கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

கேரளா, கோழிக்கோடை சேர்ந்த மொஹமது அதில் என்பவர் ஹீரோ கரிஷ்மா பைக்கை ஸ்டைலிஷான தோற்றத்திற்கு மறு உருவாக்கம் செய்துள்ளார். மேலும் இந்த கஸ்டமைஸ்ட் பைக்கிற்கு அவர், கடலன் என்ற புதிய பெயரையும் சூட்டியுள்ளார்.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

அதிகளவில் கஸ்டமைஸ்ட் மாற்றங்களை ஏற்றுள்ளதால், இந்த பைக் தற்போது ஸ்க்ராாம்ப்ளர் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த புதிய பைக்கின் புகைப்படங்களை மொஹமது அதில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

பிரேத்யேகமான மற்றும் அதிக செயல்பாடுகளை கொண்ட ஹெட்லைட் அமைப்பை பெற்றுள்ள இந்த கஸ்டமைஸ்ட் பைக், இந்த ஹெட்லைட்டுடன் லென்ஸ் க்ரில், பைக்கின் ஃபோர்க் ஸ்டே-களில் பொருத்தப்பட்ட டர்ன் சிக்னல் இண்டிகேட்டர்கள் மற்றும் ரேலி ஸ்டைலில் முன்புற மட்கார்ட்டையும் கொண்டுள்ளது.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

சிறந்த ரைடிங்கிற்காக, பைக்கிற்கு முக்கோண வடிவத்தை தரும் விதமாக ஹேண்டில்பார் சற்று உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அலுமினியத்தில் ஸ்விட்ச்-கியர் பேனல், சிங்கிள் போட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பக்கவாட்டில் ஸ்டார்ட்டர் மற்றும் கில்-ஸ்விட்ச் போன்றவையும் இந்த பைக் கஸ்டமைஸ்ட் அப்டேட்களாக ஏற்றுள்ளது.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

இவற்றுடன் எரிபொருள் டேங்கில் காம்பஸ், எரிபொருள் டேங்கிற்கு அடியில் சிறிய அளவில் வயரிங் மற்றும் ஸ்விங் ஆர்ம்-க்கு அருகில் நேர்த்தியாக பொருத்தப்பட்ட பேட்டரியையும் கஸ்டமைஸ்ட் கரிஷ்மா ஆர் பைக் மாடல் பெற்றுள்ளது.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

பக்கவாட்டு பேனலுக்கு பின்புறத்தில் சற்று விலகலாக புதியதாக பொருத்தப்பட்டுள்ள பாக்ஸில் ஏர் இண்டேக் சிஸ்டத்தை இந்த கஸ்டம் பைக் கொண்டுள்ளது. ஹீரோ இம்பல்ஸ் பைக்கில் உள்ள முன்புற ஃபோர்க்குகள் அப்படியே இந்த பைக்கிற்கு மாற்றப்பட்டுள்ளன.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

இதனால் இந்த கஸ்டமைஸ்ட் பைக்கில் வெவ்வேறு விதமான சாலைகளிலும் ஹேண்ட்லிங் சிறப்பாக இருக்கும். ஹீரோ நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் பொருத்தப்பட்ட வழக்கமான கால் வைக்கும் பகுதி மற்றும் கியர் லிவருக்கு பதிலாக மிகவும் முரட்டுத்தனமான மற்றும் அதிக நீளம் கொண்ட பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

கையால் வளையாத இரும்பால் தயாரிக்கப்பட்ட எக்ஸாஸ்ட் அமைப்பை இந்த பைக் பெற்றுள்ளது. இதன் ஒரு எக்ஸாஸ்ட்டிற்காக இரு எக்ஸாஸ்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் கருமையான பகுதியையும் முன்புறத்தில் 82 என்கிற எழுத்தையும் கொண்ட ஒரே ஒரு பேனல் மட்டும் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

மற்ற பேனல்கள் வளையாத இரும்பு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வழங்கப்படும் வளையும் விதத்திலான பைப்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. பைக்கின் பெரும் பகுதியான பாகங்கள் முன்புறத்தில் உள்ளதால், கரடுமுரடான சாலையிலும் பைக்கின் பின் சக்கரம் மெருதுவான பயணத்தையே மேற்கொள்ளும்.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

சவுகரியமான ஹேண்ட்லிங்கிற்காக ஹேண்ட் க்ராஃப்ட், தடிமனான பாஷ் தட்டு உள்ளிட்டவற்றையும் இந்த கஸ்டமைஸ்ட் பைக் பெற்றுள்ளது. ஸ்க்ராம்ப்ளர் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த கரிஷ்மா பைக்கில் 90/90-19 அளவில் டிம்சுன் டயர் முன்புறத்திலும், 120/90-17 அளவில் ரல்கோ டயர் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு டயர்களும் அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்றவையாகும்.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

கவனிக்கத்தக்க வகையிலான மாற்றமாக எரிபொருள் டேங்கில் பிரிட்டிஷ் பச்சை நிறத்தையும், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் முன்புற மட்கார்டில் சதின் நிறத்தையும், ஹேண்டில்பார் மற்றும் சக்கரங்களின் ரிம்களில் கருப்பு நிறத்தையும் பெயிண்ட் அமைப்பாக இந்த பைக் பெற்றுள்ளது.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

என்ஜினில் எந்த கஸ்டமைஸ்ட் மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை. இதனால் இந்த பைக் அதே 223சிசி ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை தான் கொண்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 19.2 பிஎச்பி பவர் மற்றும் 19.35 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்குகிறது. ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

என்ஜினில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், இந்த பைக்கின் என்ஜினின் திறன் அதிகரித்திருக்கும் என்றே தெரிகிறது. ஏனெனில் இந்த பைக்கின் பெரும்பான்மையான பாகங்கள் நீக்கப்பட்டுள்ளதால் பைக்கின் மொத்த எடை குறைந்திருக்கும்.

கேரள சேத்தனால் புதிய தோற்றத்தை பெற்றிருக்கும் ஹீரோ கரிஷ்மா ஆர்...

இப்படிப்பட்ட ஒரு பைக்கை உருவாக்கி மொஹமது அதில், மிக சிறப்பான பணியை செய்து முடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தயாரிப்பு நிறுத்தப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் கழித்து ஹீரோ கரிஷ்மா ஆர் பைக் கஸ்டமைஸ்ட் மாற்றங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: dsmoke78/Instagram

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hero Karizma R Modified By Calicut Based Mohamed Adhil
Story first published: Monday, January 27, 2020, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X