தனியாக பேட்டரியை பிரித்தெடுக்கும் வசதியுடன் ஹீரோவின் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள் அறிமுகம்... விலை எவ்ளோ பாஸ்!

ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின் ஹீரோ லெக்ட்ரா எஃப்6ஐ ஸ்மார்ட் இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு வசதிகளை இப்பதிவில் காணலாம்.

தனியாக பேட்டரியை பிரித்தெடுக்கும் வசதியுடன் ஹீரோவின் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள் அறிமுகம்... விலை எவ்ளோ பாஸ்!

ஹீரோ சைக்கிள் நிறுவனம், ஹீரோ லெக்ட்ரோ பிராண்டின் கீழ் புதிய எஃப்6ஐ எனும் புதுமுக சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் ஸ்மார்ட் இ-சைக்கிள் ஆகும். அதாவது பேட்டரி திறன்மூலம் இயங்கும் மிதிவண்டியாகும். அதேசமயம், இதனை மின்சார திறன் இல்லாதபோது வழக்கமான மிதிவண்டியாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தனியாக பேட்டரியை பிரித்தெடுக்கும் வசதியுடன் ஹீரோவின் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள் அறிமுகம்... விலை எவ்ளோ பாஸ்!

இதுவே, புதிய ஹீரோ லெக்ட்ரோ எஃப்6ஐ ஸ்மார்ட் சைக்கிளின் சிறப்பு வசதியாகும். இந்த சிறப்பு திறன் கொண்ட மிதிவிண்டியை ஹீரோ சைக்கிள் நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதல் முறையாக காட்சியப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

தனியாக பேட்டரியை பிரித்தெடுக்கும் வசதியுடன் ஹீரோவின் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள் அறிமுகம்... விலை எவ்ளோ பாஸ்!

இந்த ஸ்மார்ட் சைக்கிளில் 7 ஸ்பீடு வேகக்கக்கட்டுப்பாட்டு கருவி (கியர்) வழங்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார திறனுக்காக லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதுவே சைக்கிளின் பின் வீலில் நேரடியாக பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டாருக்கு தேவையான மின்சார திறனை வழங்கும்.

தனியாக பேட்டரியை பிரித்தெடுக்கும் வசதியுடன் ஹீரோவின் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள் அறிமுகம்... விலை எவ்ளோ பாஸ்!

சைக்கிளுக்கு மிகவும் கூர்மையான திறனை ஹீரோ சைக்கிள் நிறுவனம் வழங்கியுள்ளது. ஆகையால், இது மிக எளதில் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும். காற்றை எளிதில் இது கிழிக்கும் என்பதால் தேவையற்ற தடைகளை இது சந்திக்காது. மேலும், தேவையற்ற மின்சார விரையத்தையும் இது தடுக்கும். எனவே, பேட்டரி பயன்பாடு லேசாக குறையும்.

தனியாக பேட்டரியை பிரித்தெடுக்கும் வசதியுடன் ஹீரோவின் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள் அறிமுகம்... விலை எவ்ளோ பாஸ்!

ஆகையால், இதன் ரேஞ்ஜ் சற்று கூடுதலாக கிடைக்க நேரிடுகிறது. இதுமட்டுமின்றி, இது ஓர் ஸ்மார்ட் சைக்கிள் என்பதால் இதில் ஐ ஸ்மார்ட் தொழில்நுட்பம் கொண்ட ஆப் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு ப்ளூடூத் இணைப்பைக் கொண்டு இயங்கும். அவ்வாறு இந்த ஆப்-இன் மூலம் செல்போனையும், சைக்கிளையும் இணைத்தோமேயானால் சைக்கிள்குறித்த பல்வேறு தகவல்களை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

தனியாக பேட்டரியை பிரித்தெடுக்கும் வசதியுடன் ஹீரோவின் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள் அறிமுகம்... விலை எவ்ளோ பாஸ்!

தொடர்ந்து, சைக்கிளில் பயணிக்கும்போது ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற எண்ணற்ற வசதிகளை இந்த ஸ்மார்ட் இ-சைக்கிள் கொண்டிருப்பதால் இதனை இளைஞர்களுக்கான எதிர்கால சைக்கிள் என ஹீரோ நிறுவனம் குறிப்பிடுகின்றது.

தனியாக பேட்டரியை பிரித்தெடுக்கும் வசதியுடன் ஹீரோவின் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள் அறிமுகம்... விலை எவ்ளோ பாஸ்!

மேலும், இந்த சைக்கிளை கெண்டா கே ஷீல்ட் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சைக்கிளின் உறுதி மற்றும் தரத்தை மேம்படுத்தும் வகையில் அகிலே ஃபிரம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தனியாக பேட்டரியை பிரித்தெடுக்கும் வசதியுடன் ஹீரோவின் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள் அறிமுகம்... விலை எவ்ளோ பாஸ்!

இத்துடன், அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட டயர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குகின்ற வகையில் டிஸ்க் பிரேக்குகள் இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில், கூடுதல் சிறப்பு வசதியாக பிரித்தெடுக்கக்கூடிய பேட்டரிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

தனியாக பேட்டரியை பிரித்தெடுக்கும் வசதியுடன் ஹீரோவின் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள் அறிமுகம்... விலை எவ்ளோ பாஸ்!

ஆகையால், பேட்டரி தீர்ந்துவிட்டால் வேறு பேட்டரியைப் பயன்படுத்தியோ அல்லது பேட்டரியை தனியாக கழட்டி அதைச் சார்ஜ் செய்த பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 60 கிமீ தூரம் பயணிக்க முடியும். பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர்க்கு இது அதிகம் உதவும் என நம்பப்படுகின்றது.

Most Read Articles
English summary
Hero Cycles Hero Lectro Launches F6i Smart e-Cycle. Read In Tamil.
Story first published: Thursday, December 17, 2020, 11:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X