில் சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என்பது உறுதி.

என்எஸ்200, யமஹா எஃப்இசட் பைக்குகளை கதிகலங்க வைக்க வருகிறது ஹோண்டாவின் புதிய 200சிசி பைக்...

புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக எலக்ட்ரானிக் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் யூனிட் உடன் வழங்கப்படும் இந்த பிஎஸ்6 என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷனிற்கு இணைக்கப்பட்டிருக்கலாம். 160ஆர் பைக்கில் உள்ள பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக 15 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

என்எஸ்200, யமஹா எஃப்இசட் பைக்குகளை கதிகலங்க வைக்க வருகிறது ஹோண்டாவின் புதிய 200சிசி பைக்...

இதனால் இந்த 200சிசி பைக்கின் அதிகப்பட்ச ஆற்றலாக 20 பிஎச்பி-ஐ எதிர்பார்க்கலாம். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர், பஜாஜ் பல்சர் என்எஸ்200, சுசுகி ஜிக்ஸெர் 250, யமஹா எஃப்இசட்25 உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டா சிபி ஹார்னெட் 200ஆர் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Honda CB Hornet 200R Teased Again – Reveals New Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X