ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்கின் ஆற்றல் அளவுகள் குறைப்பு... கெர்ப் எடை அதிகரித்தது...

ஹீரோ நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு பைக் ஆஃப் தி இயர் 2019 விருதை பெற்ற எக்ஸ்பல்ஸ் 200 பைக் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டால் என்ஜின் பைக்கிற்கு வழங்கக்கூடிய ஆற்றல் அளவு கணிசமான அளவு குறைந்துள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்கின் ஆற்றல் அளவுகள் குறைப்பு... கெர்ப் எடை அதிகரித்தது...

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த பைக்கின் இயக்க ஆற்றல் அளவுகளில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்களை ஹீரோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 'எக்ஸ்' குடும்பத்தின் ஒரு பகுதியாக எக்ஸ்பல்ஸ் 200 மாடல் விளங்குகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்கின் ஆற்றல் அளவுகள் குறைப்பு... கெர்ப் எடை அதிகரித்தது...

இந்த எண்ட்ரீ-லெவல் அட்வென்ஜெர் மோட்டார்சைக்கிளில் வழக்கமான 199.6சிசி என்ஜின் தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் தற்போது பிஎஸ்6 அப்டேட்டால் ஏர்/ஆயில்-கூலிங் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷனை நிலையாக பெற்றுள்ளது. இதனால் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 17.8 பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்-லும், 6,400 ஆர்பிஎம்-ல் 16.4 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கவுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்கின் ஆற்றல் அளவுகள் குறைப்பு... கெர்ப் எடை அதிகரித்தது...

இந்த என்ஜின் தற்சமயம் பிஎஸ்4 தரத்தில் 8,000 ஆர்பிஎம்-ல் 18.1 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகிறது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வருகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்கின் ஆற்றல் அளவுகள் குறைப்பு... கெர்ப் எடை அதிகரித்தது...

என்ஜின் அப்டேட் உடன் இந்த பிஎஸ்6 பைக்கின் மொத்த எடையிலும் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பிஎஸ்4 தரத்தில் 154 கிலோவாக இருந்த எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் எடை பிஎஸ்6 மாற்றத்தால் 157 கிலோவாக அதிகரித்துள்ளது. இதேபோல் எக்ஸாஸ்ட் குழாயின் பொசிஷனும் இந்த பிஎஸ்6 மாடலில் மாற்றப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்கின் ஆற்றல் அளவுகள் குறைப்பு... கெர்ப் எடை அதிகரித்தது...

பிஎஸ்6 எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் எக்ஸாஸ்ட் குழாய் என்ஜினிற்கு அடிப்பகுதியில் இருந்து வெளியே வருவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்ஜினின் பெல்லி-பேனின் டிசைனிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறிமுகத்திற்கு பின்பு அறிய முடியும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்கின் ஆற்றல் அளவுகள் குறைப்பு... கெர்ப் எடை அதிகரித்தது...

பைக்கின் மற்ற மெக்கானிக்கல் பாகங்கள் மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் வழக்கமான எல்இடி ஹெட்லேம்ப்கள், அகலமான ஆஃப்-ரோடிற்கு ஏற்ற பின்பக்கம் பார்க்கும் கண்ணாடிகள், மேற்புறமாக வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் அமைப்பு உள்ளிட்டவை அப்படியே தொடர்ந்துள்ளன.

இவற்றுடன் ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்ட முழுவதும் டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் உள்ளிட்ட வசதிகளும் இந்த பிஎஸ்6 பைக் பெற்றிருக்கும். சஸ்பென்ஷனிற்கு இந்த பைக் 37மிமீ தொலைத்தூர பயணத்திற்கான டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸை முன்புறத்திலும், 10 விதமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக்கை பின்புறத்திலும் கொண்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்கின் ஆற்றல் அளவுகள் குறைப்பு... கெர்ப் எடை அதிகரித்தது...

ப்ரேக்கிங்கிற்கு முன் மற்றும் பின் சக்கரத்தில் முறையே 276மிமீ மற்றும் 220மிமீ-ல் பெடல் டிஸ்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக் சிஸ்டமும் உள்ளது. மேலும் ஹீரோ நிறுவனம் இந்த பைக்கிற்கு ரேலி கிட்டை வழங்குவதையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்கின் ஆற்றல் அளவுகள் குறைப்பு... கெர்ப் எடை அதிகரித்தது...

முன்னதாக இந்நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200டி, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் 200எஸ் பைக்குகளின் பெயர்களை இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதனால் இவற்றின் விற்பனை இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கான காரணத்தை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்கின் ஆற்றல் அளவுகள் குறைப்பு... கெர்ப் எடை அதிகரித்தது...

ஹீரோ இம்பல்ஸ் மாடலின் அப்டேட் வெர்சனாக எக்ஸ்பல்ஸ் 200 பைக் எண்ட்ரீ-லெவல் அட்வென்ஜெர் மோட்டார்சைக்கிளாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரு மோட்டார்சைக்கிள்களிலும் செயல்படுதிறன் பெரிய அளவில் இல்லை. இதற்கிடையே தற்போது எக்ஸ்பல்ஸ் மாடலின் ஆற்றல் குறைக்கப்பட்டு எடை அதிகரிக்கப்பட்டிருப்பது இதன் விற்பனையை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 8, 2020, 11:46 [IST]
English summary
Hero Xpulse 200 bs6 specification revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+