இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க

இந்த சைக்கிளை வாங்குறதுக்கு பதிலாக நம்ம ஊரில் இரண்டு பட்ஜெட் விலையுடைய காரையே வாங்கி விடலாம் போலிருக்கே. எடை குறைவாக தயாராகி இருக்கும் இந்த சைக்கிளின் விலை பிரம்மிப்பை ஆழ்த்தும் வகையில் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. காற்று மாசுபாடு மற்றும் உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னைகளில் தீர்வு காண்பதற்கு இந்த வாகனங்களே மிகச் சிறந்த தீர்வாக இருக்கின்றன.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

இதன்காரணமாகவே, சில லக்சூரி வாகன தயாரிப்பு நிறுவனங்களும்கூட மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றன. இதையேதான் உலக நாடுகள் பல வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் வலியுறுத்தி வருகின்றன.

அந்தவகையில், லக்சூரி மற்றும் சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெர்ராரி மின் வாகனங்களை களமிறக்கத் தொடங்கியிருக்கின்றது.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

இந்நிறுவனம், தற்போது நான்கு சக்கர வானங்களை மட்டுமின்றி இருசக்கர வாகன உற்பத்தியிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றது.

இதற்காக, பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பியான்சி (Bianchi) உடன் ஃபெர்ராரி நிறுவனம் இணைந்திருக்கின்றது. இந்த கூட்டணியில் பசுமை இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

மேலும், இவ்விரு நிறுவனங்களின் இணைவை அடுத்து தற்போது முதல் பசுமை ரக இ-பை சைக்கிள் எஸ்எஃப்01 என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இ-பை சைக்கிள் உலகில் இதுவரை இல்லாதளவில் அதி-திறனைக் கொண்ட வாகனமாக அறிமுகமாகியிருக்கின்றது.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இ-பை சைக்கிள் வாகன உலகையே பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் இந்த எஸ்எஃப்01 பை சைக்கிள் தயாராகி இருக்கின்றது. அதேசமயம், இதன் இஞ்ஜினியரிங் திறன் மட்டுமின்றி விலையும் நம்மை ஒரு கணம் அதிர்ச்சியில் உறைய வைக்கின்ற அளவிற்கு உயர்ந்து காணப்படுகின்றது. எனவே அனைத்திலும் எஸ்எஃப்01 இ-பைக் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையிலேயே காட்சியளிக்கின்றது.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

குறிப்பாக, பை சைக்கிள் இஞ்ஜினியரிங் படிப்போரின் புத்தகத்தைவிட எடை குறைந்ததாக இருப்பது ஆச்சரியத்தின் உச்சம். இந்த எடைக் குறைவிற்காக அல்ட்ரா கார்பன் ஃபிரேம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது எடை குறைவாக இருப்பதோடு மட்டுமின்றி தேவையற்ற அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறனும் இந்த ஃபிரேமிற்கு இருக்கின்றது. எனவே, கரடு-முரடான பாதையில் சென்றாலும் பெரியளவில் அசௌகரியமான அனுபவத்தை இது நமக்கு வழங்காது.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

இதற்காக, "கவுண்டர்வய்ல்" (Countervail) என்னும் சிறப்பு தொழில்நுட்பத்தை அந்நிறுவனங்கள் பயன்படுத்தியிருக்கின்றன. அதாவது ரப்பரைப் போன்று வளைந்துக் கொடுக்கும் மிகவும் அரிதான பிசின்களைக் கொண்டு இந்த சட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இது, அதிர்வுகளின்போது வளைந்துக் கொடுத்து மீண்டும் அதன் பழைய நிலைக்கே திரும்பிவிடும்.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

என்னங்க சும்மா கதவிடுறீங் என உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். இத்தகைய அதீத திறனை இதுக் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே அதிக விலை மற்றும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் இஞ்ஜினியரிங் திறனைக் கொண்ட இ-பைக் என நாங்கள் முன்னதாக கூறியிருந்தோம்.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

இதனாலயே 80 சதவீத அதிர்வுகளை அது உள் வாங்கிக் கொள்ளும் திறனைப் பெற்றிருக்கின்றது. மேலும், ஒட்டுமொத்தமாகவே 780 கிராம் எடையை இதுக் கொண்டுள்ளது. இதனால், இதன் உறுதித் தன்மைமீது உங்களுக்கு சந்தேகம் ஏற்படலாம். ஆனால், இது மற்ற இ-பைக்குகளைக் கட்டிலும் மிக உறுதியானது என இரு நிறுவனங்களும் அடித்து கூறுகின்றன.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

இந்த இ-பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கார்பன் ஃபைபர் இருக்கையும்கூட மிக மிக எடைக் குறைந்ததாக காட்சியளிக்கின்றது. இது ஒட்டுமொத்தமாக 94 கிராம் எடையைக் கொண்டிருக்கின்றது. இம்மாதிரியான 3கே ரக கார்பன் ஃபைபர்களைதான் ஃபெர்ராரி அதன் கார்களில் பயன்படுத்துகின்றது.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

இருக்கையைப் போன்றே கார்பன் ரிம்கள் மற்றும் பைரெல்லி பி ஜீரோ கிளின்சர் டயர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த டயர், ஸ்மார்ட் நெட் சிலிகா என்ற வேதிப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 17க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது, எடையில் சமரசம் செய்யாமல் சிறந்த செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

இதனால், இந்த டயர்கள் அதிக உருளும் திறன், ஈரமான சாலையிலும் இருக்கமான பிடி, பஞ்சர் எதிர்ப்பு உள்ளிட்ட திறனைப் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, என்னதான் தேய்-தேய் என தேய்த்தாலும் இந்த டயர்கள் அவ்வளவு எளிதில் தேய்ந்துவிடாதாம். இது டயர்களின் கூடுதல் சிறப்பாக உள்ளது.

இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 780 கிராம் மட்டுமே... ஆனா, விலைய கேட்ட சத்தியமா தலை தெறிக்க ஓடிடுவீங்க!

இத்தகைய சிறப்பு வாய்ந்த பை-சைக்கிளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்ய ஃபெர்ராரி திட்டமிட்டுள்ளது. இதற்காக 12 யூனிட்டுகள் மட்டுமே தற்போது தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த பை-சைக்கிளுக்கு சூப்பர் பைக்குகளை மிஞ்சும் வகையில் ரூ. 14 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு நம்ம ஊரில் ரெண்டு பட்ஜெட் கார்களின் உயர்நிலை வேரியண்டையே வாங்கிவிடலாம்.

Most Read Articles
மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
Ferrari Launches Special SF01 Bicycle Price With Rs.14 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X