ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்.. எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

உலகில் விற்பனையாகும் பல்வேறு சொகுசு கார்களின் விலைக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் புதிய லக்சூரி ஹோவர் பைக்கை பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ, ஃபெர்ராரி உள்ளிட்ட நிறுவனங்களே தற்போது வரை உலகின் அதிக விலைக் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

ஆனால், தற்போது இந்த நிறுவனங்களுக்கெல்லாம் போட்டியளிக்கின்ற வகையில் பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ஓர் வாகன உற்பத்தி நிறுவனம், அதன் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

என்னது, இருசக்கர வாகனம் ரோல்ஸ் ராய்ஸுக்கு போட்டியா..? இந்த நிறுவனத்தோட காரே பல கோடியாச்சே அப்பு..., என்று தானே நினைக்கிறீர்கள். ஆம், தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள மோட்டார்சைக்கிள் பென்ட்லீ, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களைக்காட்டிலும் அதிக விலைக் கொண்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த மோட்டார்சைக்கிள் குறித்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

பார்ப்பதற்கு ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் வித்தியாசமான பைக்கைப் போன்று காட்சியளிக்கும் இந்த மோட்டார்சைக்கிள் உண்மையில் மோட்டார்சைக்கிள் என்ற கூறிவிட முடியாது. ஏனென்றால், அதனை பறக்கும் வாகனமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதற்கேற்ப வகையிலேயே அந்த மோட்டார்சைக்கிளில் பிரத்யேக வசதியை ஃபிரெஞ்ச் நிறுவனமான லாசரேத் உருவாக்கியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

எல்எம்வி 496 என்றழைக்கப்படும் அந்த பைக் தற்போது உற்பத்திக்கு தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த ஹோவர் பைக்கை விரைவில் அந்த நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

ஆனால், இதன் இந்திய வருகை கேள்விக் குறிதான். இருப்பினும், போக்குவரத்தில் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் நிச்சயம் விரைவில் அது விற்பனைக்கு வந்துவிடும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

இந்த ஹோவர் பைக்கிற்கு விலையாக £380,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில் ரூ. 3.5 கோடி ஆகும். தற்போது இந்தியாவில் விற்பனையாகும் பல லக்சூரி கார்கள் இதைக் காட்டிலும் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

இந்த விலைக்கு ஏற்ப பல்வேறு சிறப்பம்சங்களை இந்த ஹோவர் பைக் பெற்றிருக்கின்றது. குறிப்பாக கூற வேண்டுமானால், இதன் திறன் மற்ற இருசக்கர வாகனத்தில் காண முடியாத பிரத்யேக வசதியாக பார்க்க முடிகின்றது.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

ஆகையால், எல்எம்வி 496 பைக்கை தேவைப்பட்டால் சாலையில் செல்லும் வாகனமாகவும், இல்லையென்றால் பறக்கும் பைக்காகவும் சிறிய பொத்தானை அழுத்துவதன் மூலம் மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த சிறப்பு வசதிக்காக ஜெட் விமானங்களில் காணப்படும் பிரொபல்ஷன் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் நான்கு பக்கங்களில் பைக்கை நிலையாக பறக்க வைக்கின்ற வகையில் நிறுவப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

அதேசமயம், தற்போது வரை இந்த ஹோவர் பைக்க வெறும் 10 நிமிடங்கள் மட்டும காற்றில் பறக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான மின்சார சக்தியை எதிர்காலத்தில் கூட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், விற்பனைக்கு வரும்போது ஐந்து விதமான தேர்வுகளில் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோவர்பைக் மண்ணெண்ணையால் இயங்குகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பைக்கை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தம்வகையில் மிகவும் யூசர் பிரெண்டிலியாக உருவாக்கியிருப்பதாக லாசரேத் தெரிவித்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

அதற்கேற்பவகையில், லைட்டான ஸ்டியரிங், ஓட்டுநருக்கான இயக்க நிலை உள்ளிட்ட ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், சாதாரண பைக்குகளில் காணப்படுவதைப் போன்று பிரேக்கிங் சிஸ்டம், அண்டர் கேரேஜ் மற்றும் கூடுதல் சிறப்பு பிரிமியம் வசதிகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

இதுமட்டுமின்றி, விமானத்தில் இருப்பதைப்போன்றே கூடுதல் வசதிகளும் இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த எல்எம்வி 496 ஹோவர் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள நான்கு ஜெட் எஞ்ஜின்களும் 1,300 குதிரைத் திறனைப் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, இதன் சிறப்பான சஸ்பென்ஷனுக்காக அட்வான்ஸ் தரத்திலான டிஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்... எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

இந்த பைக் சாலையில் செல்லும்போது மின்சார திறனில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஒரு முழுமையான சார்ஜில் 96 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இதனை சாலையில் செல்லும்போது ஹேண்டில் பார் மூலமாகவும், பறக்கும்போது சிறிய ஜாய் ஸ்டிக் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறிய ஜாய் ஸ்டிக் ஹேண்டில்பார் அருகில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயன்படுத்துவதற்கு சிறப்பு லைசென்ஸ் ஏதேனும் தேவையா என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இருப்பினும், புதிய பரிணாமம் கொண்ட வாகனம் என்பதால் இதற்கான பிரத்யேக லைசென்ஸ்குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

