ஹோண்டாவை ஓரம் கட்டிய ஹீரோ... இந்திய ஜாம்பவானின் செயலால் உறைந்துபோன ஜப்பான் ஜாம்பவான்... முழு விபரம்!

ஜப்பான் நாட்டு நிறுவனமான ஹோண்டாவை இந்திய ஜாம்பவான் ஹீரோ அரையாண்டு விற்பனையில் ஓரங்கட்டியுள்ளது.

ஹோண்டாவை ஓரம் கட்டிய ஹீரோ... இந்திய ஜாம்பவானின் செயலால் உறைந்துபோன ஜப்பான் ஜாம்பவான்... முழு விபரம்...

இந்திய இருசக்கர வாகன சந்தையின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ, ஜப்பான் நாட்டு நிறுவனமான ஹோண்டாவை விற்பனையில் ஓரம் கட்டியிருக்கின்றது. இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த இருசக்கர வாகனங்களில் ஹோண்டாவின் ஆக்டிவாவும், ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கும் உள்ளது.

ஹோண்டாவை ஓரம் கட்டிய ஹீரோ... இந்திய ஜாம்பவானின் செயலால் உறைந்துபோன ஜப்பான் ஜாம்பவான்... முழு விபரம்...

எனவே ஒவ்வொரு மாதமும் இந்த இருசக்கர வாகனங்களின் விற்பனை பிற வாகனங்களைக் காட்டிலும் எக்கசக்கமாக இருப்பது வழக்கம்தான். குறிப்பாக இரண்டு இருசக்கர வாகனங்களுக்கும் இடையே விற்பனையில் கடும் போட்டி நிலவும். ஸ்பிளெண்டரை ஆக்டிவாவும், ஆக்டிவாவை ஸ்பிளெண்டரும் அவ்வப்போது விற்பனையில் ஓரங்கட்டும்.

ஹோண்டாவை ஓரம் கட்டிய ஹீரோ... இந்திய ஜாம்பவானின் செயலால் உறைந்துபோன ஜப்பான் ஜாம்பவான்... முழு விபரம்...

ஆனால், பெரும்பாலும் ஆக்டிவா ஸ்கூட்டரே ஸ்பிளெண்டர் பைக்கை விற்பனையில் முந்தும். இந்தநிலையில், வெகுநாட்களுக்கு பிறகு ஹீரோ ஸ்பிளெண்டர் ஆக்டிவாவை விற்பனையில் மிஞ்சியிருக்கின்றது. ஹீரோ ஸ்பிளெண்டர் விலைக் குறைவான, அதிக நம்பகத் தன்மை வாய்ந்த இருசக்கர வாகனமாக இருக்கின்றது.

ஹோண்டாவை ஓரம் கட்டிய ஹீரோ... இந்திய ஜாம்பவானின் செயலால் உறைந்துபோன ஜப்பான் ஜாம்பவான்... முழு விபரம்...

எனவேதான், இந்தியர்கள் மத்தியில் இந்த இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு நீண்ட ஆண்டுகளாக கிடைத்து வருகின்றது. அதேசமயம், ஹீரோ ஸ்பிளெண்டரின் தற்போதைய வெற்றிக்கு பின்னால் சொற்ப அளவிலான யூனிட்டுகளே வித்தியாசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டாவை ஓரம் கட்டிய ஹீரோ... இந்திய ஜாம்பவானின் செயலால் உறைந்துபோன ஜப்பான் ஜாம்பவான்... முழு விபரம்...

நடப்பு நிதியாண்டின் முதல் பாதி விற்பனைப் புள்ளி விவரம்; 2020 ஏப்ரல்-செப்டம்பர் வரை ஹீரோ நிறுவனம் ஒட்டுமொத்தமாமக 2,378,109 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்துள்ளது. இதில், 9,48,228 யூனிட்டுகள் ஸ்பிளெண்டர் பைக்குடையதாகும். அதேசமயம், ஹோண்டாவின் ஆக்டிவா விற்பனை எண்ணிக்கையைப் பார்த்தோமேயானால் 7,19,914 யூனிட்டுகளாக உள்ளன.

ஹோண்டாவை ஓரம் கட்டிய ஹீரோ... இந்திய ஜாம்பவானின் செயலால் உறைந்துபோன ஜப்பான் ஜாம்பவான்... முழு விபரம்...

இவ்விரு இருசக்கர வாகனங்களுக்கும் அடுத்தபடியாக டிவிஎஸ் ஜூபிடர் இருக்கின்றது. அதாவது, ஸ்பிளெண்டர், ஆக்டிவா ஆகிய இரு சக்கர வாகனங்களுக்கு அடுத்தபடியான இடத்தை டிவிஎஸ் ஜூபிடர் பிடித்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 2,03,899 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

ஹோண்டாவை ஓரம் கட்டிய ஹீரோ... இந்திய ஜாம்பவானின் செயலால் உறைந்துபோன ஜப்பான் ஜாம்பவான்... முழு விபரம்...

கொரோனா வைரஸ் பரவலால் அதலபாதாளத்தில் வீழ்ந்திருந்த வாகன விற்பனை தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு தற்போதைய விழாக் காலமே முக்கிய காரணம் ஆகும். இந்தியர்கள் பலர் விழாக் காலத்தை புதிய வாகனங்களுடன் கொண்டாடும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஹோண்டாவை ஓரம் கட்டிய ஹீரோ... இந்திய ஜாம்பவானின் செயலால் உறைந்துபோன ஜப்பான் ஜாம்பவான்... முழு விபரம்...

இதுமட்டுமின்றி, பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளையும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாரி வழங்க ஆரம்பித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாகவே இந்தியாவில் வாகன விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Most Read Articles
English summary
Hero Splendor Is Most Selling Two-Wheeler Of The Current Fiscal First Half. Read In Tamil.
Story first published: Friday, November 13, 2020, 20:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X