விறுவிறுப்பானது டக்கார் ராலி... விபத்துக்களால் களேபரமானது பந்தய களம்!

டக்கார் ராலி பந்தயத்தின் மூன்றாவது ஸ்டேஜ் வீரர்களுக்கு மிக சவாலானதாக அமைந்ததுடன், ஏராளமான விபத்துக்களும் ஏற்பட்டன. இதனால், பந்தய களம் களேபரமாக இருந்தது.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

சவூதி அரேபியாவில் நடந்து வரும் டக்கார் ராலி பந்தயம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மூன்றாவது ஸ்டேஜ் நடந்த பந்தய களம் பாலைவன பகுதிகள் அதிகம் இருந்ததால், வீரர்களுக்கு வழியை கண்டு பிடித்து செல்வதில் பெரும் சிரமம் இருந்தது.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

அத்துடன், முன்னால் சென்ற வாகனங்களிலிருந்து கிளம்பிய புழுதியும் பெரும் சவாலையும், சிரமத்தையும் ஏற்படுத்தியது. புழுதி காரணமாக, பல விபத்துக்களும் ஏற்பட காரணமாக அமைந்துவிட்டது.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

டக்கார் ராலியில் முதல்முறையாக பங்கேற்ற இளம் இந்திய வீரர் ஹரித் பைக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிர்சனை காரணமாக, போட்டியிலிருந்து விலகினார்.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

இருப்பினும், ஒயில்டு கார்டு முறையில் அவர் பங்கேற முடியும். ஒவ்வொரு ஸ்டேஜிலும் அவரது தர வரிசை எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், ஒட்டுமொத்த தர வரிசையில் இடம்பிடிக்க முடியாது.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

மூன்றாவது ஸ்டேஜில் பல வீரர்கள் விபத்தில் சிக்கினர். மான்ஸ்ட்டர் எனெர்ஜி யமஹா ராலி அணியை சேர்ந்த வான் பெவரென் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

ஹீரோ மோட்டோகார்ப் அணியை சேர்ந்த இந்திய அணி வீரர் சி.எஸ்.சந்தோஷ் மூன்றாவது ஸ்டேஜில் 51வது இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்த தர வரிசையில் 4 இடங்கள் முன்னேறி 44வது இடத்தை பிடித்தார்.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

மூன்றாவது ஸ்டேஜ் நிறைவு குறித்து சி.எஸ்.சந்தோஷ் குறிப்பிடுகையில்," இது மிக நீண்ட பந்தயமாக அமைந்தது. மணல் பள்ளத்தாக்குகளை கடப்பதிலும், புழுதியும் கடும் சவாலாக இருந்தது. தடத்தை சரியாக பிடித்து செல்வதும் மிகுந்த சிரமத்தை அளித்தது. மூன்றாவது ஸ்டேஜில் அதிக தவறுகளை செய்தாலும், நிறைவு செய்தது மகிழ்ச்சி தருகிறது," என்று தெரிவித்தார்.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

முதல் இரண்டு ஸ்டேஜ்களில் சிறப்பான இடத்தை பிடித்த ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி வீரர் பாவ்லோ கான்க்ளேவ்ஸின் ஹீரோ 450ஆர்ஆர் பைக்கின் எஞ்சின் பிரச்னை காரணமாக நடுவழியில் பாதிப்பை சந்தித்தார். புதிய எஞ்சின் பொருத்தப்பட்டு மூன்றாவது ஸ்டேஜை நிறைவு செய்தார்.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

மற்றொரு வீரர் செபாஸ்டியன் பஹ்லர் மூன்றாவது ஸ்டேஜில் 21வது இடத்தை பிடித்தார். மொத்தத்தில் மூன்று வீரர்களும் சிறப்பான இடத்தை பிடித்து நிலைத்து வருகின்றனர்.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

ஷெர்கோ டிவிஎஸ் அணி வீரர் லாரன்ஸோ சான்டோலின் மற்றும் ஜானி அபுபெர்ட் ஆகியோர் முறையே 10வது மற்றும் 12வது இடங்களை பிடித்து வலுவான நிலையில் உள்லனர். ஷெர்கோ டிவிஎஸ் அணி ஒட்டுமொத்த தர வரிசையில் 20வது இடத்தில் உள்ளது.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

இரண்டு முறை ஃபார்முலா ஒன் சாம்பியன் வென்ற வீரர் ஃபெர்னான்டோ அலான்ஸோ 5வது இடத்தை பிடித்தார். இரண்டாவது ஸ்டேஜில் விபத்து காரணமாக பாதிப்பை சந்தித்த அவர் மூன்றாவது ஸ்டேஜ் முடிவில் 32வது இடத்தில் உள்ளார்.

களேபரமான டக்கார் ராலி பந்தய களம்!

மூன்றாவது ஸ்டேஜ் மிக சவாலான நிலபரப்புகளை கடந்து சென்றதால், பலர் விலகினர். ஒரு இந்திய வீரர் விலகினாலும், இந்தியாவின் ஹீரோ மற்றும் டிவிஎஸ் அணிகள் தரவரிசை பட்டியலில் முன்னேறுவதற்கு துடிப்புடன் செயலாற்றி வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 8, 2020, 15:29 [IST]
English summary
On the Stage 3 of the 2020 Dakar, Ricky Brabec from (Monster Energy Honda) wins the stage in bike category with a massive lead of around 10 minutes over his rivals. He also took the lead in the overall standings after Stage 3.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+