டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... தரவரிசையில் முன்னேற்றம்!

டக்கார் ராலியின் ஐந்தாவது ஸ்டேஜ் போட்டியும் மிக சவாலாகவும், விறுவிறுப்பாகவும் நடந்தது. இதில், டிவிஎஸ் அணி தரவரிசையில் வேகமாக முன்னேறி அசத்தி வருகிறது.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... தரவரிசையில் முன்னேற்றம்!

டக்கார் ராலியின் 5வது ஸ்டேஜ் போட்டியானது அல் உலா மற்றும் ஹெயில் ஆகிய இடங்களுக்கு இடையே 564 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தது. இதில், 353 கிலோமீட்டர் தூரம் ஸ்பெஷல் ஸ்டேஜ் ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்டேஜில் பாலைவனம் மற்றும் பாறைகள் நிறைந்த வழித்தடமாக அமைந்தது.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... தரவரிசையில் முன்னேற்றம்!

இதில், பாதியளவு தூரத்தை பாலைவனத்தை கடந்து செல்லும் வகையில் இருந்ததால், முதல் பாதியில் பந்தய வீரர்கள் கடும் சவால்களை சந்தித்து கடந்தனர். பலர் விலகினர். குறிப்பாக, 2017ம் ஆண்டு டக்கார் சாம்பியனான ரெட்புல் கேடிஎம் ரேஸிங் அணி வீரர் சாம் சந்தர்லேண்ட் 5வது ஸ்டேஜில் விலகினார். 187வது கிலோமீட்டர் தூரத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்ததால், விலகினார்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... தரவரிசையில் முன்னேற்றம்!

விறுவிறுப்பான 5வது ஸ்டேஜில் டிவிஎஸ் அணி வீரர்கள் ஸ்திரமான முன்னேற்றத்தை பதிவு செய்து வருகின்றனர். லாரென்ஸோ சான்டோலின் 15வது இடத்தையும், அட்ரியன் மெட்ஜ் 11வது இடத்தையும் பதிவு செய்தனர். ஜானி அபுபெர்ட் 25வது இடத்தை பிடித்தார்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... தரவரிசையில் முன்னேற்றம்!

கடந்த 5 ஸ்டேஜ் போட்டிகளிலும் டிவிஎஸ் அணி வீரர்கள் தரவரிசையில் சிறப்பான இடத்தை பிடித்து தக்க வைத்து வருகின்றனர். 5வது ஸ்டேஜில் ஷெர்கோ டிவிஎஸ் அணி வீரர் ஹரித் நோவா ஒயில்டு கார்டு முறையில் பங்குகொண்டார். ஆனால், 3வது ஸ்டேஜில் அவர் விலகியதால், ஒட்டுமொத்த தர வரிசை பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாது.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... தரவரிசையில் முன்னேற்றம்!

இந்தியாவின் ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி வீரர் சி.எஸ்.சந்தோஷ் 5வது ஸ்டேஜில் 37வது இடத்தை பிடித்தார். இதுவரை நடந்த 5 ஸ்டேஜ்களில் அவரது சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் இதுவாக இருக்கிறது. முதல் ஸ்டேஜில் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு முழுமையான வலுவை பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... தரவரிசையில் முன்னேற்றம்!

ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி வீரர் பாவ்லோ கான்க்ளேவ்ஸ் 5வது இடத்தில் டாப் 10 இடங்களுக்குள் வந்தார். அத்துடன் ஒட்டுமொத்த தர வரிசையில் 59வது இடத்தில் உள்ளார்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... தரவரிசையில் முன்னேற்றம்!

ஹீரோ அணி வீரர் செபாஸ்டியன் பஹ்லர் 5வது ஸ்டேஜில் 21வது இடத்தை பிடித்தார். தற்போது ஒட்டுமொத்த தர வரிசையில் 19வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார். மொத்தத்தில் ஹீரோ அணி வீரர்கள் ஆரம்ப கட்டத்தில் விபத்து மற்றும் எஞ்சின் பிரச்னைகளால் பாதிப்படைந்தாலும், தொடர்ந்து சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வலுவான நிலையை நோக்கி வந்து கொண்டுள்ளனர்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... தரவரிசையில் முன்னேற்றம்!

முன்னாள் ஃபார்முலா 1 சாம்பியன் பெர்னான்டோ அலான்ஸோ 5வது ஸ்டேஜில் 7வது இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்த தர வரிசையில் 12வது இடத்தை பிடித்துள்ளார்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... தரவரிசையில் முன்னேற்றம்!

மொத்தத்தில் 5வது ஸ்டேஜில் பைக் பிரிவில் ரெட்புல் கேடிஎம் அணி வீரர் டோபி பிரைஸ் முதல் இடத்தையும், ராக்ஸ்டார் எனெர்ஜி ஹஸ்க்வர்னா ரேஸிங் அணி வீரர்களான பாப்லோ குயின்டனில்லா 2வது இடத்தையும், ஆன்ட்ரு ஷார்ட் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... தரவரிசையில் முன்னேற்றம்!

டக்கார் ராலி 5வது ஸ்டேஜ் போட்டியில் ஷெர்கோ டிவிஎஸ் அணி சிறப்பான முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது. ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணியும் சரிவிலிருந்து முன்னேற்றப்பாதையில் வந்து கொண்டிருக்கிறது. இன்று 6வது ஸ்டேஜ் நடக்கிறது. இதன் முடிவுகளை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

Most Read Articles

English summary
On the Stage 5 of Dakar rally, Toby Price (Red Bull KTM Factory Team) outclassed Kevin Benavides and Ignacio Cornejo of Monster Energy Honda team, who started the stage ahead of the KTM rider. Toby Price took a comfortable victory on the fifth stage of the Dakar rally, and is now placed 2nd in overall ranking.
Story first published: Friday, January 10, 2020, 13:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more