இந்தியா-மேட் பைக்கில் மாஸ்க் அணிந்தவாறு வலம் வந்த பிரபல ஹாலிவுட் ஹீரோ... வைரல் புகைப்படங்கள்!

மாஸ்க் அணிந்தவாறு பிரபல ஹாலிவுட் ஹீரோ ஒருவர் இந்தியா-மேட் பைக்கில் வலம் வருவதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவர் யார், அந்த பைக்கின் விலை மற்றும் சுவாரஷ்ய தகவல்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியா-மேட் பைக்கில் மாஸ்க் அணிந்தவாறு வலம் வந்த பிரபல ஹாலிவுட் ஹீரோ... இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்!

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டாராட் எனும் பெயரில் பிரீமியம் ரக இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இதன் சொகுசு கார்களைப் போலவே பைக்குகளும் அதிக விலைக் கொண்டவை ஆகும். இவற்றிற்கான உற்பத்தி ஆலைகள் உலகின் பல்வேறு மூலைகளில் செயல்பட்டு வருகின்றன.

இந்தியா-மேட் பைக்கில் மாஸ்க் அணிந்தவாறு வலம் வந்த பிரபல ஹாலிவுட் ஹீரோ... இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்!

அந்தவகையில் இந்தியாவில், தமிழகத்தில் இந்நிறுவனத்திற்கான இருசக்கர வாகன தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் இருசக்கர வாகனங்கள் உள்நாட்டு சந்தைக்காக மட்டுமின்றி உலக நாடுகளுக்காகவும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

இந்தியா-மேட் பைக்கில் மாஸ்க் அணிந்தவாறு வலம் வந்த பிரபல ஹாலிவுட் ஹீரோ... இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்!

அந்தவகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதிச் செய்யப்படும் பைக்குகளில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் மாடலும் ஒன்று. தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்தில் பிரபல ஹாலிவுட் ஹீரோ, இந்த பைக்கைதான் இயக்கியிருக்கின்றார். இதுகுறித்த படங்களே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்த ஹீரோ வேறு யாரும் இல்லை, அதிரடி காட்சிகளுக்கும், ஆக்ஷன் சீன்களுக்கும் பெயர்போன நடிகர் டாம் க்ரூஸ்தான் அவர்.

இந்தியா-மேட் பைக்கில் மாஸ்க் அணிந்தவாறு வலம் வந்த பிரபல ஹாலிவுட் ஹீரோ... இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்!

இவரே, போலீஸ் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கை மாஸ்க் அணிந்தவாறு இயக்கியிருக்கின்றார். மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்திற்கான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு, திரைப்படத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டு வரும் ஆக்ஷன் சீனின் ஒரு பகுதியே புகைப்படங்களாக தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

இந்தியா-மேட் பைக்கில் மாஸ்க் அணிந்தவாறு வலம் வந்த பிரபல ஹாலிவுட் ஹீரோ... இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்!

டாம் க்ரூஸின், மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களில் பைக், கார் என வாகனங்களைச் சார்ந்து ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் பொதுவான விஷயம். ஏன், இந்த திரைப்படத்தில் ஸ்டண்ட் காட்சிக்காக விமானங்கள்கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவேதான், இத்திரைப்படத்திற்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் நிலவி வருகின்றனர். அந்தவகையிலேயே, மிஷன் இம்பாசிபிள் 7ம் பாகத்தின் விருவிருப்பான காட்சிக்காக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஜிஎஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா-மேட் பைக்கில் மாஸ்க் அணிந்தவாறு வலம் வந்த பிரபல ஹாலிவுட் ஹீரோ... இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்!

இந்த பைக் இந்தியாவில் பிஎஸ்-6 தரத்தில் மிக சமீபத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ. 2.85 லட்சங்கள் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. பிஎஸ்6 தர உயர்வுடன் லேசான உருவ மாற்றத்தையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த பைக்கில் வழங்கியிருக்கின்றது. அட்வென்சர் தோற்றத்தை கணிசமாக மெருகேற்றும் வகையில் அந்த மாற்றம் அமைந்திருக்கின்றது.

இந்தியா-மேட் பைக்கில் மாஸ்க் அணிந்தவாறு வலம் வந்த பிரபல ஹாலிவுட் ஹீரோ... இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்!

இதுமட்டுமின்றி கூடுதல் நிறத்தேர்வும் இந்த பைக்கில் தற்போது கிடைக்கின்றது. சிவப்பு நிற ஹைலெட்டுகளுடன் நீலம் மற்றும் கருப்பு வண்ண ஷேட்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இதன் டிரெல்லிஸ் ஃபிரேம்களுக்கு சிவப்பு நிற பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, புதிய வகையிலான தொழிற்நுட்ப அம்சங்களும் இப்பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்தியா-மேட் பைக்கில் மாஸ்க் அணிந்தவாறு வலம் வந்த பிரபல ஹாலிவுட் ஹீரோ... இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்!

அந்தவகையில், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவை லேட்டஸ்ட் அப்டேட்டாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், மெக்கானிக்கல் அம்சத்தில் பிஎஸ்-6 தர மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்தியா-மேட் பைக்கில் மாஸ்க் அணிந்தவாறு வலம் வந்த பிரபல ஹாலிவுட் ஹீரோ... இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்!

பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கில் 312.2 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ப்யூவல் இன்ஜெக்டட், லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 34 பிஎஸ் பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்த உதவும். இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

இந்தியா-மேட் பைக்கில் மாஸ்க் அணிந்தவாறு வலம் வந்த பிரபல ஹாலிவுட் ஹீரோ... இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்!

இந்த சிறப்பு வாய்ந்த பைக்கைதான் அதிரடி ஆக்ஷன் நாயகன் டாம் க்ரூஸ் புதிய படத்தின் விரு விருப்பான காட்சிக்காக பயன்படுத்தியிருக்கின்றார். இந்த பைக்கின் போலீஸ் வெர்ஷன் மட்டுமின்றி வழக்கமான மாடலையும் இதே படத்திற்காக அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இதில், வீலிங் போன்ற ஸ்டண்ட் காட்சிகளை டூப்பே இல்லாமல் அவர் நிகழ்த்தியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hollywood actor Tom Cruise spotted with India-made BMW G 310 GS. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X