பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பெண்களைக் கவரும் விதமாக பதிய தயாரிப்புகளை விற்பனைக்குக் களமிறக்கியுள்ளது. அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதற்கு ஆண், பெண் என இரு பால் ரசிகர்களும் ஏராளம். இவர்களை மேலும் கவரும் விதமான முயற்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

இதனடிப்படையில் மெல்லிய தேகம் மற்றும் எடைக்குறைந்த பைக்குகளைத் தயாரிக்க இருப்பதாக அது கடந்த சில மாதங்களுக்கு அறிவித்திருந்தது. இந்நிலையில், பெண்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரைடிங் கியர் மற்றும் ஆடைப் போன்றவற்றை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

அதில், ரைடிங் ஜாக்கெட்டுகள், டிரவுசர்கள், குளோவ்ஸ், ஹெல்மெட், டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் உள்ளிட்டவை அடங்கும். இவையனைத்தும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மற்றும் இணையதளம் வாயிலாக விற்பனைக்கு வந்துள்ளன. அதாவது, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த பிரத்யேக ரைடிங் கியர்களை store.royalenfield.com என்ற இணையதளம் வாயிலாக அல்லது டெல்லி, பெங்களூர், அஹமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள ஆஃப் லைன் ஷோரூம்களில் இருந்தும் பெற முடியும்.

பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு ஆண் ரசிகர்களைப் போலவே பெண் ரசிகப் பட்டாளம் வெகு நாட்களாகவே இருந்து வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட அந்நிறுவனம் அவர்களை கவரும் விதமாக இதுமாதிரியான தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இவை ரூ. 700 தொடங்கி ரூ. 14 ஆயிரம் வரையிலான விலையைக் கொண்டதாக இருக்கின்றது.

பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

இதில் பல தயாரிப்புகள் இந்தியாவின் கால சீதோஷ்னை நிலையைப் பொருத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வெயில் மற்றும் குளிர் ஆகிய இரு முக்கியமான கால நிலையில் ரைடர்களுக்கு எந்தவித அசௌகரியமான உணர்வையும் ஏற்படுத்தாத வகையிலான கிளாத்கள் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது உயர் ரக காட்டன் மற்றும் சம்மருக்கான உகந்த மெட்டீரியல்கள் அதில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

இந்த ரைடிங் கியர்கள் பெண் ரைடர்களின் சவாரி அனுபவத்தை மேம்படுத்தும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனவே, இதன் அறிமுகத்தை டிஜிட்டல் சந்த வாயிலாக #DeedsNorWords என்ற ஹேஸ்டேக்கில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரைடிங் கியரில் மிக அதிக விலைக் கொண்டதாக ரைடிங் ஜாக்கெட் உள்ளது. இதன் விலை ரூ. 14 ஆயிரம் ஆகும். அப்படி என்னங்க இருக்கு இதுல இவ்ளோ விலையிருக்கு என நீங்கள் கேட்கலாம். ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இந்த ஜாக்கெட்டை மூன்று லேயர்களைக் கொண்டு உருவாக்கியுள்ளது. இதை எம்மாதிரியான காலநிலையிலும் நீங்கள் பயன்படுத்தலாம். அதாவது, மழை, வெயில், குளிர் என அனைத்து காலைநிலையிலும் பயன்படுத்த முடியும்.

பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

இதற்கடுத்தபடியாக சம்மர் மெஷ் ஜாக்கெட் உள்ளது. இதன் விலை ரூ. 7 ஆயிரம் ஆகும். காட்டன் ரைடிங் ஜாக்கெட் உள்ளது. இதோடை விலை ரூ. 5,800 ஆகும். தொடர்ந்து, சம்மருக்கு ஏதுவான டிரவுசர் ரூ. 6,500 லும், அனைத்து கால நிலைக்கும் உகந்த டிரவுசரின் விலை ரூ. 9,500 என்ற விலையிலும் விற்கப்பட உள்ளது.

பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

மற்றவற்றை பட்டியலாக கீழே பார்க்கலாம்:

லெதர் ஜாக்கெட் ரூ. 9,900 முதல் ரூ. 10,900 வரை.

சாதாரண கையுறை ரூ. 2,500.

லெதர் கையுறை ரூ. 3,300.

முழு முக ஹெல்மெட் ரூ. 3,700 - அரைமுக ஹெல்மெட் ரூ. 2,700.

டி-சர்ட் ரூ. 700 - ரூ. 1,100.

சட்டைகள் ரூ. 2,300 முதல் ரூ. 2,500 வரை.

ஷார்ட்ஸ் ரூ. 1,500 முதல் ரூ. 1,600 வரை.

ஜீன்ஸ் மற்றும் கால்சட்டைகள் ரூ. 2,400 முதல் ரூ. 2,600 வரை.

பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து இப்போதுதான் அதன் விற்பனையைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்தை வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவரும் வகையில் இந்த பெண்களுக்கான இந்த புதிய தயாரிப்புகளை அது அறிமுகப்படுத்தியுள்ளது.

பெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா? ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை!

தற்போது இந்தியாவில் இருக்கும் 90 சதவீத டீலர்கள் ஷோரூம்கள் நாடு முழுவதும் இயக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றில் முன்பெப்போதும் இல்லாத வகையில் அதிக பாதுகாப்பு வழிமுறைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது, சமூக இடைவெளி, கிருமி நாசினி போன்றவற்றுடன் அவர்கள் மீண்டும் விற்பனைக்கு களமிறங்கியிருக்கின்றனர்.

Most Read Articles

English summary
Chennai Based Motorcycle Firm Royal Enfield Revealed Riding Gears For Women. Read In Tamil.
Story first published: Monday, June 22, 2020, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X