பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎஸ்-4 பைக்குகள் தேக்கம்.. செய்வதறியாமல் தவிக்கும் விற்பனையகங்கள்..
பல கோடி ரூபாய் மதிப்புள்ள டூ-வீலர்கள் விற்பனையாகாமல் நாடு முழுவதும் தேக்கமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா, அதன் தீவிர தன்மையால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. இது மனிதர்களை மட்டுமின்றி மனிதர்களைச் சார்ந்து இயங்கும் அனைத்துத்துறைகளையும் அதள பாதாளத்தில் வீழ்த்தியிருக்கின்றது. குறிப்பாக, வாகனத்துறையை கொரோனா கடுமையாக வீழ்ச்சியடையச் செய்துள்ளது.

முன்னதாக, இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட சீனாவில், அந்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களை மிகக் கடுமையான வீழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதே நிலையைதான் தற்போது இந்திய வாகனத்துறைக்கும் கொரோனா ஏற்படுத்தியுள்ளது.

இதனால், இந்தியாவின் பொருளாதார நிலை கடும் சரிவைக் காண ஆரம்பித்துள்ளது. இது முன்பெப்போதும் இந்திய வரலாறு காணாதளவிலான சரிவு ஆகும்.
கொரோனா அச்சத்தால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் பின் விளைவாக வாகனத்துறையில் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது.

அதுமட்டுமின்றி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வாகனங்கள் விற்பனைக்கு வெளியேற்றப்படாமல் ஆலைகளில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், முன்னாதகவே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட புதிய வாகனங்கள் விற்பனைச் செய்யப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், வாகனத்துறையைச் சார்ந்த கூடுதல் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, விரைவில் விற்பனைக்கான அங்கீகாரத்தைப் இழக்கவிருக்கும் பிஎஸ்-4 தரத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் லட்சக் கணக்கில் விற்பனைச் செய்யப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ஆங்கில வாகன செய்தி தளமான ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ளது.

சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வருகின்ற 1ம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கின்றது. ஆகையால், அன்றைய தினத்தில் இருந்து பிஎஸ்-4 தரம் கொண்ட வாகனங்களை விற்பனை மற்றும் பதிவு செய்ய முடியாது.

ஆகையால், கால அவகாசம் முடிவதற்குள் பிஎஸ்-4 வாகனங்களை முற்றிலுமாக விற்பனைச் செய்ய வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் சலுகைகளை வாரி வழங்க ஆரம்பித்தன.
ஆனால், வாகன உற்பத்தி நிறுவனங்களின் இந்த முற்சிக்கு முற்றிலுமாக ஆப்பு வைக்கின்ற வகையில் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது.

இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.
ஆனால், இந்தியாவில் இப்போதே உக்ரமான ஆட்டத்தை தொடங்கியிருக்கின்றது. இருப்பினும், அதன் தாக்கம் மிக தீவிரமானதாக உள்ளது.

தற்போது விற்பனைச் செய்யப்படாமல் தேங்கியிருக்கும் பிஎஸ்-4 பைக்குகளின் மதிப்பு ரூ. 2,500 கோடி என கூறப்படுகின்றது. இதனை இனி எப்படி விற்பனைச் செய்வது என விற்பனையகங்கள் விழி பிதுங்கி கலங்கி நிற்கின்றன.
மேலும், தற்போது தேக்கமடைந்திருக்கும் வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி நிற்குமாயேனால் பல டீலர்கள் தங்களின் ஷோரூம்களை இழுத்து மூடிவிட்டு செல்லும் சூழல் ஏற்படும் என கூறப்படுகின்றது.

இது வாகன விற்பனை நிலையங்களுக்கு மட்டுமின்றி வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கடும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பான எஃப்ஏடிஏ அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
என்னதான் உச்சநீதிமன்றம் தற்போது கால அவகாசம் வழங்கினாலும் அது பயனளிக்காத சூழலே கோரோனாவால் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








