கொரோனாவைவிட அதிக ஷாக் கொடுத்த ஹீரோ.. 2020ஐ விட மிக மோசமான வருஷம் ஒன்னு இருக்கவே முடியாது!
கொரோனாவைவிட அதிக ஷாக்கைக் கொடுக்கும் வகையில் ஹீரோ நிறுவனம் ஓர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒட்டுமொத்த உலகையும் கண்ணுக்கே புலப்படாத ஒற்றை வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது.
2019ம் ஆண்டின் இறுதியிலேயே இந்த வைரஸ் தொற்று காண்டறியப்பட்டிருந்தாலும், நடப்பு 2020ம் ஆண்டின் ஆரம்பித்திலிருந்துதான் அதன் ருத்ர தாண்டவம் உக்கிரமாக ஆரம்பித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இயக்கமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

மேலும், கொடிய உயிர் கொல்லி வைரசின் மீதுள்ள அச்சத்தால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மருத்துவத்துறையில் பல மடங்கு வளர்ச்சியைக் கண்ட நாடுகள்கூட இந்த வைரசின் தாற்காத்துக் கொள்ள திணறி வருகின்றன. ஏன், உலக சுகாதாரத்துத் துறைக்கே இது செம்ம டஃப் கொடுத்து வருகின்றது. குறிப்பாக, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே பேராபத்தை விளைவிக்கும் வகையில் அது பரவி, இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. மேலும், இந்த வைரஸ் தொற்றுக்கான மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது இன்னும் வேதனையளிக்கும் வகைல் உள்ளது. இவ்வாறு, கொரோனா வைரஸ் உலகை ஒரு பக்கம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கையில், இந்தியர்களுக்கு கூடுதல் சோகத்தை ஏற்படுத்துகின்ற வகையிலான ஓர் செய்தியை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பழம் பெரும் முன்னணி இருசக்கர வாகனங்களில் ஹீரோ மோட்டோகார்ப் முன்னணியில் உள்ளது. இதனாலயே இந்நிறுவனம் இந்திய இருசக்க வாகன உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படுகின்றது.
ஆனால், அண்மைக் காலங்களாக இந்நிறுவனம் விற்பனை வீழ்ச்சியாக தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றது. கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய இந்த வீழ்ச்சி, தற்போது வரை (கொரோனா வைரஸ் காரணமாக) தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், அதன் பிரபல டூ-வீலர் மாடல்கள் சிலவற்றை விற்பனையில் இருந்து விளக்கிக் கொள்ள ஹீரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில், அதன் அதிகாரப்பர்வ இணையதள பக்கத்தில் இருந்த குறிப்பிட்ட மோட்டார்சைக்கிள்களை நீக்கியுள்ளது.
அது, கடந்த வருடம் அறிமுகம் செய்த எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் உள்ளிட்ட 200சிசி பைக்குகள் சிலவற்றை நீக்கியுள்ளது.

இந்த பைக்குகளை நீக்குவதற்கு கடந்த 1ம் தேதி அமலுக்குக் கொண்டுவரப்பட்ட புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதியே காரணமாக உள்ளது. மேலும், தற்போது நீக்கப்பட்டிருக்கும் பைக்குகள் அனைத்தும் பிஎஸ்-4 மாடல்கள் என கூறப்படுகின்றது. அவை, பிஎஸ்-6 அறிமுகத்திற்கு பின்னர் மீண்டும் இணையத்தில் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பைக்குகளை நீக்குவதற்கு கடந்த 1ம் தேதி அமலுக்குக் கொண்டுவரப்பட்ட புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதியே காரணமாக உள்ளது. மேலும், தற்போது நீக்கப்பட்டிருக்கும் பைக்குகள் அனைத்தும் பிஎஸ்-4 மாடல்கள் என கூறப்படுகின்றது. அவை, பிஎஸ்-6 அறிமுகத்திற்கு பின்னர் மீண்டும் இணையத்தில் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கூறிய அனைத்து மோட்டார் சைக்கிள்களும் ஹீரோவின் 'எக்ஸ்' குடும்பத்தைச் சேர்ந்த பைக்குகள் ஆகும். இவை ஒரே எஞ்ஜினைக் கொண்டவை. ஆனாலும் வித்தியாசமான தோற்றம் மற்றும் ஸ்டைலைக் கொண்டவையாக இருக்கின்றன.

அந்தவகையில், எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைககிற்கு நேக்கட் ஸ்ட்ரீட் ஸ்டைல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, எக்ஸ்பல்ஸ் 200டி மாடலுக்கு டூரிங் ஸ்டைலும், எக்ஸ்பல்ஸ் 200-க்கு அட்வென்சர் லுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இவையனைத்திலும் 199.6சிசி திறனுடைய ஏர் கூல்ட் தான் காணப்படுகின்றது.

அந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி மற்றும் 17.1 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த மன்று பைக்குகளும் மலிவு விலைக் கொண்ட மாடலாக உள்ளன. எக்ஸ்ட்ரீம் 200ஆர் 93,400 என்ற விலையிலும், எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 டி மாடல்கள் ரூ. 1.02 லட்சம் மற்றும் ரூ. 96.500 என்ற விலைக்கு விற்பனைச் செய்யப்பட்டன. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.


Click it and Unblock the Notifications