ஆனால் பறக்கும் பைக்குகள் உலகிற்கு ஒன்றும் புதிது அல்ல. துபாய் போலீசார் தற்போது பறக்கும் பைக்குகளில் உலா வர தொடங்கி விட்டனர். இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

உலகின் மிகவும் அதிநவீன காவல்துறை என்றால் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது துபாய் காவல் துறையாகதான் இருக்கும். லம்போர்கினி, ஃபெராரி என முன்னணி நிறுவனங்களின் சூப்பர் கார்களை எல்லாம் துபாய் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

சூப்பர் கார்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவை. எனவே இந்திய சாலைகளில் சூப்பர் காரை பார்ப்பது என்பதே மிகவும் அபூர்வமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட சூப்பர் கார்களை எல்லாம் துபாய் போலீசார் சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

இந்த சூழலில் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் செயல்பட்டு வரும் ஹோவர்சர்ஃப் (Hoversurf) என்ற நிறுவனம், துபாய் போலீசாருக்காக பறக்கும் பைக்குகளை தயாரித்துள்ளது. இதற்கு ஹோவர்சர்ஃப் எஸ்3 2019 (Hoversurf S3 2019) என பெயரிடப்பட்டுள்ளது.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

பார்ப்பதற்கு தேள் போன்ற வடிவத்தில் இருப்பதால், இந்த பறக்கும் பைக்குகளை ஸ்கார்பியன் என்றும் கூட குறிப்பிடுகின்றனர். இதன் விலை நம்மை நிச்சயமாக தலை சுற்ற வைத்து விடும். ஆம், ஒவ்வொரு பறக்கும் பைக்கின் விலையும் தலா சுமார் 1 கோடி ரூபாய்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

இந்த பறக்கும் பைக்குகளின் சிறப்பம்சங்கள் குறித்து துபாய் காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்த பறக்கும் பைக்கின் மொத்த எடை 114 கிலோ மட்டுமே. இது அதிகபட்சமாக 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர்கள். இதில், ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதுதவிர ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆள் இல்லாமலும் இதனை இயக்கலாம். இதில் ஆள் இருந்தால் அதிகபட்சமாக 25 நிமிடங்கள் இடைவிடாமல் பறக்க முடியும்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

அதே சமயம் ஆள் இல்லாவிட்டால் 40 நிமிடங்கள் வரை இடைவிடாமல் பறக்கும் திறன் இதற்கு உண்டு. இந்த பறக்கும் பைக்குகள் மின்சாரத்தால் இயங்க கூடியவை. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

இது செங்குத்தாக டேக் ஆப் ஆகும். அதேபோல் செங்குத்தாகவே லேன்டிங்கும் செய்து கொள்ள முடியும். எனவே ஓடுதளம் போன்ற விஷயங்கள் எதுவும் தேவையே இல்லை. எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் உடனடியாக பறக்க தொடங்கலாம்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

அவசரமான சூழ்நிலைகளிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த பறக்கும் பைக்குகள் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். முதற்கட்டமாக ரோந்து பணியிலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கும் பணியிலும் இதனை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

பறக்கும் பைக்குகளை வழங்குவது தொடர்பாக ஹோவர்சர்ஃப் நிறுவனத்திற்கும், எங்களுக்கும் இடையே கடந்த 2017ம் ஆண்டே ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. தற்போது பறக்கும் பைக்குகளை எப்படி இயக்குவது? என்பது தொடர்பாக ஹோவர்சர்ஃப் நிறுவனம் எங்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

துபாய் காவல் துறையை சேர்ந்த 2 குழுக்கள் தற்போது பயிற்சி பெற்று வருகிறன்றன. நடப்பாண்டில் (2020) இந்த பறக்கும் பைக்குகள், துபாய் காவல் துறையில் சேர்க்கப்படும். எவ்வளவு பறக்கும் பைக்குகளை பயன்படுத்துவது என்பது தொடர்பாக தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது'' என்றார்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

ஐக்கிய அரபு எமீரகத்தில், ஜிட்டெக்ஸ் என்ற மாநாடு கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்றது. அப்போதே பறக்கும் பைக் தொடர்பான சில தகவல்களை ஹோவர்சர்ஃப் நிறுவனம் வெளியிட்டு விட்டது. தற்போது துபாய் போலீசாருக்கு பயிற்சி அளிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

பறக்கும் பைக்குகளில் துபாய் போலீசார் தீவிரமாக பயிற்சி பெற்று வரும் வீடியோ, பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

இந்திய போலீசாருக்கு டிவிஎஸ் அப்பாச்சி, பஜாஜ் பல்சர் போன்ற சாதாரண மோட்டார் சைக்கிள்கள்தான் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் குஜராத், கொல்கத்தா போலீசாரிடம் மட்டும் விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குகள் உள்ளன. எனினும் அவை விஐபி கான்வாய்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 1, 2020, 12:06 [IST]
English summary
French Automotive Lazareth Has Developed A New Flying Bike. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+