ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

காரின் விலையை மிஞ்சும் மதிப்பில் டுகாட்டின் புதிய பிஎஸ்6 தரம் கொண்ட மல்டிஸ்ட்ரடா 950எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் பிஎஸ்4 வாகனங்களின் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. 2020 ஏப்ரல் முதல் பிஎஸ்6 தரத்திலான வாகனங்கள் மட்டுமே விற்பனைச் செய்ய வேண்டும் என கூறியது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களுக்கு இதுகுறித்த தகவல் அனுப்பப்பட்டது.

ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

உச்ச நீதிமன்றத்தின் அதிரடியால் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் உறைந்துநின்றன. தொடர்ந்த, உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக பிஎஸ்4 வாகனங்களின் உற்பத்தியை நிறுத்தத் தொடங்கின. மேலும், தங்களின் தயாரிப்புகளை பிஎஸ்6 தரத்திற்கு உயர்த்துவதிலும் ஆர்வம் காட்டின.

ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

அந்தவகையில், நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் பிஎஸ்6 தரத்திலான வாகனங்களை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்ட நிலையில் தற்போதே டுகாட்டி நிறுவனம், அதன் முதல் பிஎஸ்6 மஸ்டிஸ்ட்ரடா 950 எஸ் எனும் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

இந்த அப்கிரேட் செய்யப்பட்ட புதிய பைக்கிற்கு ரூ. 15.49 லட்சங்கள் என்ற விலையை அது நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். டுகாட்டி நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளிலேயே அநேகரால் நுகரக்கூடிய மற்றும் சற்று சிறிய உருவம் கொண்ட இருசக்கர வாகனமாக மல்டிஸ்ட்ரடா 950எஸ் இருக்கின்றது. எனவேதான், உலகம் முழுவதும் இளைஞர்களின் நற்மதிப்பைப் பெற்ற பைக்காக இது இருக்கின்றது.

ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

புதிய அப்கிரேஷனைப் பெற்றிருக்கும் இந்த பைக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. குறிப்பாக, இதன் எஞ்ஜின் தனிச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. அதாவது, இப்பைக்கில் 937 சிஎம்3 எனும் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட எஞ்ஜின் பயன்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 113 எச்பி மற்றும் 96 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

இது ஓர் லிக்யூடு கூல்ட், 4 வால்வுகள் கொண்ட எஞ்ஜின் ஆகும். ஒவ்வொரு சிலிண்டரிலும் 4 வால்வுகள் இருக்கும். ஆக மொத்தம் 8 வால்வுகளை இந்த எஞ்ஜின் கொண்டிருக்கின்றது. இதன் போர் மற்றும் ஸ்ட்ரோக்குகள் 94 மிமீ மற்றும் 67.5 மிமீ அளவைக் கொண்டிருக்கின்றன. இத்துடன், அட்வான்ஸ்ட் ரைட்-பை-ரைட் அம்சமும் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

இது தவிர, புதிய ஹைட்ராலிக் கன்ட்ரோல் சிஸ்டத்தையும் இந்த பைக்கில் டுகாட்டி வழங்கியிருக்கின்றது. இது, பெரியளவில் லிவரின் எஃபர்ட் இல்லாமலேயே ஸ்லிப்பர் க்ளட்சை தானாக ஆபரேட் செய்யும். இந்த திறன்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மல்டிஸ்ட்ரடா பைக்கை அதிக பவர்ஃபுல் பைக்காக மாற்றியுள்ளது.

ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

இதேபோன்று பைக்கின் உருவ அமைப்பும் நம்மை அசத்தும் வகையில் அமைந்துள்ளது. மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக்கை, அதன் சகோதரர்களான மல்டிஸ்ட்ரடா 1260 மற்றும் மல்டிஸ்ட்ரடா 1260 என்ட்யூரோ ஆகிய மாடல்களைத் தழுவி டுகாட்டி உருவாக்கியுள்ளது. எனவேதான் இந்த பைக் கவர்ச்சிக்கு சற்றும் பஞ்சமின்றி காணப்படுகின்றது. மேலும், திறன் வெளிப்பாட்டிலும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

இந்த பைக்கின் முன் பக்கத்தில் கவர்ச்சியான தோற்றத்திற்காக கிடைமட்டமாக நீட்டிக்கப்பட்ட ஹெட்லைட், றெக்கைப் போன்ற பேனல்கள் மற்றும் எடைக்குறைந்த ட்ரெல்லிஸ் ஃபிரேம் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, பைக்கின் முன் பக்கத்தில் 170 மிமீ அளவுள்ள சஸ்பென்ஷன் அமைப்புடன் 19 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது மிக கடினமான சாலையைக்கூட மிக அசால்டாக கடந்து செல்ல உதவும்.

ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

இதுதவிர, தொழில்நுட்ப அம்சங்களாக பாஷ் நிறுவனத்தின் கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி டிராக்சன் கன்ட்ரோல், வெஹிக்கிள் போல்ட் கன்ட்ரோல் மற்றும் டுகாட்டி ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், டுகாட்டி குயிக் ஷிஃப்ட் அப்/டவுன், டுகாட்டி கார்னரிங் மின் விளக்கு மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ரொம்ப லேட்! பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்... இதவிட இதோட விலை வாயடைக்க வச்சுடுச்சு!

மேலும், டிஎஃப்டி திரை, ஹேண்ட்ஸ் ஃப்ரீ சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பேக்லைட் ஸ்விட்ச் கியர் கன்ட்ரோல்கள் உள்ளிட்டவையும் டுகாட்டி மல்டிஸ்ட்ரடா பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகளை இது பெற்றிருக்கின்றன காரணத்தினாலயே கார்களை மிஞ்சக்கூடிய விலையில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Launched BS6 Multistrada 950S In India. Read In Tamil.
Story first published: Monday, November 2, 2020, 18:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X