பைக்குகளுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே டயர மாத்திடுவீங்க...

பஞ்சரானாலும் தானே பஞ்சரை சீர் செய்துகொள்ளுகின்ற வகையிலான டயரை சியாட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

டூ வீலர்களுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே பைக் டயர மாத்திடுவீங்க!

வாகனங்களுக்கான டயர்களைத் தயாரித்து வரும் சியாட் நிறுவனம், இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கான புதிய டயர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது பஞ்சர் பாதுகாப்பான டயர் என கூறப்படுகின்றது.

அதாவது, இந்த டயர் பஞ்சரானாலும் விரைவில் காற்றை வெளியேற விடாமல் தக்க வைத்துக் கொள்ளும் திறனைக் கொண்டிருக்கின்றது.

டூ வீலர்களுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே பைக் டயர மாத்திடுவீங்க!

பெரும்பாலான வாகன ஓட்டிகளின் கவலைக்குரிய விஷயமாக வாகனங்களின் திடீர் பஞ்சர் விவகாரம் இருக்கின்றது. அவசர அவசரமாகச் சென்றுக் கொண்டிருக்கும்போதுதான் பஞ்சராவது, காற்றில்லாமல் இருப்பது போன்ற தலைவலிகள் எல்லாம் உருவாகும். இதனால் வேலைக் கெட்டுப்போவதுடன், நிர்வாகத்திலும் அவ பெயர் உருவாகும்.

டூ வீலர்களுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே பைக் டயர மாத்திடுவீங்க!

இந்த சூழலைத் தவிர்க்கும் விதமாகவே பஞ்சரானாலும் எளிதில் காற்றை வெளியேற்றாத திறனுடன் புதிய டயரை சியாட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது.

'பஞ்சர் சேஃப்' எனும் பெயரில் இந்த டயர் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அதேசமயம், நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தற்போது இது விற்பனைக்கு கிடைக்கின்றது.

டூ வீலர்களுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே பைக் டயர மாத்திடுவீங்க!

இதன்படி, தமிழகத்தில் கோவை மற்றும் சேலத்திலும், கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் கேரளாவின் அநேக இடங்களில் மட்டுமே தற்போது சியாட்டின் புது முக டயர் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

தற்போகு விற்பனைக்கு கிடைக்கும் இந்த டயரும் ட்யூப் இல்லா டயர் வகையைச் சார்ந்ததே ஆகும். இதில், புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

டூ வீலர்களுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே பைக் டயர மாத்திடுவீங்க!

காற்றிழப்பு, அதிக காற்றழுத்தத்தால் உருவாகும் பிரச்னை மற்றும் பஞ்சராகிய பின்னர் ஏற்படும் உடனடி காற்றிழுப்பு உள்ளிட்டவற்றிற்கு அதுவே தற்காலிக தீர்வு காணும்.

பொதுவாக தற்போது பயன்பாட்டில் இருக்கும் டயர்கள் பஞ்சரான சிறிது நேரத்திலேயே காற்று முழுவதுமாக வெளியே செல்ல அனுமதிக்கும்.

டூ வீலர்களுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே பைக் டயர மாத்திடுவீங்க!

சியாட்டின் இந்த புதிய டயர், ஆணி அல்லது கூர்மையான பொருள் தாக்கிய பின்னரும் காற்றை வெளியேறிவிடாமல் தடுக்கும். அந்த கூரிய பொருளை பிடிங்கி வீசினாலும் டயரில் காற்று நீடித்த வண்ணமே இருக்கும். ஆகையால், ஆணியை பிடிங்கிய உடன் பஞ்சர் கடையை நோக்கி ஓட வேண்டும் என்ற அவசியம் இருக்காது. அத்துடன் தேவைப்பட்டால் மட்டுமே பஞ்சர் கடையில் சீர் செய்துக்கொள்ளலாம். ஆனால் இதற்கான வேலையே இருக்காது என்கின்றது சியாட்.

டூ வீலர்களுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே பைக் டயர மாத்திடுவீங்க!

இந்த தனித்துவமான டயர்குறித்து சியாட் டயர்ஸ் நிறுவனத்தின் முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரியான அமித் டோலானி கூறியதாவது, "எங்கள் நோக்கம் 'பயணம் பாதுகாப்பானதாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும்' என்பதாகும்" என்றார்.

டூ வீலர்களுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே பைக் டயர மாத்திடுவீங்க!

தொடர்ந்து பேசிய அவர், "நுகர்வோரின் நேரத்தையும், சக்தியையும் மிச்சப்படுத்தும் நோக்கில், எந்தவொரு இரு சக்கர வாகனத்திற்கும் பயன்படுத்தும் வகையில் புதிய பாதுகாப்பான பஞ்சராக டயர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன" என கூறினார்.

டூ வீலர்களுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே பைக் டயர மாத்திடுவீங்க!

இந்த புதிய டயரில் தானாக இணைத்துக் கொள்ளும் தன்மை இருக்கின்றது. இதுவே பஞ்சரானாலும் காற்றை வெளேயேற விடாமல் தடுக்கும் எனவும் அவர் கூறினார்.

மேலும், இந்த புதிய டயர் நிச்சயம் மக்களைக் கவர்ந்திழுக்கும் என நம்பிக்கைத் தெரிவித்த அவர், "நவீன சிக்கல்களுக்கு, நவீன தீர்வுகள் தேவை. அதைதான் புதிய சியாட் வழங்கியுள்ளோம்" என பெருமிதம் சேர்த்தார்.

டூ வீலர்களுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே பைக் டயர மாத்திடுவீங்க!

பஞ்சர் சேஃப் டயர்களை சியாட் நிறுவனம் உள் நாட்டிலேயே வைத்து தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இதனை சீலேண்ட் நிறுவனத்திடம் இருந்து காப்புரிமைப் பெற்றே அந்நிறுவனம் தயாரித்து வருகின்றது. இவை, தானாகவே தன்னை பஞ்சரில் இருந்து மீளமைத்துக் கொள்ளும். எனவேதான் சியாட் நிறுவனம் இந்த டயர்மீது அசைக்க முடியா நம்பிக்கையை வைத்திருக்கின்றது.

டூ வீலர்களுக்கான புதிய சியாட் டயர் அறிமுகம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா உடனே பைக் டயர மாத்திடுவீங்க!

இந்த டயரில் முத்திரைக் குத்த பயன்படுத்தப்படும் மெழுகு போன்ற திரம் சேர்க்கப்படுகின்றது. இதுதான் டயரை பஞ்சரில் காப்பாற்றுகின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், டயரில் கூரிய பொருட்களால் ஓட்டை ஏற்பட்டாலும் அதை அந்த திரவங்கள் அடைத்துவிடுகின்றது. இதுவே இந்த டயரில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக உள்ளது.

Most Read Articles
English summary
CEAT Launches Self-Healing Tyres For Two Wheeler. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X