முதல் முறையாக காட்சிக்குள்ளாகிய ஹீரோவின் முதல் மின்சார பைக்... இது வேற லெவல் எலெக்ட்ரிக் பைக்...!

ஹீரோ நிறுவனம் அதன் முதல் மின்சார பைக்கை அறிமுகம் செய்வதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றது. இந்நிலையில், இந்த பைக் முதல் முறையாக வெளியுலகிற்கு காட்சியளிக்கின்ற வகையிலான புகைப்படம் இணையத்தில் கசிந்து, வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

முதல் முறையாக காட்சிக்குள்ளாகிய ஹீரோவின் முதல் மின்சார பைக்... இது வேற லெவல் எலெக்ட்ரிக் பைக்...!

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பாவனாக செயல்பட்டு வரும் ஹீரோ நிறுவனம், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஹீரோ எலெக்ட்ரிக் என்ற பிராண்டில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்நிறுவனம், தற்போதுவரை மின்சார வாகனங்களை ஸ்கூட்டர் டைப்பிலேயே களமிறக்கி வருகின்றது.

இந்நிலையில், மின்சார வாகனங்களுக்கான சந்தை நாளுக்கு நாள் அதிகரிப்பதை உணர்ந்த ஹீரோ, எலெக்ட்ரிக் பிராண்டில் பைக்கையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

முதல் முறையாக காட்சிக்குள்ளாகிய ஹீரோவின் முதல் மின்சார பைக்... இது வேற லெவல் எலெக்ட்ரிக் பைக்...!

புத்தம் புதிய ரம்மியமான தோற்றத்தைக் கொண்ட அந்த பைக் முதல் முறையாக தற்போது காட்சிக்கும் உள்ளாகியுள்ளது. இந்த பைக் சாலையில் பரிசோதனை அல்லது டீலர்கள் ஷோரூமில் காட்சிப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

முதல் முறையாக காட்சிக்குள்ளாகிய ஹீரோவின் முதல் மின்சார பைக்... இது வேற லெவல் எலெக்ட்ரிக் பைக்...!

அவ்வாறு, கொண்டுவரப்பட்ட ஹீரோ எலெக்ட்ரிக் பைக்தான் தற்போது கேமிராவின் கண்களில் சிக்கியுள்ளது. அது, தற்போது இணையத்தில் வைரலாகியும் வருகின்றது.

இதனை முதல் எலெக்ட்ரிக் பைக்காக களமிறக்க காத்திருக்கும் ஹீரோ, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் முறையாக காட்சிக்குள்ளாகிய ஹீரோவின் முதல் மின்சார பைக்... இது வேற லெவல் எலெக்ட்ரிக் பைக்...!

இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் அந்த பைக் தற்போது ஸ்பை செய்யப்பட்டுள்ளது. இதன் தோற்றம் 150 மற்றும் 160 சிசி திறன் கொண்ட நேக்கட் ஸ்ட்ரீட் ரக பைக்கைப் போன்று காட்சியளிக்கின்றது. ஆகையால், இந்த பைக் மின்சார இருசக்கர வாகன சந்தையில் கடுமையான புரட்சியை ஏற்படுத்த வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் முறையாக காட்சிக்குள்ளாகிய ஹீரோவின் முதல் மின்சார பைக்... இது வேற லெவல் எலெக்ட்ரிக் பைக்...!

மேலும், எரிபொருள் வாகன சந்தையில் நிலவுவதைப் போன்ற சாம்ராஜ்யத்தை மின்சார இருசக்கர வாகன உலகிலும் ஏற்படுத்த இந்த புதிய மாடல் எலெக்ட்ரிக் பைக் உதவும் என்று நம்பப்படுகின்றது.

ஆனால், இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு வசதி மற்றும் பேட்டரி திறன் பற்றிய தகவல் சிதம்பர ரகசியமாகவே காக்கப்படுகின்றது. இது, வருகின்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்குள்ளாகிய பின்னரே தெரியவரும்.

முதல் முறையாக காட்சிக்குள்ளாகிய ஹீரோவின் முதல் மின்சார பைக்... இது வேற லெவல் எலெக்ட்ரிக் பைக்...!

இருப்பினும், ஒரு சில சுவாரஷ்ய தகவல் மட்டும் காற்றில் பரவிய வண்ணம் இருக்கின்றது. அதாவது, இந்த பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 120 கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கும் என்று கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி, இந்த பைக் உச்சபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருப்பதாகவும் தகல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சிறப்பம்சத்தைப் பெற்றிருக்கும் இந்த மின்சார பைக் குறைந்தது ரூ. 1.5 லட்சம் விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் முறையாக காட்சிக்குள்ளாகிய ஹீரோவின் முதல் மின்சார பைக்... இது வேற லெவல் எலெக்ட்ரிக் பைக்...!

இந்த விலைக்கேற்ப வழக்கமான நேக்கட் பைக்குகளைப் போன்ற டிசைன் மற்றும் ஸ்டைல் லுக்கைப் பெற்றிருக்கின்றது. இதுமட்டுமின்றி, சாதாரண பைக்குகளைப் போன்று காட்சியளிப்பதற்கு ப்யூவல் டேங்க் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்ப்லிட் செய்யப்பட்ட இருக்கை, அல்லாய் வீல், சிறப்பான சஸ்பென்ஷனுக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், மோனோஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக காட்சிக்குள்ளாகிய ஹீரோவின் முதல் மின்சார பைக்... இது வேற லெவல் எலெக்ட்ரிக் பைக்...!

மேலும், தொழில்நுட்ப வசதியாக முழுமையான டிஜிட்டல் தொழில்நுட்பம் வசதிக்கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ரிமோட் டயக்னாஸ்டிக், இன்பில்ட் நேவிகேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் கன்னெக்ட்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக காட்சிக்குள்ளாகிய ஹீரோவின் முதல் மின்சார பைக்... இது வேற லெவல் எலெக்ட்ரிக் பைக்...!

இந்த மின்சார பைக் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியான உற்பத்தி மையத்தில் வைத்து ஹீரோ எலெக்ட்ரிக் தயாரித்து வருகின்றது. ஆண்டு ஒன்றிற்கு 1 லட்சம் மின்வாகனங்களை உற்பத்திச்செய்யும் திறன் கொண்டது இம்மையம்.

முதல் முறையாக காட்சிக்குள்ளாகிய ஹீரோவின் முதல் மின்சார பைக்... இது வேற லெவல் எலெக்ட்ரிக் பைக்...!

ஹீரோ எலெக்ட்ரிக் பிராண்டில் விற்பனைக்கு வரவுள்ள அனைத்து பைக் மற்றும் ஸ்கூட்டர்களும் இங்குதன் உற்பத்திச் செய்யப்படுகின்றன. அந்தவகையில், இங்கு தயாரிக்கப்பட்ட ஒரு சில மாடல்கள் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, மிக விரைவில் இந்த கவர்ச்சிமிகுந்த எலெக்ட்ரிக் பைக்கும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதற்கான பணியில் ஹீரோ எலெக்ட்ரிக் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Source: Car&Bike

More from DriveSpark

Article Published On: Wednesday, January 29, 2020, 13:47 [IST]
English summary
Hero's First Electric Bike Spied First Time Near Punjab. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+