சிபி4எக்ஸ் மாடலின் புதிய படங்களை வெளியிட்டது ஹோண்டா...!

ஹோண்டா சிபி4எக்ஸ் கான்செப்ட் மாடல் கடந்த ஆண்டில் ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த பைக்கின் தயாரிப்பு வெர்சனின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சிபி4எக்ஸ் மாடலின் புதிய படங்களை வெளியிட்டது ஹோண்டா...!

இந்த புகைப்படங்களின் மூலம் பார்க்கும்போது இதில் காட்டப்பட்டுள்ள பைக் கிட்டத்தட்ட கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலுடன் ஒத்து காணப்படுகிறது. மற்றப்படி சிபி4எக்ஸ் மாடலின் புதிய தலைமுறை வெர்சன் குறித்த எந்த தகவலையும் இந்த படங்கள் வெளிப்படுத்தவில்லை.

சிபி4எக்ஸ் மாடலின் புதிய படங்களை வெளியிட்டது ஹோண்டா...!

ஆனால் ஹோண்டா நிறுவனம் முழு- பைக் மாடலின் தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டு வருவதையும், இதனால் இதன் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் என்பதும் இந்த படங்களின் மூலம் தெளிவாகிறது.

சிபி4எக்ஸ் மாடலின் புதிய படங்களை வெளியிட்டது ஹோண்டா...!

டிசைன் அமைப்பை பொறுத்தவரையில் பைக் கான்செப்ட் மாடலை தான் ஒத்து காணப்படுகிறது. அளவில் பெரியதாக காட்சியளிக்கின்ற ஹோண்டா சிபி4எக்ஸ் முழுக்க முழுக்க அட்வென்ஜெர்-ஸ்டைல் மோட்டார்சைக்கிளாகும்.

சிபி4எக்ஸ் மாடலின் புதிய படங்களை வெளியிட்டது ஹோண்டா...!

ஒருவேளை படத்தில் காட்டப்பட்டுள்ள தோற்றத்தில் இதன் விற்பனை மாடல் உருவாக்கப்பட்டால் அன்றாட பயன்பாடு மற்றும் கரடுமுரடான மலைப்பாதை பயணங்களுக்கு என அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் ஏற்ற விதத்தில் இருக்கும்.

சிபி4எக்ஸ் மாடலின் புதிய படங்களை வெளியிட்டது ஹோண்டா...!

இதனால் ஹோண்டாவின் இந்த புதிய அட்வென்ஜெர் ரக பைக் மிக நேரடியாக கவாஸாகி வெர்ஸஸ் 650 மாடலுடன் போட்டியிடக்கூடும். இதன் மூலம் இந்த புதிய ஹோண்டா பைக் எத்தனை சிசி-ல் வரவுள்ளதை இந்நேரம் நீங்கள் யூகித்திருப்பீர்கள். ஆம் 650சிசி தான்.

சிபி4எக்ஸ் மாடலின் புதிய படங்களை வெளியிட்டது ஹோண்டா...!

ஹோண்டா நிறுவனம் சிபிஆர்650ஆர் மாடலுக்கு இணையான ஆற்றலில் இந்த புதிய பைக் இயங்க வேண்டும் என்பதற்காக 650சிசி, இன்லைன் என்ஜினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கணிசமான எண்ணிக்கையிலான பைக்குகளுடன் போட்டியிடும் வகையில் விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபி4எக்ஸ் மாடலின் புதிய படங்களை வெளியிட்டது ஹோண்டா...!

ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கின் விலை எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.70 லட்சமாக உள்ளது. இதனால் கிட்டத்தட்ட இதே விலையில் புதிய சிபி4எக்ஸ் மாடலின் விலையும் எதிர்பார்க்கலாம். மற்றப்படி இதன் அறிமுகம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 6, 2020, 23:28 [IST]
English summary
Honda CB4X Revealed In Patent Images
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+