சமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா! மிரள வைக்கும் விற்பனை

கடந்த ஜூன் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமான ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆச்சிரியமளிக்கும் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா! மிரள வைக்கும் விற்பனை

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 6,97,293 மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 6,00,509 ஹீரோ மோட்டார்சைக்கிள்கள் விற்பனையான 2019 செப்டம்பர் மாதத்தை காட்டிலும் 16.1 சதவீதம் அதிகமாகும்.

சமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா! மிரள வைக்கும் விற்பனை

கடந்த மாதம் மொத்தம் விற்பனையான விற்பனையான மோட்டார்சைக்கிள்களில் 37.70 சதவீதம் ஹீரோ நிறுவனத்துடையது ஆகும். ஆனால் ஜூன் மாதத்தில் இந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஊரடங்கு உத்தரவுகளினால் வெறும் 6,639 யூனிட் மோட்டார்சைக்கிள்களின் விற்பனையை மட்டும்தான் பெற்றிருந்தது.

சமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா! மிரள வைக்கும் விற்பனை

இந்த எண்ணிக்கை தற்போது இந்நிறுவனம் பதிவு செய்யும் எண்ணிக்கைக்கும் மிக பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. அதாவது இந்த 6 ஆயிரத்து சொச்சம் எண்ணிக்கையை அதே ஜூன் மாதத்தில் அறிமுகமான நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர், எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கே இப்போது முறியடிக்கிறது.

சமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா! மிரள வைக்கும் விற்பனை

ஆகஸ்ட்டில் 12,000 எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்குகள் விற்பனையான நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த பைக்கின் 12,930 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த 160சிசி ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக் இந்த அக்டோபர் மாதத்திலும் நிச்சயம் 10,000-க்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையை பதிவு செய்யும் என்பது உறுதி.

சமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா! மிரள வைக்கும் விற்பனை

கடந்த 2020 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஹீரோ வேர்ல்டு நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக், 1.ஆர் கான்செப்ட்டில் இருந்து தோற்றத்தை பெற்றுள்ளது. பைக்கின் நீளம் 1,052 மிமீ மற்றும் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 12 லிட்டர்கள் ஆகும்.

சமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா! மிரள வைக்கும் விற்பனை

163சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பிஎஸ்6 தரத்தில் ஃப்யுல் இன்ஜெக்சன் தொழிற்நுட்பத்துடன் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-ல் 15 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்த பைக் 0-வில் இருந்து 60kmph என்ற வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டிவிடும்.

சமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா! மிரள வைக்கும் விற்பனை

விற்பனையில் பஜாஜ் பல்சர் என்எஸ்160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் ஹோண்டா ஹார்னெட் 2.0 உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக விளங்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் விலை ரூ.1.02 லட்சம் மற்றும் ரூ.1.05 லட்சமாக உள்ளது. இந்த மலிவான எக்ஸ்ஷோரூம் விலைகள் தான் இந்த பைக்கிற்கு கிடைக்கும் வரவேற்பிற்கு முக்கிய காரணம்.

Most Read Articles

English summary
Hero Motocorp sold 12,930 units of new Xtreme 160R in september 2020.
Story first published: Tuesday, October 27, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X