சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சந்தைக்கு வரும் புதிய எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எவெர்வ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் இஎஃப்1 இ-ஸ்கூட்டரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முழு விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சந்தைக்கு வரும் புதிய எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இது இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கும் முயற்சியில் வெளிவந்த தயாரிப்பாகும். இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தீம்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வழக்கமான சேசிஸ் மற்றும் மோட்டார் தான் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சந்தைக்கு வரும் புதிய எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

கடந்த ஒரு வருடமாக இந்த இஎஃப்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு பணியில் இருப்பதாக கூறியுள்ள எவெர்வ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை 90 சதவீதம் இந்தியாவிலேயே தயாரிக்கவுள்ளது. ஸ்டீல்-அலுமினியம் அலாய் சக்கரத்தை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் 3.3 kW மற்றும் 5 kW என்ற இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் தேர்வுகளாக பொருத்தப்பட்டுள்ளன.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சந்தைக்கு வரும் புதிய எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இதில் 5 kW எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும்போது, ஸ்கூட்டர் தனது அதிகப்பட்ச வேகமான 110 kmph-ஐ எட்டுகிறது. 3.3 kW எலக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் இயங்கும்போது இந்த எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 90 kmph என்ற வேகம் வரையில் செல்லும்.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சந்தைக்கு வரும் புதிய எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

0-லிருந்து 60 kmph என்ற வேகத்தை இது வெறும் 8.73 வினாடிகளில் அடைந்துவிடும். மற்றப்படி இதன் பேட்டரியை பற்றிய எந்தவொரு தகவலையும் பெற முடியவில்லை. ஆனால் இதன் பேட்டரி ஸ்கூட்டரில் அகற்ற முடியாத வகையில் விரைவான-சார்ஜிங் திறனை பெற்றிருப்பது மட்டும் தெரியும்.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சந்தைக்கு வரும் புதிய எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இருப்பினும் எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை 50 சதவீதம் வரையில் சார்ஜ் செய்ய 1.5 மணிநேரங்கள் தேவைப்படும். வழக்கமான முழு சார்ஜ்ஜை இந்த பேட்டரி பெற கிட்டத்தட்ட இன்னும் 5 வருடங்கள் ஆகும் என தெரிகிறது. இதனால் இதன் பேட்டரி 3-5 வருடங்களை ஆயுட்காலமாக கொண்டுள்ளது.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சந்தைக்கு வரும் புதிய எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

அறிமுகத்திற்கு முன்னதாக விலையால் எந்த மாடலுடனும் போட்டியிட வேண்டாம் என்பதற்காக எவெர்வ் நிறுவனம் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை இன்னும் அறிவிக்கவில்லை. நமக்கு தெரிந்த வரையில், இந்த ஸ்கூட்டரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சந்தைக்கு வரும் புதிய எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இதனால் இந்த எலக்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் பஜாஜ் சேத்தக் அல்லது ஏத்தர் 450 மாடல் ஸ்கூட்டர்களுடன் நேரடியாக போட்டியிடும் என தெரிகிறது. ஆனால் இத்தகைய பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியினை தர வேண்டும் என்றால், இந்த ஸ்கூட்டரின் சார்ஜிங் நேரத்தை குறைக்க எவெர்வ் நிறுவனம் எதாவது ஒரு நடவடிக்கையை எடுத்தாக வேண்டும்.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சந்தைக்கு வரும் புதிய எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

புனேவை சேர்ந்த எவெர்வ் நிறுவனத்தை ஸ்ரீநிவாஸ் ரெட்டி என்பவர் வழி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக கஸ்டம் ஹவுஸ் ரெட்டி என்ற 4 சக்கர வாகன கஸ்டமைஸ்ட் நிறுவனமும் உள்ளது. இந்திய சந்தைக்கு இந்த புதிய எவெர்வ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Everve EF1 Unveiled At Auto Expo
Story first published: Friday, February 7, 2020, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X