செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தமிழகம் டாப்பில் வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

இந்தியாவில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆட்டோமொபைல் துறை மந்த நிலையில் இருக்கிறது. ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை சிறிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு பிப்ரவரியில், டூவீலர்களின் விற்பனை 1.52 சதவீதம் அதிகரித்துள்ளது.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12,66,163 டூவீலர்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 12,85,398 ஆக உயர்ந்துள்ளது. இது 1.52 சதவீத வளர்ச்சியாகும். இது டூவீலர் டீலர்ஷிப்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயம்தான் என்றாலும் கூட, எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லை என்பதே உண்மை.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

தற்போது பிஎஸ்-4 மாடல்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே இதை விட இன்னும் அதிகமான வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடப்பு மார்ச் மாதத்தில் இன்னும் கவர்ச்சிகரமான தள்ளுபடி மற்றும் சலுகைகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் டூவீலர்களை வாங்குவதை வாடிக்கையாளர்கள் தள்ளி வைத்திருக்கலாம்.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. மார்ச் 31ம் தேதி காலக்கெடு நெருங்குவதால், பிஎஸ்-4 ஸ்டாக்குகளை க்ளியர் செய்வதற்காக, டீலர்ஷிப்களில் தள்ளுபடி மற்றும் சலுகைகள் இன்னும் அதிகமாக்கப்படலாம் என்பது டூவீலர் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதத்திற்கான மாநில வாரியான டூவீலர் விற்பனை எண்ணிக்கை பட்டியலும் வெளியாகியுள்ளது. இதில், உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 2,16,360 டூவீலர்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 1,93,827 டூவீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

அதாவது 22,533 டூவீலர்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 11.63 சதவீத வளர்ச்சியாகும். இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1,48,171 டூவீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 1,60,844 டூவீலர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

அதாவது 12,673 டூவீலர்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது 7.88 சதவீத வீழ்ச்சியாகும். 3வது இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. அங்கு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 1,25,298 டூவீலர்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 1,21,127 டூவீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. மஹாராஷ்டிர மாநிலத்தில் 4,171 டூவீலர்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

இது 3.44 சதவீத வளர்ச்சியாகும். நான்காவது இடத்தில் மேற்கு வங்கம் உள்ளது. அங்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 75,969 டூவீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது 93,294 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 17,325 டூவீலர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 22.81 சதவீத வளர்ச்சியாகும்.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

5வது இடத்தில் பீகார் உள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 79,887 டூவீலர்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையானது நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 90,577 ஆக உயர்ந்துள்ளது. 10,690 டூவீலர்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 13.38 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

இந்த பட்டியலில் 6வது இடத்தை கர்நாடகாவும், 7வது இடத்தை ராஜஸ்தானும், 8வது இடத்தை குஜராத்தும் பிடித்துள்ளன. 9வது இடத்தை ஒடிசாவும், 10வது இடத்தை சட்டீஸ்கரும் கைப்பற்றியுள்ளன. 11வது மற்றும் 12வது இடங்களில் கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உள்ளன. 13வது இடத்தை ஜார்கண்ட்டும், 14வது இடத்தை ஹரியானாவும் பிடித்துள்ளன.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

15வது இடத்தில் அஸ்ஸாம், 16வது இடத்தில் டெல்லி, 17வது இடத்தில் ஜம்மு-காஷ்மீர் ஆகியவை இருக்கின்றன. 18வது இடத்தில் உத்தரகாண்ட்டும், 19வது இடத்தில் ஹிமாச்சல பிரதேசமும், 20வது இடத்தில் புதுச்சேரியும் உள்ளன. 21 மற்றும் 22வது ஆகிய இடங்களை முறையே திரிபுரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன.

செம கெத்து... வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் தமிழ்நாடு... குஜராத் எல்லாம் நமக்கு கீழேதான்

23வது இடத்தில் மணிப்பூரும், 24வது இடத்தில் சண்டிகரும் இருக்கின்றன. 25வது இடத்தில் மிசோரமும், 26வது இடத்தில் மேகாலயாவும் உள்ளன. 27வது இடத்தில் அருணாச்சல பிரதேசமும், 28வது இடத்தில் நாகலாந்தும் இருக்கின்றன. 29,30 மற்றும் 31 ஆகிய இடங்களை முறையே சிக்கிம், டாமன் & டையூ, லடாக் ஆகியவை பிடித்துள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
February 2020 - State Wise Two Wheeler Sales Report. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X