ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது!

பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள் அண்மையில் மின்சார ஸ்கூட்டர்களை சந்தைக்கு கொண்டு வந்துவிட்டன. இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இந்த சந்தையில் களமிறங்கும் முனைப்பில் உள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் அடிப்படையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு வருகிறதாம். அதாவது, மேட்ஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளது. மிக விரைவில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது!

இந்த புதிய ஸ்கூட்டரில் மிகவும் சக்திவாய்ந்த லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கும். பர்மனென்ட் மேக்னெட் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும். மின் மோட்டார் சக்தி பின்சக்கரத்திற்கு செலுத்தப்படும்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது!

புதிய மேஸ்ட்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நேரடி இணைய வசதி மூலமாக அப்டேட்டுகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை இணைத்து பல்வேறு வசதிகளை பெறும் வாய்ப்பும் வழங்கப்படும்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது!

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது போட்டியாளர்களைவிட விலை குறைவானதாக வர இருப்பதாக அந்நிறுவன வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதாவது, பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் க்யூப் ஆகிய மாடல்களைவிட விலை குறைவாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது!

இதன்மூலமாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் மிக வலுவான அடித்தளத்தை அமைக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது. பிற நிறுவனங்களைவிட அதிக சர்வீஸ் மற்றும் டீலர்களை கொண்டுள்ளதால், நாடு முழுவதும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிக எளிதாக சந்தைப்படுத்தும் வாய்ப்பும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் உள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது!

ஹீரோ இ-மேஸ்ட்ரோ கான்செப்ட் ஸ்கூட்டரில் மாடலில் இதன் அலாய் வீல்கள் சிவப்பு வண்ணத்திலும், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இடம்பெற்றிருந்தது. இவற்றை தயாரிப்பு நிலை மாடலிலும் எதிர்பார்க்கலாம்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது!

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. இது நிச்சயம் மிகப்பெரிய போட்டியாளராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த மையத்தில் பிஎஸ்-6 எஞ்சின் கொண்ட இருசக்கர வாகனங்களை உருவாக்கும் முயற்சிகளும் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது!

'பேட்டரியில் இயங்கும் பல புதிய மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்குவதற்காக ரூ.10,000 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்ய இருக்கிறோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Auto NDTV

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2020, 17:58 [IST]
English summary
New Delhi based Hero MotoCorp is planning to make an entry into the electric scooter segment. According to carandbike, the company is working on electric technology, and has begun testing an electric Maestro concept scooter.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+