Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 8 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் தீவிரம் காட்டிய போலீஸ்காரர்கள்... அப்படி என்ன தேடினாங்கனு தெரியுமா?
அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களைக் களையெடுப்பதற்காக போலீஸார் புதிய யுக்தியைக் கையாளத் தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக இரும்பு கரம் நீட்டும் விதமாக கேரளா மோட்டார் வாகனத்துறை அண்மைக் காலங்களாக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், அண்மையில் சமூக வலைதளத்தின் வாயிலாக எழுந்த புகாரின் அடிப்படையில், கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு உச்சபட்ச அபராதத்தை அது வழங்கியது.

அதுமட்டுமின்றி, வாகனத்தையும் பறிமுதல் செய்தது. அந்த வாகனம் மிக கடுமையாக மாடிஃபை செய்யப்பட்டிருந்ததே மோட்டார் வாகனத்துறை அதிகாரிகளின் கடும் நடவடிக்கைக்கு முக்கிய காரணம் ஆகும். உச்சபட்ச அபராதத்தைத் தொடர்ந்து வாகனத்தின் பதிவையும் அத்துறை தற்காலிகமாக ரத்து செய்தது.

இத்துடன், உண்மையான உருவத்தை மீண்டும் மீட்டெடுக்கவில்லை என்றால் நிரந்தரமாக பதிவு ரத்து செய்யப்படும் எனவும் அது எச்சரித்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் அதிரடி வேட்டையில் கேரள மோட்டார் வாகனத்துறை ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக முன்பைக் காட்டிலும் தற்போது கூடுதல் விழிப்புடன் அது செயல்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், சாலையில் செல்லும் ஒவ்வொரு வாகனங்களையும் மிக தீவிரமான ஆய்விற்கு உட்படுத்திய பின்னரே போலீஸார் அதை செல்ல அனுமதிக்கின்றனர். இந்த நிலையிலேயே ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் இரு போலீஸாரிடத்தில் சிக்கியிருக்கின்றது.

பைக்கை தடுத்து நிறுத்திய இரு போலீஸாரும் பல்வேறு கேள்விகளை இருசக்கர வாகன ஓட்டியிடத்தில் கேட்டறிந்தனர். இருப்பினும், அவர்களுக்கு அந்த பைக் மீது சந்தேகம் இருந்ததன் காரணத்தினால், உடனடியாக செல்போனை எடுத்து கூகுளின் உதவியை நாட ஆரம்பித்தனர். ஹிமாலயன் பைக்கில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றதா?, என்பதுகுறித்த ஆய்வையே கூகுளின் உதவியுடன் அவர்கள் மேற்கொண்டனர்.

குறிப்பாக, பைக்கில் இடம் பெற்றிருந்த புகைப்போக்கும் குழாய் மீது போலீஸார்களுக்கு பெருத்த சந்தேகம் நிலவியது. அது சந்தைக்கு பிறகான சட்ட விரோத புகைப்போக்கும் குழாயாக இருக்கும் என சந்தேகித்தனர். இதனடிப்படையிலேயே வாகன ஓட்டியிடும் சில நிமிடங்கள் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பைக்கில் இருக்கும் சைலென்சர் கம்பெனியால் வழங்கப்பட்ட ஒரிஜினல் பாகம்தான் என பலமுறை கூறனார்.

இருப்பினும், போலீஸாருக்கு சந்தேகம் நிலவியபடியே இருந்தது. இதனால்தான் கூகுளின் உதவியை அவர்கள் நாடினர். ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அதன் அனைத்து தயாரிப்புகளையும் அண்மையில்தான் புதிய பிஎஸ்6 தரத்திற்கு ஏற்ப மாற்றி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எஞ்ஜின் மாற்றத்துடன் சேர்த்து சில உருவ மாற்றத்தையும் அது செய்தது. அதில், ஒன்றே ஹிமாலயன் பைக்கின் பெரிய அளவிலான புகைப்போக்கும் குழாய் அமைப்பு ஆகும்.

முந்தைய பிஎஸ்4 மாடலைக் காட்டிலும் அளவிலும், உருவத்திலும் இது பெரியது ஆகும். எனவேதான், போலீஸாருக்கு புதிய பிஎஸ்6 தர ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின்மீது மிகப்பெரிய சந்தேகம் எழுந்தது. ஆனால், இதனை கூகுள் தற்போது விளக்கியிருக்கின்றது. இதனால், அந்த இளைஞர் போலீஸாரின் நடவடிக்கையில் இருந்து தப்பித்தார்.
நண்பர்கள் இருவர் சேர்ந்து வெளியே செல்லும்போதே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த வீடியோவை அனீஷ் ஷாஜன் எனும் யுட்யூப் தளம் வெளியிட்டுள்ளது. முன்னதாக இதேபோன்றதொரு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கைப் போலீஸார் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது அந்த பைக்கில் சந்தைக்கு பிறகான ஹேண்டில் பார் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையும் கூகுளின் உதவியுடனே போலீஸார் கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பின்னர் அந்த இருசக்கர வாகன ஓட்டிக்கு ரூ. 5 ஆயிரத்திற்கான அபராத செல்லாணை வழங்கினர். இதுபோன்ற விதிமீறல்களைக் களையெடுக்கும் விதமாகவே கேரள மோட்டார் வாகனத்துறையினர் தற்போது மிக தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பைக் மட்டுமின்றி கார், லாரி போன்ற பெரிய வாகனங்களையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதற்காக பெருமளவில் கூகுள் போன்ற தொழில்நுட்பத்தின் உதவியை அவர்கள் நாடி வருகின்றனர்.