டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

டக்கார் ராலி பந்தயத்தில் ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி வீரர் கான்க்ளேவ்ஸ் தொடர்ந்து சிறப்பான இடத்தை பிடித்து அசத்தி வருகிறார்.

டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

சவூதி அரேபியாவில் நடந்து வரும் டக்கார் ராலி பந்தயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இதுவரை நடந்த 6 ஸ்டேஜ் போட்டிகளிலும் பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகள், விபத்துக்கள் என வீரர்களுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.

டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

இந்த நிலையில், ஆறாவது ஸ்டேஜ் போட்டி நேற்று ஹெயில் மற்றும் ரியாத் நகரங்களுக்கு இடையே நடந்தது. மொத்தம் 296 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்த இந்த போட்டியில் பெரும்பான்மையான பகுதிகள் பாலைவனமாக இருந்ததால், வீரர்கள் கடும் சவாலை சந்தித்து கடந்தனர்.

டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

இந்த ஆறாவது சற்றுப் போட்டியில் ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி வீரர் செபாஸ்டியன் பஹ்லர் மற்றும் ஷெர்கோ அணி வீரர் ஜானி அபுபெர்ட் ஆகியோர் போட்டியிலிருந்து விலகினர். தர வரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருந்து அசத்தி வந்த ஹீரோ அணி வீரர் பஹ்லர் எஞ்சின் பிரச்னை காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

அதேநேரத்தில், ஹீரோ அணியின் மற்றொரு வீரரான பாவ்லோ கான்க்ளேவ்ஸ் சிறப்பான முன்னேற்றத்தை பதிவு செய்து டாப் 10 இடங்களுக்குள் வந்து ஆறுதல் அளித்தார். நேற்றைய ஸ்டேஜில் 8வது இடத்தையும், ஒட்டுமொத்த தரவரிசையில் 46வது இடத்திலும் உள்ளார்.

டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ் கையில் காயத்தையும் பொருட்படுத்தாது இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நேற்றை போட்டியின் முடிவில் 32வது இடத்தை பிடித்தார். மற்றொரு வீரர் ரோட்ரிகஸ் 27வது இடத்தை பிடித்தார்.

டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

ஷெர்கோ டிவிஎஸ் அணியின் ஜானி அபுபெர்ட் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு பெறும் இடத்திற்கு 2 கிலோமீட்டருக்கு முன்னதாக விபத்தில் சிக்கினார். அவரது தலை, மார்பு எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். மருத்துவ குழு உதவியுடன் அவர் மீட்கப்பட்டார். இதனால், அவர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. அணி சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

அட்ரியன் மெட்ஜ் நேற்றைய ஆறாவது ஸ்டேஜில் 11வது இடத்தை பிடித்ததுடன், ஒட்டுமொத்த தரவரிசையில் 22வது இடத்தில் உள்ளார். லாரென்ஸோ சான்டலினோ 47வது இடத்தை பிடித்ததால், ஒட்டுமொத்த தரவரிசையில் சிறிது பின்னடவை சந்தித்து 16வது இடத்தில் உள்ளார்.

டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

போட்டியிலிருந்து விலகினாலும், தொடர்ந்து பங்கேற்று வரும் ஹரித் நோவா 106வது இடத்தை பிடித்தார். எனவே, ஒட்டுமொத்த தர வரிசையில் அவர் இடம்பெற இயலாது.

டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

பைக் பிரிவில் ரிக்கி பிராபெக் இரண்டு ஸ்டேஜ்களில் முதலிடத்தை பிடித்ததுடன் ஒட்டுமொத்த தர வரிசையிலும் முன்னிலை வகிக்கிறார். ஹோண்டா அணி வீரரான பிராபெக், அவருக்கு அடுத்து வந்த ஹஸ்க்வர்னா அணி வீரரைவிட 20 நிமிடங்கள் முன்னதாக நிறைவு செய்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

கார் பிரிவில் கார்லோஸ் செயின்ஸ் ஆறாவது ஸ்டேஜில் இரண்டாவது இடத்தையும், ஒட்டுமொத்த தர வரிசையில் முதல் இடத்திலும் உள்ளார்.

டக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்!

டக்கார் ராலியின் மொத்தம் 12 ஸ்டேஜ் போட்டிகளில் 6 ஸ்டேஜ் போட்டிகள் நிறைவடைந்து மத்திய கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில், இன்று ஓய்வு நாள். நாளை ஏழாவது ஸ்டேஜ் போட்டி ரியாத் நகரில் துவங்க இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 11, 2020, 14:41 [IST]
English summary
Hero and Sherco TVS racing team riders have managed to have a good outing in these extreme conditions with the Dakar Rally Stage 6.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+