புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு டயர்களை சப்ளை செய்யப்போவது யார் தெரியுமா?
புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு, சியட் நிறுவனம் டயர்களை சப்ளை செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக், நேற்று (நவம்பர் 6ம் தேதி) விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பைக்கிற்கு டயர்களை சப்ளை செய்ய உள்ளதாக டயர் உற்பத்தி நிறுவனமான சியட் அறிவித்துள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக், ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் இந்த மூன்று வேரியண்ட்களுக்கும், சியட் நிறுவனம்தான் அதிகாரப்பூர்வ டயர் சப்ளையராக இருக்க போகிறது. சியட் நிறுவனம் தனது ஜூம் ப்ளஸ் (Zoom Plus) ரேஞ்ச் ட்யூப்லெஸ் டயர்களை, மீட்டியோர் 350 பைக்கிற்கு சியட் வழங்கவுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

சியட் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் புகழ்பெற்ற ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் ரெட்ரோ மோட்டார்சைக்கிள்களில், சியட் நிறுவனத்தின் டயர்கள் பொருத்தப்படுவது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக புல்லட் கிளாசிக் 350, புல்லட் ஸ்டாண்டர்டு/எலக்ட்ரா, கிளாசிக் 500 மற்றும் ஹிமாலயன் உள்ளிட்ட மாடல்களுக்கு டயர்களை சப்ளை செய்ததன் மூலம் கடந்த காலங்களில் ஏற்கனவே ராயல் என்பீல்டு நிறுவனத்துடன் சியட் தொடர்பு கொண்டிருந்தது. இந்த வரிசையில் தற்போது மீட்டியோர் 350 பைக்கிற்கும் டயர்களை சப்ளை செய்யவுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா ஆகிய மூன்று வேரியண்ட்களில், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் கிடைக்கும். இந்த மூன்று வேரியண்ட்களிலுமே அலாய் வீல்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள்தான் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் தொலை தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

இந்த பைக்கின் ஃபயர்பால் வேரியண்ட்டின் விலை 1.75 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஸ்டெல்லர் வேரியண்ட்டின் விலை 1.81 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூப்பர்நோவா வேரியண்ட்டின் விலை 1.90 லட்ச ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் புத்தம் புதிய இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த 349 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 20.2 ஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சந்தைக்கு வந்துள்ள ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை எப்படி இருக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








