கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையான ஹீரோ மோட்டார்சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை...

2020 ஆகஸ்ட்டில் 584,456 பைக்குகளை விற்பனை செய்து நிறுவனம் 7.55% வளர்ச்சியை அடைந்துள்ளதாக ஹீரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையான ஹீரோ மோட்டார்சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை...

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் சந்தையில் கொரோனாவினால் அடைந்து நஷ்டத்தை சரிகட்டி வருவதாகவும் கூறியுள்ளது. இந்நிறுவனம் தற்போது தெரிவித்துள்ள கூற்றுப்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 584,456 பைக் மாதிரிகளை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையான ஹீரோ மோட்டார்சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை...

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.55 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அப்போது ஹீரோ நிறுவனம் 543,406 பைக்குகளை தான் விற்பனை செய்திருந்தது. அதுவே 514,509 யூனிட் ஹீரோ பைக்குகள் விற்பனையான 2020 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 13 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையான ஹீரோ மோட்டார்சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை...

ஹீரோ நிறுவனத்தின் இந்த மொத்த விற்பனை எண்ணிக்கையில் 544,658 மோட்டார்சைக்கிள்களும், 39,798 ஸ்கூட்டர்களும் அடங்கும். இருப்பினும் இந்நிறுவனத்தின் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையான ஹீரோ மோட்டார்சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை...

அதாவது கடந்த மாதத்தில் 15,782 யூனிட் இருசக்கர வாகனங்களை மற்ற வெளிநாட்டு சந்தைகளில் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதேநேரம் 2019 ஆகஸ்ட்டில் 19,403 யூனிட் மோட்டார்சைக்கிள்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையான ஹீரோ மோட்டார்சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை...

தங்களது தயாரிப்புகளுக்கு கிராமபுற மற்றும் அத்தகைய கிராமங்களை ஒட்டியுள்ள நகரங்களில் தான் அதிக அளவில் வரவேற்பு கிடைப்பதாக ஹீரோ நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் விரைவில் வரவுள்ள பண்டிக்கை காலத்தில் இந்த வரவேற்பு மேலும் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையான ஹீரோ மோட்டார்சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை...

பண்டிக்கை காலம் மட்டுமின்றி வைரஸினால் பொது பயன்பாட்டு வாகனங்கள் மீதான பயம் மற்றும் நிறுவனத்தின் மீது அதிகரித்துவரும் நம்பிக்கையும் ஹீரோவிற்கு புத்துணர்ச்சியை வழங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையான ஹீரோ மோட்டார்சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை...

100 சதவீத திறன் உடன் தனது தொழிற்சாலை செயல்பட்டு வருதாக அறிவித்துள்ள ஹீரோ நிறுவனம் தீவிர பாதுகாப்பு வழிமுறைகளோடு வாடிக்கையாளர்கள் தொடர்பு மையங்களை இந்தியா முழுவதும் மீண்டும் திறந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையான ஹீரோ மோட்டார்சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை...

சமீபத்தில் இந்நிறுவனத்தில் இருந்து விற்பனைக்கு வந்த தயாரிப்பு மாடல் என்று பார்த்தால், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர். ரூ.99,950 என்ற எக்ஸ்ஷோரூம் விலையுடன் சந்தைப்படுத்தபட்டுள்ள இந்த 160சிசி பைக் எதிர்பார்த்தை போலவே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையான ஹீரோ மோட்டார்சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை...

இத்தகைய புதிய அறிமுகங்களின் வருகையினால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையையே ஹீரோ நிறுவனம் சந்தையில் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த இலாபங்கள் அனைத்தும் இந்நிறுவனத்தை கொரோனாவினால் அடைந்த நஷ்டத்தில் மீட்டு கொண்டுவர உதவும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 3, 2020, 15:40 [IST]
English summary
Hero MotoCorp Registers 7.55% Growth In Yearly Sales. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+