திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...

ஹோண்டா நிறுவனம் மீண்டும் டூவீலர் உற்பத்தியை எப்போதில் இருந்து தொடங்கவுள்ளது? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...

இந்தியாவில் கொரோனா வைரஸால் (கோவிட்-19) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கு தற்போது வரை நீடித்து கொண்டுள்ளது. வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...

ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே முடங்கி கிடந்த தொழில்கள் அனைத்தும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக செயல்பாட்டிற்கு வந்து கொண்டுள்ளன. இதில், கார் உற்பத்தி மற்றும் விற்பனை முக்கியமானது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நடைபெறவில்லை.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...

அத்துடன் வாகனங்களை விற்பனை செய்யும் ஷோரூம்களும் மூடப்பட்டன. ஆனால் அரசால் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, கடந்த மே 4ம் தேதி முதல் இந்தியாவில் வாகன உற்பத்தி மீண்டும் தொடங்கியது. அத்துடன் டீலர்ஷிப்களும் திறக்கப்பட்டன. ஆனால் தொழிற்சாலைகள் மற்றும் டீலர்ஷிப்களில் அரசு வழங்கிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி உள்பட பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. ஆனால் ஹோண்டா டூவீலர் நிறுவனம் இன்னும் உற்பத்தி பணிகளை தொடங்கவில்லை. ஆனால் ஹோண்டா டூவீலர் நிறுவனத்தின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படுவது குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...

இதன்படி ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனமானது, உற்பத்தி பணிகளை அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. அந்த நிறுவனத்தின் 4 ஆலைகளிலும், இரு கட்டங்களாக உற்பத்தி தொடங்கப்படவுள்ளது. இதன்படி கர்நாடக மாநிலம் நரசபுராவில் உள்ள பிளாண்ட்டில் வரும் மே 25ம் தேதி முதல் உற்பத்தி பணிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளன.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...

இதுதான் ஹோண்டா டூவீலர் நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையாகும். இதை தொடர்ந்து எஞ்சிய 3 தொழிற்சாலைகளிலும், வரும் ஜூன் மாத முதல் வாரத்தில் மீண்டும் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும். ஹோண்டா நிறுவனம் இரு சக்கர வாகன உற்பத்தி பணிகளை படிப்படியாக தொடங்க முடிவு செய்திருக்கிறது.

MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...

எனினும் மற்ற முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவை, கடந்த மே மாத முதல் வாரத்திலேயே வாகன உற்பத்தி பணிகளை மீண்டும் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வகுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி அவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...

ஹோண்டா நிறுவனம் இன்னும் உற்பத்தி பணிகளை தொடங்காமல் இருந்தாலும், அந்நிறுவனத்தின் டீலர்கள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கி விட்டனர். தற்போதைய நிலையில் 60 சதவீதத்திற்கும் மேலான ஹோண்டா டீலர்கள் தங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...

ஆனால் ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு இருந்ததை போல் தற்போது டூவீலர்களை வாங்குவதற்கான என்கொய்ரிகள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் என்கொய்ரிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கையில் ஹோண்டா உள்ளது.

Most Read Articles
English summary
Covid-19 Lockdown Relaxation: Honda To Resume Two Wheeler Production From May 25. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X