மிக குறைந்த விலை இ-பைக் அறிமுகம்... இதை ஓட்டுவதற்கு லைசென்ஸ், ஆர்சி தேவையில்லை... அட்டகாசமான ஸ்டைல்!

உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்ட இ-பைக் ஒன்று மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மிக குறைந்த விலை இ-பைக் அறிமுகம்... இதை ஓட்டுவதற்கு லைசென்ஸ், ஆர்சி தேவையில்லை... அட்டகாசமான ஸ்டைல்!

உலக முழுவதிலும் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்தியர்கள் மத்தியிலும் இதன் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கேற்ப, முன்பைக் காட்டிலும் கடந்த சில காலங்களாக மின் வாகனங்களின் விற்பனை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. இதற்கு, மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்தியா கூடுதல் தீவிரம் காட்டுவதே மிக முக்கியமான காரணம் ஆகும்.

மிக குறைந்த விலை இ-பைக் அறிமுகம்... இதை ஓட்டுவதற்கு லைசென்ஸ், ஆர்சி தேவையில்லை... அட்டகாசமான ஸ்டைல்!

இந்த தீவிரத்தைத் தொடர்ந்து நாட்டில் மின் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் புதிது புதிதாக முளைக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், நாட்டில் கடந்த சில காலங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிறுவனமே ஆல்ஃபா வெக்டர். இந்த நிறுவனம், அதன் புத்தம் புது இ-சைக்கிள் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மிக குறைந்த விலை இ-பைக் அறிமுகம்... இதை ஓட்டுவதற்கு லைசென்ஸ், ஆர்சி தேவையில்லை... அட்டகாசமான ஸ்டைல்!

மெராக்கி பை நைன்டி ஒன் (Meraki by Ninety One) என்ற இ-மிதிவண்டியை ஆல்ஃபா வெக்டார் அறிமுகம் செய்திருக்கின்றது. இது, அந்த நிறுவனத்தின் முதல் இ-சைக்கிள் ஆகும். இதற்கு ரூ. 29,999 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிளை சாலைகளில் பயன்படுத்த ஓட்டுநர் உரிமம், ஆர்சி புத்தம் என எதுவும் தேவைப்படாது. இதுவே இந்த சைக்கிளின் மிக முக்கிய சிறப்பு வசதியாகும்.

மிக குறைந்த விலை இ-பைக் அறிமுகம்... இதை ஓட்டுவதற்கு லைசென்ஸ், ஆர்சி தேவையில்லை... அட்டகாசமான ஸ்டைல்!

இதுதவிர பல்வேறு சிறப்பு தொழில்நுட்பங்களையும் இந்த சைக்கிள் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், மிக முக்கியமானதாக இதன் பேட்டரி திறன் இருக்கின்றது. இந்த இ-சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 35 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீட்டராக உள்ளது.

மிக குறைந்த விலை இ-பைக் அறிமுகம்... இதை ஓட்டுவதற்கு லைசென்ஸ், ஆர்சி தேவையில்லை... அட்டகாசமான ஸ்டைல்!

இந்த சூப்பர் திறனை வழங்குவதற்காக ஐபி65 எனும் வாட்டர் ப்ரூஃப் திறன் கொண்ட பிஎல்டிசி மோட்டாரை ஆல்ஃபா வெக்டார் நிறுவனம் இந்த இ-சைக்கிளில் பயன்படுத்தியுள்ளது. இது 250 வாட் திறனுடையதாகும். இத்துடன், இந்த சைக்கிளில் 6.36ஏஎச் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே, ஒரு முழுமையான சார்ஜில் 35 கிமீ ரேஞ்ஜை வழங்குகின்றது.

மிக குறைந்த விலை இ-பைக் அறிமுகம்... இதை ஓட்டுவதற்கு லைசென்ஸ், ஆர்சி தேவையில்லை... அட்டகாசமான ஸ்டைல்!

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்களே போதுமானதாகும். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் குறிப்பிட்ட சில மின் வாகனங்களின் குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் 4 முதல் 6 மணி நேரங்கள் வரை இருக்கின்றது. இவற்றுடன் ஒப்பிடுகையில் மெராக்கி நைன்டி ஒன் இ-சைக்கிளின் சார்ஜ் வேகம் சற்று வேகமானதாக காட்சியளிக்கின்றது.

மிக குறைந்த விலை இ-பைக் அறிமுகம்... இதை ஓட்டுவதற்கு லைசென்ஸ், ஆர்சி தேவையில்லை... அட்டகாசமான ஸ்டைல்!

இத்துடன், இந்த இ-சைக்கிளில் தானியங்கி இ-பிரேக், கீ லாக் ஸ்விட்ச், சாவி இல்லாமல் ஆன் செய்யவே முடியாத வசதி என பல்வேறு சிறப்பு அம்சங்கள் பலவற்றை தயாரிப்பு நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இத்தகைய சிறப்பு வசதிகளை இந்த இ-சைக்கிள் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் தற்போது இந்தியர்களைக் கணிசமாக கவரத் தொடங்கியுள்ளது.

மிக குறைந்த விலை இ-பைக் அறிமுகம்... இதை ஓட்டுவதற்கு லைசென்ஸ், ஆர்சி தேவையில்லை... அட்டகாசமான ஸ்டைல்!

அதாவது, இந்த இ-சைக்கிள் அறிமுகமாவதற்கு முன்னரே 100 யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றிருப்பதாக ஆல்ஃபா வெக்டர் தெரிவித்துள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, புனே மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் புக்கிங் கிடைத்திருப்பதாக அது கூறுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 7, 2020, 10:29 [IST]
English summary
Homegrown Startup AlphaVector Launches Meraki By Ninety One e-Bike In India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+