இந்த ஜூன் மாதத்திற்குள் வெளிவருகிறதா மஹிந்திரா மோஜோ பிஎஸ்6 பைக்..? இம்முறையாவது இந்தியர்களை கவருமா..
பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட புதிய மோஜோ மாடலை இந்த மாதத்திற்கு உள்ளாக அறிமுகப்படுத்தவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பைக் அட்வைஸ் செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா நிறுவனம் முதன்முதலாக கடந்த 2015ல் மோஜோ மாடலை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த பைக் மாடலுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்காவிட்டாலும் அறிமுகமான புதியதில் மோஜோவிற்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

குறிப்பாக இதன் இரட்டை-ஹெட்லேம்ப் சிலரை கவர்ந்தது என்றால், எக்ஸாஸ்ட் சிலருக்கு பிடித்து போனது. இவற்றுடன் பைக் வழங்கிய சவுகரியமான ரைடிங் மற்றும் பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவை மோஜோ மாடலில் கவனிக்கத்தக்க அம்சங்களாக விளங்கின.

இருப்பினும் இந்த பைக்கிற்கு இந்திய சந்தையில் வரவேற்பு கிடைக்காமல் போனதற்கு சில காரணங்கள் உள்ளன. மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து மோஜோ வரிசையில் கடைசியாக மோஜோ 300 ஏபிஎஸ் கடந்த ஆண்டில் அறிமுகமானது.

மோஜோ யுடி300 மற்றும் எக்ஸ்டி300 மாடலுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த ஏபிஎஸ் வெர்சன் பைக்கிற்கு வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காமல் போனது. இந்த நிலையில் தான் பிஎஸ்6 மோஜோ 300 ஏபிஎஸ் மாடல் இந்த மாத இறுதிக்குள்ளாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மஹிந்திரா மோஜோ நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கில் இருந்து இவ்வாறான பதில் வந்துள்ளது. இதனால் பைக் இந்த மாதத்தில் அறிமுகமாகாவிட்டாலும், பைக்கின் அறிமுகம் உறுதியான தகவலாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம் குறித்த தகவல்கள் தவிர்த்து இந்த பிஎஸ்6 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இருப்பினும் மோஜாவில் வழங்கப்பட்டு வருகின்ற 295சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பிஎஸ்6 தரத்தில் அதிகப்பட்சமாக 26.30 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கலாம்.


Click it and Unblock the Notifications








