வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

வியக்க வைக்கும் சிறப்பம்சங்களுடன் இரண்டு புதிய ஹைப்பர் பைக் மாடல்களை டெமோன் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

கனடா நாட்டை சேர்ந்த டமோன் நிறுவனம் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனம் உருவாக்கும் எலெக்ட்ரிக் பைக்குகள் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் பைக் பிரியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இந்த நிலையில், வியக்க வைக்கும் தொழில்நுட்ப அம்சங்களுடன் இரண்டு புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை இந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. டமோன் ஹைப்பர்ஸ்போர்ட் ஆர்டிக் சன் மற்றும் மிட்நைட் சன் என்ற என்ற பெயரில் இந்த இரண்டு புதிய எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளும் வெளியிடப்பட்டுள்ளன.

வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இந்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்காவில் நடந்த சிஇஎஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட டமோன் ஹைப்பர்ஸ்போர்ட் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலின் அடிப்படையில், அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாக இந்த இரண்டு புதிய மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

ஆர்டிக் சன் மற்றும் மிட்நைட் சன் மாடல்களில் கருப்பு வர்ணம் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கவரும் வகையில் தங்க வண்ண ஸ்டிக்கர்கள் மூலமாக அலங்காரமாக காட்சி அளிக்கின்றன.

வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இந்த எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளில் இரண்டு முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருப்பதை குறிப்பிட்டு சொல்லலாம். இதன் 360 டிகிரி வார்னிங் சிஸ்டம் மூலமாக பைக்கின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஆபத்துக்களை கேமரா மற்றும் சென்சார் துணையுடன் கண்டறிந்து ஓட்டுனரை எச்சரிக்கும்.

வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இதனை கோ பைலட் தொழில்நுட்பம் என்று டமோன் குறிப்பிடுகிறது. மோலும், போக்குவரத்து நிலவரம், சாலை நிலை, ஓட்டும் முறை ஆகியவற்றையும் கணித்து, பாதுகாப்பாக செலுத்துவதற்கான தகவல்களை ஓட்டுனருக்கு வழங்கும்.

வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இந்த பைக்குகளில் பிஎம்ஏசி லிக்யூடு கூல்டு மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 160kW(214.5எச்பி) பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இந்த பைக்கில் அதிசக்திவாய்ந்த 21.5kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. வெறும் மூன்று மணிநேரத்தில் இந்த பேட்டரி தொகுப்பை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இந்த எலெக்ட்ரிக் சூப்பர் பைக் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 322 கிமீ வேகம் வரை தொட்டுப்பிடிக்கும் வல்லமையையும் இந்த எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள் பெற்றிருக்கின்றன.

வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

டமோன் நிறுவனம் மிஷன் மோட்டார்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்தையும் அண்மையில் கையகப்படுத்தி உள்ளது. மிஷன் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிஷன் ஆர் எலெக்ட்ரிக் பைக் மாடலானது சமீபத்தில் ஐலே ஆஃப் மேன் டிடி ஸீரோ என்ற மின்சார கான்செப்ட் பைக்குகளுக்கான பந்தயத்தில் பங்கு கொண்டது.

வியக்க வைக்கும் புதிய டமோன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

அல்ட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சில திறமைமிக்க பணியாளர்களையும் பணிக்கு அமர்த்தியுள்ளது. எனவே, இந்த எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளை தவிர்த்து எலெக்ட்ரிக் ஆஃப்ரோடு வகை பைக் மாடல்களையும் டமோன் உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, April 13, 2020, 14:55 [IST]
English summary
Canada based Damon Motors has unveiled two new electric bike models named Arctic Sun and Midnight Sun.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+