திடீரென சைக்கிள் பக்கம் சாயும் இந்தியர்கள்! விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே அனைத்து அலகுகளும் காலியாயிடுச்சு!

மேட்-இன்-இந்தியா மின்சார மிதிவண்டி விற்பனைக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே விற்று தீர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

திடீரென சைக்கிள் பக்கம் சாயும் இந்தியர்கள்... விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே ஒட்டுமொத்த அலகுகளும் காலியாயிடுச்சு!

புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் இ-மோட்டாராட் நிறுவனம், இஎம்எக்ஸ் எனும் மின்சார மிதிவண்டி ஒன்றை அண்மையில் விற்பனைக்குக் களமிறக்கியது. முதல் கட்டமாக 1,200 அலகு இ-சைக்கிள்களே விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.

திடீரென சைக்கிள் பக்கம் சாயும் இந்தியர்கள்... விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே ஒட்டுமொத்த அலகுகளும் காலியாயிடுச்சு!

இவையனைத்தும் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு மாதத்திற்கு விற்று தீர்ந்திருப்பதாக இ-மோட்டாராட் தகவல் வெளியிட்டுள்ளது. இ-மோட்டாராட் ஓர் ஆரம்பநிலை மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும்.

திடீரென சைக்கிள் பக்கம் சாயும் இந்தியர்கள்... விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே ஒட்டுமொத்த அலகுகளும் காலியாயிடுச்சு!

இந்த நிறுவனத்தின் இ-சைக்கிள்களுக்கு இத்தகைய வரவேற்பு கிடைத்திருப்பது இந்திய மிதிவண்டி சந்தைக்கே மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் விற்பனைக்கு வந்த 45 மாதங்களுக்கு உள்ளாகவே அனைத்து யூனிட் இ-சைக்கிள்களும் விற்பனையாகியிருப்பது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கின்றது.

திடீரென சைக்கிள் பக்கம் சாயும் இந்தியர்கள்... விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே ஒட்டுமொத்த அலகுகளும் காலியாயிடுச்சு!

இத்தகைய வரவேற்பைத் தொடர்ந்து புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், தனது விற்பனையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளது. புதிதாக 100 விற்பனையாளர்களுடன் இணைய இருப்பதாக சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக, முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களை மையப்படுத்தி விற்பனையகங்களை அது கொண்டு வர இருக்கின்றது.

திடீரென சைக்கிள் பக்கம் சாயும் இந்தியர்கள்... விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே ஒட்டுமொத்த அலகுகளும் காலியாயிடுச்சு!

மேலும், 2021ம் ஆண்டில் சுமார் 12 ஆயிரம் இ-சைக்கிள்களை விற்பனைச் செய்ய அது இலக்கு நிர்ணயித்திருக்கின்றது. இந்த இலக்கை அடைய இந்திய அரசின் ஆத்மான்நிர்பார் திட்டத்தின் உதவியை நிறுவனம் நாடியிருப்பதாக, இ-மோட்டாராட் நிறுவனத்தின் தலைவர் குணால் குப்தா கூறியிருக்கின்றார்.

திடீரென சைக்கிள் பக்கம் சாயும் இந்தியர்கள்... விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே ஒட்டுமொத்த அலகுகளும் காலியாயிடுச்சு!

தற்போது சிறந்த விற்பனையைப் பெற்றிருக்கும் இஎம்எக்ஸ் (EMX e-cycle) இ-சைக்கிள் இரண்டு சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக், உள்ளிட்ட சகல வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 21 கிமீ ஆகும். இத்துடன் மின்சார திறனுக்காக சாம்சங் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கின்றது.

திடீரென சைக்கிள் பக்கம் சாயும் இந்தியர்கள்... விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே ஒட்டுமொத்த அலகுகளும் காலியாயிடுச்சு!

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 45 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேசமயம், மிதிவண்டி போன்று இச்சைக்கிளைப் பயன்படுத்தினால் சுமார் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது, காஸ்மோஸ், டி-ரெக்ஸ் மற்றும் டி-ரெக்ஸ் ப்ரோ ஆகிய வேரியண்டுகளில் இந்த இ-சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 50 ஆயிரம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 24, 2020, 10:28 [IST]
English summary
EMotorad sells 1200 EMX e-cycles in a month of launch. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+