கொரோனாவிற்கு எதிரான போராட்டம்.. புதுமையான விதத்தில் கை கொடுக்கும் ஹார்லி டேவிட்சன்...

பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நேரடி ஏலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி இந்நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிசனான ஹார்லி-டேவிட்சன் லைவ்வையர் எலக்ட்ரிக் பைக்குகள் இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்.. புதுமையான விதத்தில் கை கொடுக்கும் ஹார்லி டேவிட்சன்...

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விரைவில் நடத்தவுள்ள இந்த நேரடி ஏலத்தின் மூலமாக கிடைக்கும் தொகை அனைத்தையும் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்திற்கு பயன்படுத்தவுள்ளது. இந்த நேரடி ஏலம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்.. புதுமையான விதத்தில் கை கொடுக்கும் ஹார்லி டேவிட்சன்...

இந்த ஏலத்தில் உட்படுத்தப்படவுள்ள லைவ்வையர் பைக் இந்நிறுவனத்தின் முதல் முழு-எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாகும். 2018ல் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியின் மூலம் உலகளவில் அறிமுகமான இந்த எலக்ட்ரிக் பைக் இந்த ஏலத்தில் கஸ்டம் பெயிண்ட் அமைப்பில், அதிகளவில் கார்பன் ஃபைபர் ஆக்ஸஸரீஸ் மற்றும் டேவிட்சன் குடும்பத்தின் கையெழுத்துடன் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்.. புதுமையான விதத்தில் கை கொடுக்கும் ஹார்லி டேவிட்சன்...

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பு பணியில் இருந்த இந்த எலக்ட்ரிக் பைக்கில் எச்-டி ரிவலேஷன் என அழைக்கப்படும் நிரத்தர காந்தக மேக்னெட் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக பைக்கை அதிகப்பட்சமாக 78 kWh அல்லது 104.6 பிஎச்பி மற்றும் 116 என்எம் டார்க் திறனில் இயக்க முடியும்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்.. புதுமையான விதத்தில் கை கொடுக்கும் ஹார்லி டேவிட்சன்...

0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை அடைய 3.5 வினாடிகளை எடுத்து கொள்ளும் இந்த எலக்ட்ரிக் பைக், 100 kmph-ல் இருந்து அதிகப்பட்ச வேகமான 128 kmph-ஐ அடைய வெறும் 2 வினாடிகளே போதும். இதன் எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள 15.5 kWh பேட்டரி சிங்கிள் சார்ஜில் நகர்புற சாலைகளில் 258 கிமீ தூரமும், நெஞ்சாலைகளில் 158 கிமீ வரையிலும் பைக்கை இயக்கவல்லது.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்.. புதுமையான விதத்தில் கை கொடுக்கும் ஹார்லி டேவிட்சன்...

இந்த ரேஞ்ச்சை இந்த பைக் வோர்ல்டு மோட்டார்சைக்கிள் டெஸ்ட் சைக்கிள் என்ற சிஸ்டத்தை பயன்படுத்தி அடையும். மற்ற ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரை போன்று, ஹார்லி டேவிட்சன் லைவ்வையர் எலக்ட்ரிக் பைக்கும் த்ரோட்டல் & கோ செயல்பாடு மற்றும் பின் சக்கரத்தில் பெல்ட்-ட்ரைவன் அமைப்புடன் உள்ளது.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்.. புதுமையான விதத்தில் கை கொடுக்கும் ஹார்லி டேவிட்சன்...

இந்த எலக்ட்ரிக் பைக்கை 21 கிமீ இயக்க 1 மணிநேர சார்ஜரும், முழு சார்ஜர் நிறைய முழு-இரவு சார்ஜரும் போதும் என ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கூறியிருந்தது. இவற்றுடன் லைவ்வையர் பைக்கில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலிற்கு 4.3 இன்ச் டிஎஃப்டி தொடுத்திரையையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்.. புதுமையான விதத்தில் கை கொடுக்கும் ஹார்லி டேவிட்சன்...

இதில் இன்ஸ்ட்ரூமெண்ட் தொடுத்திரையில் உள்ள ப்ளூடூத் இணைப்பு வசதியின் மூலமாக ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் ஹெட்செட்டை பைக்குடன் இணைக்க முடியும். இத்தகைய வசதிகளுடன் சாலை, மழை, ரேஞ்ச் மற்றும் ஸ்போர்ட் உள்ளிட்ட 5 ரைடிங் மோட்களையும் இந்த பைக் கொண்டுள்ளது. இந்த பைக்கின் நேரடி ஏலம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 29, 2020, 9:30 [IST]
English summary
Harley-Davidson To Organise Auction For COVID-19 Relief
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+