பஜாஜ் சேத்தக் போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டிய ஹீரோ!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பஜாஜ் சேத்தக் போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டிய ஹீரோ!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான சந்தை மிக வலுவானதாக மாறி வருகிறது. இந்த சந்தையில் பிரபலமான நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் புதிய மாடல்களுடன் களமிறங்கி வருகின்றன. இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இந்த சந்தையில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பஜாஜ் சேத்தக் போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டிய ஹீரோ!

அதாவது, புதிய இருசக்கர வாகனத்திற்காக Freedo என்ற பெயரை ஹீரோ மோட்டோகார்ப் பதிவு செய்துள்ளது. இந்த பெயரானது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக பதிவு செய்யப்பட்டு இருப்பதாக யூகிக்கப்பட்டுகிறது.

பஜாஜ் சேத்தக் போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டிய ஹீரோ!

கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ டூயட் அடிப்படையிலான முழுமையான மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஸ்கூட்டரின் தயாரிப்பு நிலை மாடல்தான் ஃப்ரீடோ என்ற பெயரில் வர இருப்பதாக தெரிகிறது.

பஜாஜ் சேத்தக் போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டிய ஹீரோ!

இது பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக இருக்கும் என்று ஒரு தகவல் கூறுகிறது. இருப்பினும், இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகவே இருக்க முடியும் என்று மற்றொரு தகவல் அடித்து கூறுகிறது. ஏற்கனவே, ஹீரோ நிறுவனம் தனி நிறுவனத்தின் பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வந்தாலும், இது நடைமுறை பயன்பாட்டுக்கு சிறந்த அம்சங்களுடன் மிக சிறந்த போட்டியாளராக இருக்கும்.

பஜாஜ் சேத்தக் போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டிய ஹீரோ!

காரணம், மற்றொரு முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ விரைவில் சேத்தக் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

பஜாஜ் சேத்தக் போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டிய ஹீரோ!

எனவே, இந்த சந்தையில் வலுவாக காலூன்றுவதற்காக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகப்படுத்த ஹீரோ திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், உறுதியானத் தகவல் எதுவும் இதுவரை இல்லை.

பஜாஜ் சேத்தக் போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டிய ஹீரோ!

தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டூயட், டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ, மேஸ்ட்ரோ எட்ஜ் 125, பிளஷர் மற்றும் பிளஷர் ப்ளஸ் என 6 விதமான ஸ்கூட்டர் மாடல்களை வைத்திருக்கிறது. 15 விதமான மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்கிறது.

பஜாஜ் சேத்தக் போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டிய ஹீரோ!

ஏற்கனவே, போதுமான அளவு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வைத்திருக்கும் நிலையில், இந்த புதிய பெயரானது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

பஜாஜ் சேத்தக் போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டிய ஹீரோ!

புதிய பெயர் குறித்த ஆதாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ஹீரோ ஃப்ரீடோ ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

பஜாஜ் சேத்தக் போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டிய ஹீரோ!

பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டை குறிவைத்து ஹீரோ ஃப்ரீடோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களமிறக்கப்படும்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அதிக அளவில் ஷோரூம்களையும், சர்வீஸ் மையங்களையும் ஹீரோ மோட்டோகார்ப் வைத்திருப்பதால், இந்த புதிய ஸ்கூட்டரை எளிதாக சந்தைப்படுத்த முடியும் வாய்ப்பு இருக்கிறது.

Source

Most Read Articles
English summary
New Delhi based two-wheeler manufacturer, Hero MotoCorp, has filedd a trademark application for the Hero Freedo. According to Rushlane, details about the scooter remain unknown, and Freedo could possibly be derived from the word freedom.
Story first published: Thursday, January 9, 2020, 17:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X