இந்தியாவின் மலிவான அட்வென்ஜெர் பைக்... ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

இந்தியாவின் மலிவான அட்வென்ஜெர் மோட்டார்சைக்கிளான ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 ஒரு வழியாக பிஎஸ்6 தரத்தில் அப்டேட் செய்யப்பட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் மலிவான அட்வென்ஜெர் பைக்... ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

ஹீரோ நிறுவனம் பிஎஸ்6 எக்ஸ்பல்ஸ்200 பைக்கை ரூ.1,11,790 விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.6.790 அதிகமாகும். அறிமுகமாகிவிட்டதால் வரும் வாரங்களில் டீலர்களை சென்றடையவுள்ள இந்த பிஎஸ்6 பைக்கின் டெலிவிரிகள் அதனை தொடர்ந்து துவங்கப்படவுள்ளன.

இந்தியாவின் மலிவான அட்வென்ஜெர் பைக்... ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன. பிஎஸ்6 எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 199.6சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் இனி அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-ல் 18.08 பிஎச்பி பவரையும், 6500 ஆர்பிஎம்-ல் 16.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்தியாவின் மலிவான அட்வென்ஜெர் பைக்... ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

இது இதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் 0.32 பிஎச்பி மற்றும் 0.65 என்எம் டார்க் திறன் அதிகமாகும். ஏனெனில் என்ஜின் அமைப்பில் கார்ப்ரேட்டர் சிஸ்டத்திற்கு மாற்றாக ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு அப்டேட்டாக என்ஜினில் ஆயில் கூலர் யூனிட் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவின் மலிவான அட்வென்ஜெர் பைக்... ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

2018 ஆட்டோ எக்ஸ்போ மற்றும் ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் ஆயில் கூலர் தான் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஹீரோ நிறுவனம் பிஎஸ்6 என்ஜினில் பொருத்தப்படுவதற்கு முன்பாக ஆயில் கூலர் சிஸ்டத்துடன் பைக்கை சர்வதேச ராலிங் சுற்றிலும் சோதனையில் உட்படுத்தியது.

இந்தியாவின் மலிவான அட்வென்ஜெர் பைக்... ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

இந்த 200சிசி பைக்கிற்கு ராலி கிட்டையும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இதனால் நீண்ட ட்ராவல் சஸ்பென்ஷன், மேக்ஸிஸ் க்னாப்பிஸ், பெரிய ராலி இருக்கை, நீண்ட சைட் ஸ்டாண்ட், ஹேண்டில்பார் ரைசர்ஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட கியர் ஷிஃப்டர் பெடல் உள்ளிட்டவை அடங்கிய இந்த ராலி கிட் ரூ.38,000 என்ற விலையில் விரைவில் டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்தியாவின் மலிவான அட்வென்ஜெர் பைக்... ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

ஸ்டாக் பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்புகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், கூடுதல் ராலி கிட்டை வாங்குவதின் மூலம் அதில் உள்ள சஸ்பென்ஷன் அமைப்பு சஸ்பென்ஷன் ட்ராவலை அதிகரிக்க முடியும். மேலும் இதனால் பைக்கின் கிரவுண்ட் கிளியரென்ஸும் அதிகரிக்கிறது.

இந்தியாவின் மலிவான அட்வென்ஜெர் பைக்... ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

ராலி கிட் உடன் எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்கை வாங்கினாலும் மொத்தமாக ஆகும் செலவு ராயல் எண்ட்பீல்டின் ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கை காட்டிலும் குறைவு தான். ஏனெனில் ஹிமாலயனின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.89 லட்சமாக உள்ளது. இந்த வகையில் நீங்கள் ரூ.40,000 அளவில் மிச்சப்படுத்த முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 16, 2020, 14:38 [IST]
English summary
Hero Xpulse 200 BS6 Launched In India
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+