நடுத்தர குடும்பங்களுக்கான ஹீரோ பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு... புதிய எக்ஸ்ட்ரீம் 160Rம் தப்பவில்லை

பேஷன் ப்ரோ, க்ளாமர் 125, எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளை ஹீரோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நடுத்தர குடும்பங்களுக்கான ஹீரோ பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு... புதிய எக்ஸ்ட்ரீம் 160Rம் தப்பவில்லை

தயாரிப்பு பணிகளுக்கு தேவையான பாகங்களின் விலை அதிகரிப்பால் கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தும் நடவடிக்கையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இறங்கியுள்ளது.

நடுத்தர குடும்பங்களுக்கான ஹீரோ பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு... புதிய எக்ஸ்ட்ரீம் 160Rம் தப்பவில்லை

இந்த வகையில் இந்நிறுவனத்தின் மொத்த பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக சமீபத்திய அறிமுகமான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் ஆரம்ப விலை ரூ.1,02,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நடுத்தர குடும்பங்களுக்கான ஹீரோ பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு... புதிய எக்ஸ்ட்ரீம் 160Rம் தப்பவில்லை

ரூ.99,950 என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் கடந்த 2020 ஜூன் மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 160சிசி பைக் அதன்பின் சந்திக்கும் முதல் விலை அதிகரிப்பு இதுவாகும். இந்த விலையுயர்வால் இந்த பைக்கின் ஆரம்ப விலையே ரூ.1 லட்சத்தை கடந்துள்ளது.

நடுத்தர குடும்பங்களுக்கான ஹீரோ பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு... புதிய எக்ஸ்ட்ரீம் 160Rம் தப்பவில்லை

இந்தியாவில் தற்சமயம் மிகவும் மாலிவான விலையில் கிடைக்கும் அட்வென்ஜெர் பைக் மாடலான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6-ன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,11,790 லட்சத்தில் இருந்து ரூ.1,940 அதிகாரிக்கப்பட்டு ரூ.1,13,730 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர குடும்பங்களுக்கான ஹீரோ பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு... புதிய எக்ஸ்ட்ரீம் 160Rம் தப்பவில்லை

ஹீரோ கிளாமர் 125சிசி பைக் ட்ரம் மற்றும் டிஸ்க் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ட்ரம் வேரியண்ட் புதிய எக்ஸ்ஷோரூம் விலையாக ரூ.71 ஆயிரத்தையும், டிஸ்க் ப்ரேக் வேரியண்ட் சற்று கூடுதலாக ரூ.74,500-ஐயும் பெற்றுள்ளன. இவை இரண்டின் விலையும் தலா ரூ.1,250 அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர குடும்பங்களுக்கான ஹீரோ பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு... புதிய எக்ஸ்ட்ரீம் 160Rம் தப்பவில்லை

ஹீரோ பேஷன் ப்ரோ பிஎஸ்6 பைக்கும் ட்ரம் மற்றும் டிஸ்க் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.66,500 மற்றும் ரூ.68,700 என்பவை இந்த இரு வேரியண்ட்களின் புதிய எக்ஸ்ஷோரூம் விலைகளாகும். இவற்றின் முந்தைய விலைகள் தலா ரூ.760 உயர்த்தப்பட்டுள்ளன.

நடுத்தர குடும்பங்களுக்கான ஹீரோ பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு... புதிய எக்ஸ்ட்ரீம் 160Rம் தப்பவில்லை

இவற்றுடன் எச்எஃப் டீலக்ஸ் என ஹீரோ ஸ்பிளெண்டர் வரிசை பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளையும் இந்நிறுவனம் உயர்த்தி உள்ளது. இந்த விலை அதிகரிப்புகளினால் கொடுக்கும் பணத்திற்கேற்ற வாகனங்களை வழங்கும் நிறுவனம் என்ற பெயரை ஹீரோ மோட்டோகார்ப் இழக்கவுள்ளதுபோல் தெரிகிறது.

Most Read Articles

English summary
Hero Passion Pro, Glamour 125, Xtreme 160R And Xpulse 200 BS6 Price Hiked
Story first published: Thursday, October 8, 2020, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X