ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான விலையில் புதிய ராயல் எண்ட்பீல்ட் எலக்ட்ரிக் பைக்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் வெற்றிடமாக உள்ள எலக்ட்ரிக் பைக்குகள் பிரிவில் நுழைவதற்கான தனது விருப்பத்தை புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றின் மூலமாக வெளிப்படுத்த பல வருடங்களாக திட்டமிட்டு வருகிறது. ஆனால் அதற்கான அறிவிப்புகள் இதுவரை வெளிவரவில்லை.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான விலையில் புதிய ராயல் எண்ட்பீல்ட் எலக்ட்ரிக் பைக்...

இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த எலக்ட்ரிக் கிளாசிக் கார்கள் என்ற பழைய கார்களை எலக்ட்ரிக் வாகனமாக மாற்றும் பிரபல கஸ்டமைஸ்ட் நிறுவனம் முதன்முறையாக பைக்கை மாற்றியமைத்துள்ளது. இந்த வகையில் படத்தில் காட்சியளிக்கிற பைக் கிட்டத்தட்ட புல்லட் 500 பைக் மாடலின் தோற்றத்தை கொண்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான விலையில் புதிய ராயல் எண்ட்பீல்ட் எலக்ட்ரிக் பைக்...

இந்த பைக்கில் புதியதாக பேட்டரி தொகுப்பு மற்றும் மின்சுற்று உள்ளிட்டவை கணக்கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளதால், தற்போதைய புல்லட் 500 பைக்கில் இருந்து இந்த எலக்ட்ரிக் பைக்கின் செயல்திறனை வேறுப்படுத்தி பார்ப்பது கடினமாகும்.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான விலையில் புதிய ராயல் எண்ட்பீல்ட் எலக்ட்ரிக் பைக்...

வாட்டர்-கூல்டு சிஸ்டத்தை கொண்ட பெரிய அளவிலான ஹப் மோட்டார் மூலம் இயங்கும் இந்த பைக், 10 kW நிலையான ஆற்றலையும், 12 kW பீக் பவரையும் பைக்கிற்கு வழங்கவல்லது. இந்த ஆற்றல் அளவு கிட்டத்தட்ட கிளாசிக் 350-ன் 16.32 பிஎச்பி பவருடன் ஒத்து காணப்படுவதால் இதற்கு இணையான வேகத்தை இந்த எலக்ட்ரிக் பைக் தரவல்லது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான விலையில் புதிய ராயல் எண்ட்பீல்ட் எலக்ட்ரிக் பைக்...

இதன் எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றலை பின்புற சக்கரத்திற்கு வழங்கக்கூடியதால் இந்த மோட்டார் பின்சக்கர ஹப்பில் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டாரால் என்ஜின் பாகங்களின் உராய்வு மற்றும் செயின், பெல்ட்டின் இறைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான விலையில் புதிய ராயல் எண்ட்பீல்ட் எலக்ட்ரிக் பைக்...

48kmph-ல் இருந்து 80kmph என்ற வேகத்தை வெறும் 6 வினாடிகளில் இந்த ராயல் எண்ட்பீல்டு போடோன் பைக் எட்டிவிடும். குறிப்பாக இதன் 200 கிலோ எடை நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும். இதனால் ராயல் எண்ட்பீல்டு புல்லட் பைக் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் இந்த எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை முழுவதும் சார்ஜ் செய்ய 90 நிமிடங்களே போதுமானது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான விலையில் புதிய ராயல் எண்ட்பீல்ட் எலக்ட்ரிக் பைக்...

இந்தியாவில் ஏற்கனவே விற்பனை நிறுத்தப்பட்ட ராயல் எண்ட்பீல்டு புல்லட் 500 பைக்கில் இருந்து தான் இந்த பைக் பெரும்பான்மையான சைக்கிள் பாகங்களை பெற்றுள்ளது. இதனால் சஸ்பென்ஷனிற்கு அந்த பைக்கில் வழக்கமாக பொருத்தப்படும் 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்ப்ஸ் உள்ளிட்டவை அப்படியே தொடர்ந்துள்ளன.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான விலையில் புதிய ராயல் எண்ட்பீல்ட் எலக்ட்ரிக் பைக்...

இதில் இருந்து ராயல் எண்ட்பீல்டின் 500சிசி புல்லட் பைக்கின் தனி அடையாளம் எதையும் சிதைக்காமல், அந்த பைக்கில் இருந்து எந்த வித்தியாசத்தையும் கொண்டுவராமல் சந்தையின் கவனத்தை பெற வேண்டும் என்று எலக்ட்ரிக் கிளாசிக் கார்ஸ் நிறுவனம் பணியாற்றி இருப்பது தெரிய வருகிறது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான விலையில் புதிய ராயல் எண்ட்பீல்ட் எலக்ட்ரிக் பைக்...

இருப்பினும் அப்டேட்டாக ஹெட்லேம்ப் எல்இடி தரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் ஃபாக் விளக்குகளுக்கு பதிலாக டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒற்றை இருக்கையில் காட்சியளிக்கும் இந்த எலக்ட்ரிக் பைக் தற்சமயம் உலகம் முழுவதும் நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலை சரியானவுடன் எந்த நேரத்திலும் இந்திய சந்தைக்கு வரலாம்.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான விலையில் புதிய ராயல் எண்ட்பீல்ட் எலக்ட்ரிக் பைக்...

ஹார்லி டேவிட்சனின் லைவ்வயர் பைக் வரியை சேர்க்காமல் ரூ.33.53 லட்சத்தில் விலையை கொண்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.19 லட்சமாக நிர்ணயிக்கப்படவுள்ளது. ஆனால் இந்தியன் கஸ்டம்ஸ் பணிக்களுக்கான தொகையை சேர்த்தால் எப்பாடியிருந்தாலும் விலையில் ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட சற்று கூடுதலாக வந்துவிடும்.

Most Read Articles
English summary
Electric Royal Enfield Costs As Much As A Harley-Davidson LiveWire
Story first published: Monday, April 6, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X