இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி!

விலைக் குறைந்த மற்றும் அதிக ரேஞ்ஜை வழங்கும் இ-சைக்கிளை கோ ஜீரோ மொபிலிட்டி அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

கோ ஜீரோ மொபிலிட்டி நிறுவனம், அதன் ஸ்கெல்லிங் என புதுமுக இ-மிதிவண்டிகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்தியாவில் மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் வாகன உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

இந்நிலையிலேயே ஸ்கெல்லிங் மாடலில் மூன்று புது முக இ-சைக்கிளை அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஸ்கெல்லிங், ஸ்கெல்லிங் லைட் மற்றும் ஸ்கெல்லிங் ப்ரோ இவையே தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புது இ-சைக்கிள் ஆகும். இந்த சைக்கிள்களை கோ ஜீரோ மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் வைத்து தயாரித்து வந்தாலும், இதனை பிரிட்டனில் வைத்தே வடிவமைத்திருக்கின்றது.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

ஆகையால், இது சர்வதேச தரத்தில் காட்சியளிக்கும் என்பதில் சந்தேகமுமில்லை. குறிப்பாக, ஆஃப் ரோடு மற்றும் வழக்கமான சாலை பயன்பாட்டிற்கு ஏற்ப வசதிகளை இந்த இ-சைக்கிள் பெற்றிருக்கின்றன. ஆனால், ரேஞ்ஜ் விவகாரத்தில் மட்டும் மூன்று இ-சைக்கிள்களிலும் வித்தியாசம் தென்படுகின்றது. இதுமாதிரி வேறு என்னென்ன வித்தியாசங்கள் எல்லாம் இ-சைக்கிள்களில் காட்சியளிக்கின்றன என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

கோ ஜீரோ ஸ்கெல்லிங் லைட்:

ஜோ ஜீரோ-வின் ஆரம்ப நிலை மாடலாக ஸ்கெல்லிங் லைட் தேர்வு இருக்கின்றது. இந்த இ-சைக்கிளில் 210 Wh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், 250 W மின் மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 25 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் உச்சபட்ச வேகமும் மணிக்கு 25 கிமீ ஆகும்.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

மேலும், இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் தேவைப்படும். இவற்றுடன், வி பிரேக்குகள் மற்றும் சுதந்திரமான ரிஜிட் சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் ஆகியவையும் இ-சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், முந்பக்க வீலில் டிஸ்க் பிரேக், 5 லெவல் பெடல் அசிஸ்ட், க்ரூஸ் மோட், வால்க் மோட் என பல்வேறு சிறப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் விலை ரூ. 19,999 ஆகும்.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

கோ ஜீரோ ஸ்கெல்லிங்:

ஸ்கெல்லிங் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் நடுநிலையான இ-சைக்கிளாக இந்த தேர்வு இருக்கின்றது. இதன் விலை ரூ. 24,999 ஆகும். இதிலும், ஸ்கெல்லிங் லைட் இ-சைக்கிளில் இருப்பதைப் போன்று 250W டிரைவ் மோட்டார் மற்றும் 210 Wh எனெர்டிரைவ் பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களில் ஒற்றுமையுடன் காணப்படும் இரு சைக்கிள்களும் பெடல் அசிஸ்ட் விஷயத்தில் வித்தியாசத்துடன் காட்சியளிக்கின்றன.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

கோ ஜீரோ ஸ்கெல்லிங் தேர்வில் 3 லெவல் பெடல் அசிஸ்ட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த இ-சைக்கிளை முழுமையாக சார்ஜ் 2.5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இதிலும், சுதந்திரமான ரிஜிட் சஸ்பென்ஷன் மற்றும் வி-பிரேக்குகளை நம்மால் காண முடிகின்றது.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

கோ ஜீரோ ப்ரோ:

இந்த இ-சைக்கிள் ஓர் ஹைபிரிட் ரகமாகும். எனவே மற்ற தேர்வுகளைக் காட்டிலும் இதில் சற்று கூடுதல் சிறப்பு வசதிகளை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, இதன் ரேஞ்ஜ் விகிதம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சைக்கிளை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

இதுதவிர, 7 ஸ்பீடு கியர் சிஸ்டம், அட்வான்ஸ் திறன் கொண்ட சஸ்பெஷன் (முன்பக்கத்தில்), அலாய் ஸ்டெம் ஹேண்டில், 26X2.35 இன்ச் அளவுள்ள டயர் மற்றும் இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக் என சிறப்பு வசதிகளில் மெய்சிலிர்க்க வைக்கின்றது. இதுபோன்ற சிறப்பு வசதிகளை இது கொண்டிருப்பதன் காரணத்தினால்தான் இதன் விலையும் சற்று கூடுதலாக இருக்கின்றது.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

ரூ. 34,999 என்ற விலையை கோ ஜீரோ மொபிலிட்டி நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், 4.0 எல்சிடி டிஸ்பிளே, ஃபிளாஷ் லைட், டிரைவ் கன்ட்ரோல் வசதி மற்றும் சிறப்பான ஏரோடைனமிக் வசதி என பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் தேவைப்படுகின்றது.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

இத்தகைய சிறப்பு வசதிகளைக் கொண்ட இ-சைக்கிளையே கோ ஜீரோ மொபிலிட்டி தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது நவம்பர் 8ம் தேதி முதலில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. விரைவில் அமேசான் போன்ற ஆன்லைன் தளத்திலும் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது புக்கிங் மட்டுமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.

இயற்கைக்கு மட்டுமில்ல நம்ம பாக்கெட்டுக்கும் நண்பன்தான்! லைசென்ஸ், ஆர்சி தேவையில்ல... விலையும் கம்மி...

எனவே புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு வரும் 25ம் தேதி இ-சைக்கிள்கள் டெலிவரி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜோ ஜீரோ மொபிலிட்டியின் இந்த இ-சைக்கிள் பெடல் வசதியுடன் காட்சியளிக்கின்றது. ஆகையால் சார்ஜ் தீர்ந்துவிட்டால் சார்ஜிங் ஸ்டேஷன் வரை அதை ஓட்டிக் கொண்டே செல்ல முடியும். நகர மற்றும் தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த புதுமுக சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
GoZero Mobility Launches Skellig Electric Bike Series In India. Read In Tamil.
Story first published: Monday, November 9, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X