காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா?

ஹீரோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகிறது.

காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப். நாட்டின் தலைநகரான புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது, உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா?

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தரமான இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருவதுடன், சமூக பொறுப்புள்ள நிறுவனம் என்பதையும் தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது.

காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா?

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் காவல் துறையை சேர்ந்த பெண் போலீசாருக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் 100 ஸ்கூட்டர்களை வழங்கியது. இவை டெஸ்ட்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர்கள் ஆகும். இந்த வரிசையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது மேலும் ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளது.

காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் இருக்கும் நீம்ரானா மற்றும் முன்டேவர் சமுதாய சுகாதார மையங்களின் அதிகாரிகளிடம், 2 டூவீலர் ஆம்புலன்ஸ்களை (First-responder Vehicles) ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது ஒப்படைத்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் சமுதாயத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா?

இதன்படி தனது கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (Corporate Social Responsibility) திட்டத்தின் ஒரு பகுதியாக, டூவீலர் ஆம்புலன்ஸ்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனம் இன்று (ஜூலை 15ம் தேதி) வெளியிட்டது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா?

அதாவது நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சைகளை அளிப்பதற்கு ஏற்ற வகையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்குகள் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளன. குக்கிராமங்களில் உள்ள நோயாளிகளை உடனடியாக சென்றடைவதற்கும், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகளை வழங்கிய பின்னர், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவதற்கும் இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்கள் பயன்படும்.

காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா?

அதற்கு ஏற்ற வகையில் இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்குகள் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு, கூடுதல் ஆக்ஸஸெரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்களில், ஸ்ட்ரெச்சர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முதலுதவி பெட்டி போன்ற அவசர கால மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா?

அத்துடன் தீயணைப்பான், எல்இடி ஃப்ளாஸர் லைட்கள், எமர்ஜென்ஸி வயர்லெஸ் பொது அறிவிப்பு அமைப்பு மற்றும் சைரன்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ச்சியாக செய்து வரும் இதுபோன்ற நல்ல காரியங்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும் வகையில் உள்ளன.

Most Read Articles
English summary
Hero Delivers 2 First Responder Vehicles To Rajasthan Community Health Centres. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X