பிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின் புதிய 950சிசி பைக்...

இத்தாலி நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான டுகாட்டி, அதன் ஹைப்பர்மோட்டார்ட் 950 மாடலின் புதிய வேரியண்ட்டை வெளியிட்டுள்ளது. ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்விஇ என பெயரிப்பட்டுள்ள இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின் புதிய 950சிசி பைக்...

2019 கான்கோர்சோ டி எலெகன்சா வில்லா டி எஸ்டே கண்காட்சியில் டுகாட்டி நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்ட 950 கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த புதிய பைக்கில் கிராஃபிடி-ஸ்டைல் பெயிண்ட் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின் புதிய 950சிசி பைக்...

இந்த பெயிண்ட் அமைப்பிற்காக கடுமையாக உழைத்துள்ளதாக கூறியுள்ள டுகாட்டி நிறுவனம், பைக்கின் உடற் பகுதிகளில் ஏர்-ப்ரஷ்டு டிசைனில் பெயிண்ட்டை கொண்டுவருவதற்காக நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறை உடன் அடர்த்தி குறைவான டிகால்ஸை மிகவும் திறமையான அதன் பெயிண்டர் குழு மூலம் பயன்படுத்தியுள்ளது.

பிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின் புதிய 950சிசி பைக்...

இந்த கிராஃபிடி பெயிண்ட் அமைப்பை தான் ஹைப்பர்மோட்டார்ட் 950 கான்செப்ட் மாடலும் கொண்டிருந்தது. மற்றப்படி பைக்கின் வெளிப்புறத்தில் உள்ள மற்ற பாகங்களின் பெயிண்ட் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

பிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின் புதிய 950சிசி பைக்...

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் ஆர்விஇ பைக்கில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 937சிசி, இரட்டை-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 114 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின் புதிய 950சிசி பைக்...

இவற்றுடன் இந்த பைக்கில் பை-டைரக்‌ஷனல் டுகாட் குயிக்‌ஷிப்டரும் உள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பாக பைக்கின் முன்புறத்தில் 44மிமீ அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மார்சோச்சி ஃபோர்க்ஸும், பின்புறத்தில் முற்போக்கு இணைப்பாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்ப்ரிங் லோட் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

பிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின் புதிய 950சிசி பைக்...

இவை மட்டுமின்றி புதிய ஹைப்பர்மோட்டார்ட் ஆர்விஇ பைக்கானது, பிரதிப்பலிப்பான ஸ்டைலில் ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கியர் ஷிஃப்ட் லைட், பக்கவாட்டு ஸ்டாண்ட் அலாரத்துடன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவை 14.5 லிட்டர்களில் கொண்டுள்ளது.

பிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின் புதிய 950சிசி பைக்...

பைக்கின் மற்ற சிறப்பம்சங்களாக டுகாட்டி ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், டுகாட்டி வீலிங் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் ஸ்லைட் ப்ரேக் செயல்பாடு உள்ளிட்டவை உள்ளன. வருகிற ஜூலை மாதத்தில் இருந்து சர்வதேச சந்தையில் விற்பனையை துவங்கவுள்ள ஹைப்பர்மோட்டார்ட் மாடலின் இந்த புதிய வேரியண்ட்டின் விலை 11,750 பவுண்ட்ஸ் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின் புதிய 950சிசி பைக்...

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.11.25 லட்சமாகும். இந்தியாவில் ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்விஇ பைக் விற்பனைக்கு வருவது குறித்த எந்த உறுதியான தகவலும் இல்லை. ஒருவேளை நம் நாட்டு சந்தைக்கு வந்தால் பைக்கின் விலை ரூ.12.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Hypermotard 950 RVE Unveiled: International Launch Scheduled For July
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X