இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்!

பிரபல டுகாட்டி நிறுவனத்தின் அரிய வகை பைக் ஒன்றொன்று கேட்பாரற்று சாலையோரத்தில் விடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

இந்தியாவில் சூப்பர் கார் மற்றும் பைக்குகளுக்கான வரவேற்பு சமீப காலமாக உயரத் தொடங்கியுள்ளது. அதிலும், இந்திய இளைஞர்கள் மத்தியில் சூப்பர் பைக்குகளுக்கான டிமாண்ட் சற்றே கூடுதலாக காட்சியளிக்கின்றது. இதற்கு இந்திய சாலைகளில் உயர்ந்து காணப்படும் சூப்பர் பைக்குகளின் எண்ணிக்கையேச் சான்றாக உள்ளது.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

இந்த பைக்குகள் மிக அதிக விலையைக் கொண்டவை என்பதால் செல்வந்தர்களால் மட்டுமே வாங்க முடிந்த வாகனமாக இருக்கின்றது. இதற்கு இந்தியாவின் உச்சபட்ச வரி கொள்கையே முக்கிய காரணமாக உள்ளது. எனவே, ஒரு சில சூப்பர் பைக் பிரியர்கள் இதனைக் கள்ளச் சந்தை மூலம் இறக்குமதிச் செய்து பயன்படுத்துவதுண்டு. அத்தகையோர் அதனை அரசுக்கும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் பார்வைக்கும் மறைத்தே பயன்படுத்துகின்றனர்.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

அந்தவகையில் பயன்படுத்தும் பைக்குகளைப் போலீஸார் கண்டுபிடித்தால் அதனை பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் மற்றும் உரிய வரியை வசூலித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இந்த வரியானது சில நேரங்களில் லட்சக் கணக்கில் இருக்கக்கூடும். எனவேதான், ஒரு சிலர் கள்ளச் சந்தையில் இருந்து விலையுயர்ந்த பைக்கை வாங்கினாலும், அதைப் வெளிப்படையாகப் பயன்படுத்துவதில்லை.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

இந்த நிலையில்தான், டீம்-பிஎச்பி(Exotics and Imports Spotted in Kerala)

வெளியிட்ட ஓர் புகைப்படம் மற்றும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த தகவலின்படி ரூ. 35 லட்சத்திற்கு்ம அதிகமான விலையுள்ள டுகாட்டி 1098 எஸ் ட்ரிகலோர் பைக் ஒன்று கேட்பாரற்று சாலையோரத்தில் கிடப்பது தெரிய வந்துள்ளது. இந்த பைக்கும் கள்ளச் சந்தையில் இருந்து இறக்குமதிச் செய்யப்பட்டு, பின்னர் அரசின் நடவடிக்கைகளுக்கு பயந்து கைவிடப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

கைவிடப்பட்டு நீண்ட காலமாகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஏனென்றால், பைக்கின் ஒரு சில பாகங்கள் இயற்கை கால நிலை காரணமாக லேசான சிதைப் பெறத் தொடங்கியுள்ளது. இருப்பினும், பைக் அந்தளவிற்கு சேதத்தைப் பெறவில்லை. அதன் தரம் வாய்ந்த உலோகம் மற்றும் பெயிண்டிங் முறை துருப்பிடித்தலுடன் போராடிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், அந்த பைக் மட்கத் தொடங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

டுகாட்டி நிறுவனம் இந்த மாடலை மிகவும் அரிய வகை பைக்காக தயாரித்தது குறிப்பிடத்தகுந்தது. அதாவது லிமிடெட் எடிசனில் அந்த இருசக்கர வாகனம் தயாரிக்கப்பட்டது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் மிகவும் சொற்பமான அளவில் 1,013 என்ற எண்ணிக்கையில் மட்டுமே 1098 எஸ் ட்ரிகலோர் பைக் உருவாக்கப்பட்டது.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

இத்தாலிய நாட்டின் தேசிய கொடி வண்ணம் இந்த பைக்கிற்கு கொடுக்கப்ப்டடுள்ளது. இதனை 2007ம் ஆண்டு விற்பனைக்காக அறிமுகம் செய்த டுகாட்டி, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. பார்ப்பதற்கு புதிய தோற்றத்தில் இருந்ததன் காரணத்தால் இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

ஆனால், இந்த பைக்கை அதன் மூதாதையரான 750 எஃப்1 பைக்கின் மாடலை ஒத்தவாறு டுகாட்டி உருவாக்கியிருந்தது. இந்த பைக்கிற்கின் கட்டமைப்பிற்காக ட்ரெல்லிஸ் ஃபிரேம் வழங்கப்பட்டது. இதுதான், நீண்ட காலமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும் துருப்பிடிக்காமல் இருக்க போராடிக் கொண்டிருக்கின்றது.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

டுகாட்டி 1098 எஸ் ட்ரிகலோர் பைக்கில் 1099சிசி திறன் கொண்ட எல்-ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 160 பிஎச்பி திறனை 9,750 ஆர்பிஎம்மிலும், 123 என்எம் டார்க்கை 8,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது, 6 டிரான்ஸ்மிஷனில் இயங்கும் எஞ்ஜின் ஆகும்.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

இந்த பைக்கைப் பயன்படுத்தும் பலர் இது டிராக் மான்ஸ்டர் என கூறுகின்றனர். இவ்வாறு கூறுமளவிற்கு அதிக திறனை அந்த பைக் வெளிப்படுத்துகின்றது. இதில், டெர்மிக்னோனி ரேஸ் எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவும், அதீத திறனை வெளிப்படுத்த ஓர் காரணமாக உள்ளது.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

இத்தகைய அதி திறன் கொண்ட காரை ஏன் அதன் உரிமையாளர் கைவிட்டுள்ளார் என்பது பற்றிய தகவல்தான் தற்போது சந்தேகமாகவே உள்ளது. இதனால்தான், இது கள்ளச் சந்தையில் இறக்குமதிச் செய்திருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இது எப்போது கைவிடப்பட்டது என்ற தகவலும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், தற்போதும் கேட்பாரற்று அந்த அரிய வகை பைக் உள்ளது.

இது உங்க பைக்கானு கொஞ்சம் பாருங்க... கேட்பாரற்று கிடக்கும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரிய வகை பைக்! ஓஹோ இதுதான் காரணமா?

இந்த பைக்கைப் பற்றி தெரியாத ஒரு சிலர் அதை குப்பையாக எண்ணிக் கடந்து வருகின்றனர். ஆனால், வாகனங்களை பற்றி நன்கு தெரிந்தவர்கள், பல லட்சம் மதிப்புள்ள பைக் இப்படி பாழாகிக் கொண்டிருக்கின்றதே என வருத்தப்பட்டு வருகின்றனர். நம்மில் பலருக்கும் இந்த பைக்கையா இப்படியா கைவிட்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்திருக்கக்கூடும். இந்த பைக் தற்போது கேரள மாநிலத்தின் முக்கிய நகரம் ஒன்றின் சாலையோரத்தில்தான் கைவிடப்பட்டுள்ளது.

கடைசி 3 புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...

More from DriveSpark

Article Published On: Saturday, June 13, 2020, 12:29 [IST]
English summary
Ducati 1098 S Tricolore Superbike Abandoned. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+