2021 ஐக்மா மோட்டார்சைக்கிள் திருவிழாவிற்கான புதிய தேதிகள் அறிவிப்பு!

கொரோனா பிரச்னையால் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சி, அடுத்த ஆண்டு நடப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், புதிய தேதி விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

2021 ஐக்மா மோட்டார்சைக்கிள் திருவிழாவிற்கான புதிய தேதிகள் அறிவிப்பு!

இத்தாலியில் நடைபெறும் ஐக்மா சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சி உலக அளவில் மோட்டார்சைக்கிள் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள்களுக்கான கண்காட்சியாகவும் பெருமை பெற்றுள்ளது. முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்கள் இந்த கண்காட்சியின் மூலமாக புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து உலக அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர முற்படுவது வாடிக்கையான விஷயமாக உள்ளது.

2021 ஐக்மா மோட்டார்சைக்கிள் திருவிழாவிற்கான புதிய தேதிகள் அறிவிப்பு!

இந்த நிலையில், கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக கருதி, இந்த ஆண்டு பல முன்னணி நிறுவனங்கள் ஐக்மா கண்காட்சியை தவிர்க்க முடிவு செய்தன.

2021 ஐக்மா மோட்டார்சைக்கிள் திருவிழாவிற்கான புதிய தேதிகள் அறிவிப்பு!

இதனை கருத்தில்கொண்டு ஐக்மா கண்காட்சி ஏற்பாட்டு அமைப்பு, இந்த ஆண்டு மோட்டார்சைக்கிள் கண்காட்சியை ரத்து செய்தது. இது ஒருபுறம் மோட்டார்சைக்கிள் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், கொரோனா பரவும் அச்சம் காரணமாக சமரசம் செய்து கொண்டனர்.

2021 ஐக்மா மோட்டார்சைக்கிள் திருவிழாவிற்கான புதிய தேதிகள் அறிவிப்பு!

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐக்மா சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சி மீண்டும் நடத்துவதற்கு ஏற்பாட்டு அமைப்பு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, 2021ம் ஆண்டு நவம்பர் 3 முதல் 8ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

2021 ஐக்மா மோட்டார்சைக்கிள் திருவிழாவிற்கான புதிய தேதிகள் அறிவிப்பு!

இந்த நிலையில், வேறு சில கண்காட்சிகள் ஃபியரா மிலனோ கண்காட்சி அரங்க வளாகத்தில் நடக்க இருப்பதையடுத்து, இரண்டு வாரங்கள் தள்ளி புதிய தேதி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு நவம்பர் 25ந் தேதி முதல் 28ந் தேதி வரை மிலன் நகரில் உள்ள ஃபியரா மிலனோ அரங்கத்தில் மீண்டும் ஐக்மா கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

2021 ஐக்மா மோட்டார்சைக்கிள் திருவிழாவிற்கான புதிய தேதிகள் அறிவிப்பு!

இது மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்கு இப்போதில் இருந்தே இருசக்கர வாகன நிறுவனங்கள் தயாராகும் விதத்தில், தேதி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

2021 ஐக்மா மோட்டார்சைக்கிள் திருவிழாவிற்கான புதிய தேதிகள் அறிவிப்பு!

அடுத்த ஆண்டு முற்பாதியில் கொரோனாவுக்கு தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான சாத்திக்கூறுகள் இருப்பதுடன், கொரோனா பரவலும் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு நவம்பரில் ஐக்மா கண்காட்சி நடைபெறுவதில் அதிக சிக்கல் இருக்காது என்று கருதப்படுகிறது.

Most Read Articles

English summary
EICMA 2021 dates have been officially revealed. The International Bicycle and Motorcycle Show will be held in the last week of November 2021.
Story first published: Tuesday, December 22, 2020, 17:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X