ஒன்றல்ல, இரண்டல்ல... ஒட்டுமொத்தமாக 3 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்...

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் புத்தம் புதிய மூன்று மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒன்றல்ல, இரண்டல்ல... ஒட்டுமொத்தமாக 3 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்...

இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் ஹீரோ நிறுவனம், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தனி பிராண்டை அறிமுகம் செய்து மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல... ஒட்டுமொத்தமாக 3 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்...

ஹீரோ எலெக்ட்ரிக் என்னும் இந்த பிராண்டில் பெரும்பாலும் இ-ஸ்கூட்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில், தற்போது நடைபெற்று வரும் 2020ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சியில் அது புத்தம் புதிய மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்சிப்படுத்தியுள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல... ஒட்டுமொத்தமாக 3 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்...

இதில், ஏஇ29 எனப்படும் புத்தம் புதிய மின்சார ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 55 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இதில், 1kW திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான சக்தி 3.5kWh திறன் கொண்ட பேட்டரியில் இருந்து கிடைக்கின்றது.

இந்த ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு நேரங்கள் தேவைப்படும்.

ஒன்றல்ல, இரண்டல்ல... ஒட்டுமொத்தமாக 3 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்...

இந்த ஸ்கூட்டரில் ஐஓடி அம்சம் வழங்கப்பட்டிருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. ப்ளூடூத் கன்னெக்டிவிட்டி, ஆன்ட் தெஃப்ட், ஸ்மார்ட் லாக், மொபைல் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், வால்க் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் கியர் உள்ளிட்ட இந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் ஐஓடி வாயிலாகவே வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல... ஒட்டுமொத்தமாக 3 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்...

இதுதவிர உயர் ரக வேகம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஏஇ75 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சஹாரா இவோல்ஸ் நிறுவனத்துடன் கூட்டணியுடன் ஹீரோ எலெக்ட்ரிக் உருவாக்கியிருக்கின்றது.

இந்த மின்சார ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

ஒன்றல்ல, இரண்டல்ல... ஒட்டுமொத்தமாக 3 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்...

தொடர்ந்து ஒரு முழுமையான சார்ஜில் 80 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கும். இத்துடன், குறைந்த வேகம் கொண்ட ஏஇ8 மாடல் மின்சார ஸ்கூட்டரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல... ஒட்டுமொத்தமாக 3 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்...

இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 முதல் ஆறு மணி நேரங்கள் வரை தேவைப்படுகின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல... ஒட்டுமொத்தமாக 3 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்...

இந்த மின்சார ஸ்கூட்டர்களுடன் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், அதன் முதல் மின்சார பைக்கையும் இந்த ஆட்டோ எக்ஸ்போ 2020-யில் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படவில்லை.

ஹீரோவின் இந்த மின்சார பட்டாளம் இந்திய மின்வாகனத்தை ஒட்டுமொத்தமாக ஆளுகை செய்யும் வகையில் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 22:44 [IST]
English summary
Hero Unveils Three New Electric Scooters At Auto Expo 2020. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+