எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

கடந்த மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் லிஸ்ட், விற்பனை எண்ணிக்கையுடன் வெளிவந்துள்ளது. அதனை இந்த செய்தியில் காண்போம்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

இந்திய ஆட்டோமொபைல் துறை எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையில் இன்னும் ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளது. இருப்பினும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து கொண்டே போகிறது. இதை தான் தற்போது வெளியுள்ள 2020 மார்ச் மாத எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை நிலவரம் வெளிப்படுத்துகிறது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

இன்னும் தெளிவாக சொல்ல போனால், எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் பிரபலப்படுத்தும் பணியை செய்து வருவதும் இவி ஸ்கூட்டர்கள் தான். சந்தையில் ஏத்தர் எனர்ஜி ஸ்கூட்டர் தான் முதலில் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் மற்ற முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் போட்டியில் இறங்கின.

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

இந்த வகையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் சந்தைக்கு வந்தன. இதில் கடந்த மார்ச் மாதத்தில் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 91 யூனிட்களும், டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் மாடல் 18 யூனிட்களும் விற்பனையாகியுள்ளன.

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

மொத்தமாக 2019-20 பொருளாதார ஆண்டை கணக்கில் எடுத்து கொண்டால், பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் 212 யூனிட்கள் விற்பனையையும், டிவிஎஸ் ஐக்யூப் 62 யூனிட்கள் விற்பனையையும் சந்தையில் பதிவு செய்துள்ளன. மற்ற எரிபொருள் ஸ்கூட்டர்களுடன் விற்பனையில் போட்டியிடாத இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் குறிப்பிட்ட சில முக்கியமான இந்திய நகரங்களில் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

அதேபோல் கடந்த மார்ச் மாத கடைசி இரு வாரங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால் பெரும்பானமையான அனைத்து நிறுவனங்களின் தொழிற்சாலைகளும் டீலர்ஷிப்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் மேற்கூறப்பட்ட கடந்த மாத விற்பனை எண்ணிக்கை மார்ச் துவக்கத்தில் சந்தையில் பதிவு செய்தவையே ஆகும்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

கொரோனாவினால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை அடைந்துள்ளன. இதனை சரிக்கட்டும் விதமாக இந்தியாவில் உள்ள சில டீலர்ஷிப்களுடானான வணிகத்தை முற்றிலுமாக நிறுத்தி கொள்ள பெரிய அளவிலான நஷ்டத்தை சந்தித்துள்ள நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த வருடத்தின் துவக்கத்தில் பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.1 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலையை பெற்றுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பன் மற்றும் ப்ரீமியம் என்ற இரு விதமான தோற்றங்களில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

இதில் சேத்தக் ப்ரீமியம் ஸ்கூட்டர் ரூ.1.15 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. பஜாஜ் சேத்தக் இவி ஸ்கூட்டரில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 3kWh IP67-மதிப்பிடப்பட்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் மூலமாக 6.44 பிஎச்பி பவரையும், 16 என்எம் டார்க் திறனையும் பெற முடியும்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

சிங்கிள் சார்ஜில் 95கிமீ வரை ஸ்கூட்டரை இயக்கி செல்லக்கூடிய இதன் பேட்டரியை முழுவதும் சார்ஜ் செய்ய 5 மணிநேரங்கள் தேவைப்படும். இதன் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் ரைடிங் மோட்கள் கவனிக்கத்தக்க வகையில் ரேஞ்ச்சையும், செயல்படுதிறனையும் வேறுப்படுத்தி காட்டுகின்றன.

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்திற்கு இரண்டு வாரங்களுக்குள்ளாக டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.1.15 லட்ச ஆன்-ரோடு (பெங்களூர்) விலையில் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது. 5.9 பிஎச்பி ஆற்றலை வழங்கும் ஆற்றல் கொண்ட இதன் 4.4kW ஹப்-மொண்டட் எலக்ட்ரிக் மோட்டார் 140 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக ஸ்கூட்டருக்கு வழங்குகிறது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

இதன் எலக்ட்ரிக் மோட்டாரில் 75கிமீ ரேஞ்ச்சை வழங்கக்கூடிய லித்தியம்-இரும்பு பேட்டரிகள் பொருத்தப்படுகின்றன. சேத்தக் ஸ்கூட்டரை போன்று இதன் பேட்டரியை முழு சார்ஜ் செய்வதற்கும் ஐந்து மணிநேரங்கள் தேவைப்படும். பஜாஜ், டிவிஎஸ் நிறுவனங்களை தொடர்ந்து மேலும் சில இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Electric scooter sales March 2020 - Bajaj Chetak beats TVS iQube
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X