ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்குவதற்கு நேரம் வந்தது!! ரூ.4 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்...

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிளுக்கு புதிய சலுகையை ஆண்டு இறுதியை முன்னிட்டு அறிவித்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்குவதற்கு நேரம் வந்தது!! ரூ.4 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்...

ஹீரோ வழங்கியுள்ள இந்த எக்ஸ்சேன்ஞ்/ லாயலிட்டி சலுகை திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்கும்போது ரூ.4 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்குவதற்கு நேரம் வந்தது!! ரூ.4 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்...

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட எந்த விபரத்தையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்குவதற்கு நேரம் வந்தது!! ரூ.4 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்...

இந்த சலுகையின் பெயரை வைத்து பார்க்கும்போது, வாடிக்கையாளர்கள் தங்களது பழைய இருசக்கர வாகனத்தை கொடுத்து புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்கினால் ரூ.4 ஆயிரம் வரையிலான சலுகையினை பெறலாம் என நாங்கள் நினைக்கிறோம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்குவதற்கு நேரம் வந்தது!! ரூ.4 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்...

ஹீரோ வாகனத்தின் உரிமையாளர்கள் எந்தவொரு வாகனத்தையும் எக்ஸ்சேன்ஞ் செய்யாமல் முழு ரூ.4 ஆயிரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ தயாரிப்புகளை நம்பி வாங்கியதற்காக அவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்குவதற்கு நேரம் வந்தது!! ரூ.4 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை பொறுத்தவரையில், இதன் பிஎஸ்6 வெர்சன் கடந்த 2020 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே தற்சமயம் விற்பனைக்கு கிடைக்கும் இந்த மோட்டார்சைக்கிளின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,15,714 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்குவதற்கு நேரம் வந்தது!! ரூ.4 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்...

கவர்ச்சிகரமான காற்றியக்கவியலுக்கு ஏற்றதாக, கூர்மையான பேனல் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 200சிசி ஹீரோ பைக்கில் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்போர்டியான வடிவில், அளவில் சிறியதாக எக்ஸாஸ்ட் குழாய், பாடி பேனல்கள், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்குவதற்கு நேரம் வந்தது!! ரூ.4 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்...

இவற்றுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் சிறப்பம்சங்களாக ப்ளூடூத் இணைப்புடன் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், செல்ஃப்-ஸ்டார்ட், அலாய் சக்கரங்கள், ஏபிஎஸ் உடன் டிஸ்க் ப்ரேக்குகள் உள்ளிட்டவை பொருத்தப்படுகின்றன.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்குவதற்கு நேரம் வந்தது!! ரூ.4 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்...

பைக்கிற்கு இயக்க ஆற்றலை வழங்க பொருத்தப்படும் 199.6சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-ல் 17.8 பிஎச்பி மற்றும் 6500 ஆர்பிஎம்-ல் 16.45 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்குவதற்கு நேரம் வந்தது!! ரூ.4 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்...

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக வழங்கப்படும் இந்த என்ஜின் அமைப்பில் ஆயில்-கூலர் யூனிட் வழங்கப்படுவதால் என்ஜின் வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருக்கும். என்ஜின் ஆயுட்காலம் அதிகரிக்கும். இதனுடன் ப்ரோக்ராம்டு ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் மற்றும் எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பத்தையும் எக்ஸ்ட்ரீம் 200எஸ்-இன் என்ஜின் அமைப்பில் ஹீரோ மோட்டோகார்ப் வழங்குகிறது.

Most Read Articles

English summary
New Hero Xtreme 200S offer announced; save up to INR 4,000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X