இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஜெமோபாய் இந்தியாவில் உள்ள தனது விற்பனை ஸ்கூட்டருடன் விரைவில் புதிய மினி ஸ்கூட்டர் மாடலான மிசோ-வையும் இணைத்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு செய்தியினை இனி பார்ப்போம்.

இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...

இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் குறித்து ஜெமோபாய் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் இந்த மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகிற ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...

இதுகுறித்து மேலும் கூறியுள்ள இந்நிறுவனம் மிசோ ஸ்கூட்டர், கொரோனா வைரஸினால் பொருளாதாரத்தில் நாடு அடைந்து வரும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுதிறன் அதிகம் கொண்டதாகவும், கொடுக்கும் பணத்திற்கு ஏற்றதாகவும், சவுகரியமான தனி பயன்பாட்டு வாகனமாகவும் விளங்கும் என தெரிவித்துள்ளது.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...

இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தனியாள் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி பொருட்களை ஏற்றி செல்வதற்கும் உகந்ததாக இருக்கும். இதனால் இதன் ஒரு வேரியண்ட் பொருட்களை வைப்பதற்கு கேரியர் உடனும், மற்றொன்று கேரியர் இல்லாமலும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...

பேட்டரி தொகுப்பை தவிர்த்து இந்த ஜெமோபாய் மிசோ ஸ்கூட்டர் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறதாக இந்நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதன் பேட்டரி சிங்கிள் சார்ஜில் 65கிமீ ரேஞ்சை வழங்கும் விதத்தில் பல்வேறு தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ளது.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...

கோரீன் இ-மொபைலிட்டி மற்றும் ஒபாய் எலக்ட்ரிக் நிறுவனங்கள் இணைந்ததின் விளைவாக ஜெமோபாய் நிறுவனம் கடந்த 2016ல் உருவானது. இதில் 1.5 கோடி எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உலகம் முழுவதும் விற்பனை செய்துள்ள ஒபாய் நிறுவனத்திற்கு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பில் சுமார் 15 வருட அனுபவம் உண்டு.

இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...

இந்த இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் முயற்சியாக இணைந்துள்ளன. ஜெமோபாய் நிறுவனம் ஏற்கனவே இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளில் ஆஸ்ட்ரிட் லைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Gemopai Miso Mini Electric Scooter To Be Launched In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X