அட்டகாசமான ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டீல்த் விற்பனைக்கு அறிமுகம்... இதுதான் ஆக்டிவாவிற்கு போட்டி?..

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு போட்டியளிக்கும் வகையில் ஹீரோ நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டீல்த் சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது ஹீரோவின் அட்டகாசமான ஸ்கூட்டர்... இந்த ஸ்பெஷல் எடிசன் மேஸ்ட்ரோதான் ஆக்டிவாவிற்கு போட்டி!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்றான மேஸ்ட்ரே எட்ஜ் 125 மாடலில் ஸ்டீல்த் எனும் ஸ்பெஷல் எடிசனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோண்டா ஆக்டிவா 125 மாடல் ஸ்கூட்டருக்கு போட்டியளிக்கும் வகையில் களமிறக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டருக்கு ரூ. 72,950 என்ற விலையை அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ஹீரோவின் அட்டகாசமான ஸ்கூட்டர்... இந்த ஸ்பெஷல் எடிசன் மேஸ்ட்ரோதான் ஆக்டிவாவிற்கு போட்டி!

மேற்கூறிய விலை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஹீரோ நிறுவனம் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரை அதன் பிரீமியம் ரக இருசக்கர வாகனங்களின் வரிசையில் நிலை நிறுத்தியிருக்கின்றது. ஸ்கூட்டரில் பல தனி சிறப்புகள் வாய்ந்த அம்சங்கள் இடம்பெற்றிருப்பதே இதற்கு அர்த்தம் ஆகும். ஆம், தற்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான மாடல்களில் காணப்படாத சில சிறப்பு வசதிகளை புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டீல்த் பெற்றிருக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது ஹீரோவின் அட்டகாசமான ஸ்கூட்டர்... இந்த ஸ்பெஷல் எடிசன் மேஸ்ட்ரோதான் ஆக்டிவாவிற்கு போட்டி!

குறிப்பாக, இந்த ஸ்கூட்டரின் நிறம் பார்ப்போரின் கண்களைக் கவர்கின்ற வகையில் காட்சியளிக்கின்றது. இதற்கு முன்னாக ஹீரோவின் எந்த ஸ்கூட்டரும் பெற்றிருக்காத வகையில் சாம்பல் நிறம் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சில்வர் நிறத்திலான கிராஃபிக் ஸ்டிக்கர்கள் ஸ்கூட்டரின் உடல் பகுதியில் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது ஹீரோவின் அட்டகாசமான ஸ்கூட்டர்... இந்த ஸ்பெஷல் எடிசன் மேஸ்ட்ரோதான் ஆக்டிவாவிற்கு போட்டி!

இவையனைத்தும் சேர்ந்து ஹீரோ மோஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டீல்த் ஸ்கூட்டருக்கு அட்டகாசமான ஸ்போர்ட் ஸ்கூட்டரைப் போன்ற தோற்றத்தை வழங்குகின்றது. இந்த ஸ்கூட்டரில் கவனிக்க வேண்டிய மற்றுமொரு சிறப்பு மாற்றமாக பிஎஸ்6 தரத்திலான ப்யூவல் இன்ஜெக்சன் திறனுடைய எஞ்ஜின் உள்ளது. இது எரிபொருள் சிக்கனத்திற்கு உதவும்.

இந்தியாவில் அறிமுகமானது ஹீரோவின் அட்டகாசமான ஸ்கூட்டர்... இந்த ஸ்பெஷல் எடிசன் மேஸ்ட்ரோதான் ஆக்டிவாவிற்கு போட்டி!

இதுமட்டுமின்றி, வயதானவர்கள் ஸ்கூட்டரில் அமர்ந்துக் கொண்டே எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் வகையில் எரிபொருள் நிரப்பும் வாய்ப்பகுதி ஸ்கூட்டரின் பின் பகுதியில் வெளிப்புறத்தில் நிறுவப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் சைடு ஸ்டாண்ட் போட்டிருந்தால் எச்சரிக்கக்கூடிய அலாரம் வசதி உள்ளிட்டவையும் புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமானது ஹீரோவின் அட்டகாசமான ஸ்கூட்டர்... இந்த ஸ்பெஷல் எடிசன் மேஸ்ட்ரோதான் ஆக்டிவாவிற்கு போட்டி!

இதுமட்டுமின்றி, ஹீரோ நிறுவனத்தின் ஐ3எஸ் தொழில்நுட்பமும் இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிக எளிதில் ஸ்கூட்டரை ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்ய உதவும். மேலும், செல்போன்களை சார்ஜ் செய்துகொள்ள ஏதுவாக இருக்கையின் அடிப்பகுதியில் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செல்போன் மட்டுமின்றி பிற சாதனங்களுக்கும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.

இந்தியாவில் அறிமுகமானது ஹீரோவின் அட்டகாசமான ஸ்கூட்டர்... இந்த ஸ்பெஷல் எடிசன் மேஸ்ட்ரோதான் ஆக்டிவாவிற்கு போட்டி!

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டீல்த் ஸ்கூட்டருக்கும், தற்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டருக்கும், உருவம் மற்றும் சிறப்பு வசதிகள் மட்டுமே வித்தியாசமானதாக இருக்கின்றது. ஆகையால், இரு ஸ்கூட்டர்களிலும் ஒரே மாதிரியான எஞ்ஜினே காணப்படுகின்றது.

இந்தியாவில் அறிமுகமானது ஹீரோவின் அட்டகாசமான ஸ்கூட்டர்... இந்த ஸ்பெஷல் எடிசன் மேஸ்ட்ரோதான் ஆக்டிவாவிற்கு போட்டி!

இந்த எஞ்ஜின் 124.6 சிசி திறன் கொண்ட பிஎஸ்6 எஞ்ஜின் ஆகும். எக்ஸ்சென்ஸ் தொழில்நுட்பம் கொண்ட இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 9 பிஎச்பி பவரை 7,000 ஆர்பிஎம்மிலும், 10.4 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது பிஎஸ்4 மாடல் எஞ்ஜினைக் காட்டிலும் 0.1 பிஎச்பி மற்றும் 0.2 என்எம் டார்க் குறைவாகும்.

இந்தியாவில் அறிமுகமானது ஹீரோவின் அட்டகாசமான ஸ்கூட்டர்... இந்த ஸ்பெஷல் எடிசன் மேஸ்ட்ரோதான் ஆக்டிவாவிற்கு போட்டி!

தற்போது அறிமுகமாகியிருக்கும் புதிய ஸ்கூட்டரில் சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் ஸ்கூட்டரின் முன் பக்கத்திலும், மோனோ ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது இந்தியாவின் பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலைகளில் பயணிக்க ஏதுவாக இருக்கும்.

இந்தியாவில் அறிமுகமானது ஹீரோவின் அட்டகாசமான ஸ்கூட்டர்... இந்த ஸ்பெஷல் எடிசன் மேஸ்ட்ரோதான் ஆக்டிவாவிற்கு போட்டி!

இத்துடன், ஸ்கூட்டரின் தற்போதைய புதிய அட்டகாசமான தோற்றத்தை எடுப்பாக காட்டும் வகையில் கருப்பு நிறம் கொண்ட அலாய் வீல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த வீலின் எட்ஜ் பகுதியில் வெள்ளை நிற ஸ்டிக்கர் வட்டமடிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக சிபிஎஸ் வசதியுடன் கூடிய ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hero Maestro Edge 125 Stealth Launched In India: Prices Start At Rs 72,950. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X