மஹிந்திரா மோஜோ பிஎஸ்6 பைக்கின் விலை விபரங்கள் வெளியானது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...?
அறிமுகத்திற்கு முன்னதாக மஹிந்திரா மோஜோ பிஎஸ்6 பைக்கின் சில டீசர் படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
மஹிந்திரா க்ரூப்பின் டூவீலர்ஸ் ப்ராண்ட் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட மோஜோ பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இதன் அறிமுகம் இந்த மாதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் வெவ்வேறான நிறங்களில் இந்த பைக்கின் டீசர் படங்கள் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றின்படி பார்க்கும்போது ரெட் அகேட் (சிவப்பு + வெள்ளை ட்யூல்-டோன்), ப்ளாக் பேர்ல் (முழுவதும் கருப்பு), ரப்பி ரெட் (சிவப்பு + கருப்பு ட்யூல்-டோன்) மற்றும் கார்னெட் ப்ளாக் (கருப்பு உடன் சிவப்பு ஃப்ரேம்) என்ற நான்கு நிறத்தேர்வுகளை பிஎஸ்6 மோஜோ பைக் பெற்றுள்ளது.

இதில் ரெட் அகேட்டை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களிலும் பைக் கருப்பு சக்கரங்களை ஏற்றுள்ளது. அதேபோல் இந்த நிறத்தேர்வில் ரெட் அகேட் ஷேட் ஹெட்கௌல் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்த தோற்ற அளவில் பார்த்தோமேயானால் இந்த பிஎஸ்6 பைக் அதன் ஒரிஜினல் வெர்சனை (எக்ஸ்டி300) போல் ட்யூல் எக்ஸாஸ்ட்கள் மற்றும் யுஎஸ்டி ஃபோர்க்குகளை பெறவில்லை.

ஏனெனில் 2020 மோஜோ பைக் அதன் யுடி300 வேரியண்ட்டின் அப்டேட் வெர்சனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கில் கவனிக்கத்தக்க அம்சங்களாக இரட்டை-ஹெட்லேம்ப், ட்யூல்-சேனல் ஏபிஎஸ், 21-லிட்டர் பெட்ரோல் (பிரிவில் மற்ற பைக்குகளில் உள்ளதை காட்டிலும் பெரியது), செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 320மிமீ பெடல் டிஸ்க் ப்ரேக் (பின் சக்கரத்தில் 240மிமீ-ல் பெடல் இல்லை), எல்இடி டெயில்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

என்ஜின் பிஎஸ்6 அப்டேட்டினால் பிஎஸ்4 வெர்சனில் இருந்து சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் 294.72சிசி லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 26.6 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் 2020 மோஜோ பைக்கில் வெளிப்படுத்தவுள்ளது.

இதே என்ஜின் தான் வெவ்வேறு விதமான வடிவங்களில் ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 42, ஜாவா மற்றும் பெராக் பைக் மாடல்களிலும் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. (ஸ்லிப்பர் க்ளட்ச் இல்லை). பிஎஸ்6 அப்டேட்டால் பைக்கின் எரிபொருள் திறன் 10 சதவீதம் மேம்பட்டுள்ளது.

எக்ஸ்ஷோரூமில் ரூ.1.99 லட்சம் என்ற ஆரம்ப விலையுடன் பிஎஸ்6 மோஜோ 300 பைக் விற்பனையை துவங்கவுள்ளது. இது ப்ளாக் பேர்ல் நிறத்தில் இந்த பைக்கின் விலையாகும். அதுவே கார்னெட் ப்ளாக்கில் பைக்கின் விலை ரூ.2.06 லட்சமாகவும், ரப்பி ரெட் & ரெட் அகேட் நிறங்களில் ரூ.2.11 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் பஜாஜின் டோமினார் 400 பைக்கிற்கு முக்கிய போட்டியாளராக விளங்கவுள்ள பிஎஸ்6 மோஜோ பைக்கிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே ரூ.5 ஆயிரம் என்ற முன்தொகையுடன் நடைபெற்று வருகின்றன. இதனால் வரும் வாரங்களில் இந்த பைக்கின் டெலிவிரி பணிகள் துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








