டுகாட்டி பனிகளே வி2 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.. முன்பதிவு தொகையே எவ்வளவு தெரியுமா..?

இத்தாலிய மோட்டார்சைக்கிள் ப்ராண்டான டுகாட்டி, பனிகளே வி2 பைக்கின் பிஎஸ்6 வெர்சனின் முன்பதிவுகளை இன்று (ஜூலை 20) இந்தியாவில் துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டி பனிகளே வி2 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.. முன்பதிவு தொகையே எவ்வளவு தெரியுமா..?

டுகாட்டி நிறுவனத்தின் தனித்துவமான பைக் மாடலாக பனிகளே வி2 விளங்குகிறது. இந்த நிலையில் தற்போது இதன் பிஎஸ்6 வெர்சனுக்கான முன்பதிவுகள் சென்னை, பெங்களூர், கொச்சி, ஹைதாராபாத், மும்பை, புனே, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள இந்நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் துவங்கப்பட்டுள்ளன.

டுகாட்டி பனிகளே வி2 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.. முன்பதிவு தொகையே எவ்வளவு தெரியுமா..?

இந்த முன்பதிவிற்கான முன்தொகை ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிளாக பனிகளே வி2 விளங்குகிறது.

டுகாட்டி பனிகளே வி2 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.. முன்பதிவு தொகையே எவ்வளவு தெரியுமா..?

இந்த அல்டிமேட் சூப்பர்பைக்கை பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளோம்" என டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிபுல் சந்த்ரா கூறியுள்ளார். புதிய பனிகளே வி2 ஆனது தெளிவாக கட் லைன்களுடன் உருவாக்கப்பட்டுள்ள காம்பெக்ட் பைக்காகும்.

டுகாட்டி பனிகளே வி2 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.. முன்பதிவு தொகையே எவ்வளவு தெரியுமா..?

இந்த கட் லைன்கள், எந்த சமரசமும் இன்றி முழு ஆற்றல் உடன் பைக் இயங்குவதற்கு பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். பனிகளே 959 மோட்டார்சைக்கிளுக்கு நேரடி மாற்று பைக் மாடலாக வெளிவரும் பனிகளே வி2 பெரும்பான்மையான டிசைன் பாகங்களை அதன் முன்னோடி பைக்கான பெரிய தோற்றம் கொண்ட பனிகளே வி4-ல் இருந்து பெற்றுள்ளது.

டுகாட்டி பனிகளே வி2 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.. முன்பதிவு தொகையே எவ்வளவு தெரியுமா..?

இருப்பினும் அதனை விடவும் சற்று மெல்லியதான தோற்றத்திலேயே புதிய பனிகளே வி2 பைக்கை எதிர்பார்க்கலாம். இந்த பைக்கில் முக்கிய அம்சங்களாக ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், வீலி கண்ட்ரோல் மற்றும் என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

டுகாட்டி பனிகளே வி2 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.. முன்பதிவு தொகையே எவ்வளவு தெரியுமா..?

இவற்றுடன் ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்ட 4.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த பிஎஸ்6 பைக் கொண்டிருக்கும். சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் 43மிமீ ஷோவா நீண்ட-பிஸ்டன் ஃபோர்க்கும், பின்புறத்தில் 2மிமீ நீண்டா ஷாக் உடன் சாஸ் மோனோஷாக் உள்ளிட்டவற்றுடன் இந்த புதிய டுகாட்டி பிஎஸ்6 பைக் வெளிவரவுள்ளது.

டுகாட்டி பனிகளே வி2 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.. முன்பதிவு தொகையே எவ்வளவு தெரியுமா..?

"இந்த மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது, இந்த பைக் குறித்த விரிவான தகவல்கள் பைக்கின் அறிமுகத்தின்போது வெளியிடப்படும்" என்று டுகாட்டி நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதால் இந்த பைக்கின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Pre-bookings open for the Ducati Panigale V2, aheadof its India launch | 20.07.2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X