ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்து ஏமாற்றமான தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மின்சார ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சந்தையில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் மிகவும் பிரபலமான பிராண்டாக மாறி இருக்கிறது.

ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்!

கவர்ச்சியான டிசைன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்கள் கவர்ந்து வருகின்றன. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன.

ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்!

இந்த நிலையில், ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் மாடலையும் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருந்தது. ஆனால், தற்போது அந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்!

கொரோனா பிரச்னையால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் கூறி இருக்கிறது. அதேநேரத்தில், தற்போதுள்ள மாடல்களின் மீது அதிக கவனம் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்!

இதுகுறித்து மணிகன்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா,"தற்சமயம் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம்.

ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்!

தற்போது விற்பனையில் உள்ள மின்சார ஸ்கூட்டர்களுக்கான சந்தையை வலுப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்களது தொழில்நுட்ப மைய பொறியாளர்கள், சப்ளையர்கள் என அனைத்து பிரிவுகளையும் தற்போதைய மாடலை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கான திட்டத்தை கொடுத்துள்ளோம்.

ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்!

கொரோனா பிரச்னையால்தான் எலெக்ட்ரிக் பைக் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். மேலும், எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு எதிர்காலத்தில் வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தற்போதைக்கு குறிப்பிடத்தக்க அளவு இல்லை என்று கருதலாம்," என்று தெரிவித்துள்ளார்.

ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்!

அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஏத்தர் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் சந்தைக்கு வந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஏத்தர் ஸ்கூட்டர்கள் போன்றே, அதன் எலெக்ட்ரிக் பைக்கும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

Photo Credit:Sreejith Krishnan Kunjappan

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather Energy has revealed electric bike project on hold due to Corona pandemic.
Story first published: Tuesday, September 15, 2020, 16:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X