ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர்!

இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட வாகனங்களை டிசம்பருக்குள் விற்று தீர்ப்பதற்காக பல சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வாகன நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது 200எஸ் பைக்கிற்கு சிறப்பு சேமிப்புச் சலுகையை அறிவித்துள்ளது.

 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர்!

புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை வாங்குவோருக்கு ரூ.4,000 தள்ளுபடியை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. பழைய பைக்கை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் போனசாவும், ஹீரோ பைக் வைத்திருக்கும் பழைய வாடிக்கையாளர்கள் நேரடியாக லாயல்டி போனசாகவும் இந்த தள்ளுபடியை பெற முடியும்.

 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர்!

அண்மையில்தான் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1.15 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்த இந்த பைக் 200 சிசி ரக மார்க்கெட்டில் மிகவும் சரியான விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர்!

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 199சிசி ஆயில் கூல்டு எஞ்சின் உள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 17.8 பிஎச்பி பவரையும், 16.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர்!

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்6 மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், புதிய இருக்கை அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. பின்புறத்தில் உள்ள கவுல் அமைப்பில் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர்!

முழுமையான ஃபேரிங் பேனல்களுடன் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ள இந்த பைக்கில் கனெக்டெட் தொழில்நுட்பமும் உள்ளது. இதன்மூலமாக, ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொண்டு நேவிகேஷன், எஸ்எம்எஸ் மற்றும் போன் அழைப்புகள் வருவது குறித்த தகவல்களை பெற முடியும்.

 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர்!

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 7 ஸ்பீடு அட்ஜெஸ்ட் கொண்ட மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. முன்சக்கரத்தில் 276 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர்!

இந்த பைக் பியர்ல் ஃபேட்லெஸ் ஒயிட், ஸ்போர்ட்ஸ் ரெட், பாந்தர் பிளாக் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த பைக் கேடிஎம் ஆர்சி200, பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.

Most Read Articles

English summary
Hero MotoCorp has announced a new offer for the Xtreme 200S motorcycle in the Indian market. The company has announced a discount of Rs 4,000 when customers exchange their old motorcycle for a new Hero Xtreme 200S.
Story first published: Thursday, December 17, 2020, 10:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X